விபத்தில் சிக்கிய “மாஸ்டர்” பட நடிகை மாளவிகா மோகனன் – இன்ஸ்டாவில் அவரே வெளியிட்ட பதிவு!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் பல வெற்றி படங்களில் நடித்த மாளவிகா மோகனன் படப்பிடிப்பு தளத்தில் விபத்தில் சிக்கியதாக புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.
மாளவிகா மோகன்:
தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் படங்களை நடித்து பிரபலமானவர் மாளவிகா மோகன். தமிழில் ரஜினிகாந்த் நடித்த பேட்ட மற்றும் விஜயின் மாஸ்டர் படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்திருக்கிறார். இவர் சொந்த ஊர் மும்பை. இவரது தந்தை பாலிவுட் திரைப்பட ஒளிப்பதிவாளர் ஆவார். தற்போது 7 படங்களில் நடித்துள்ள அவருக்கு அனைத்துமே வெற்றி படமாக மாறியது. படங்களில் நடித்ததை விட அவரது போட்டோஷூட்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர்.
ஆர்யனுடன் திருமணத்திற்கு பின் ‘செம்பருத்தி’ ஷபானாவின் புதிய மாற்றம் – ரசிகர்கள் வாழ்த்து!
இன்ஸ்டாவில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிடும் அவருக்கு, சினிமாவை தவிர்த்து பல இடங்களில் ரசிகர்கள் இருக்கின்றனர். தற்போது தனுஷ் நடிப்பில் மாறன் படத்தில் அவர் கதாநாயகியாக நடித்துள்ளார். மாளவிகாவிற்கு சமீபத்தில் விபத்து ஏற்பட்டதாக செய்தி ஒன்று வெளியானது. அது குறித்து அவர் இன்ஸ்டா பக்கத்தில் கூறுகையில், யாத்ரா என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறேன். படப்பிடிப்பின் போது விபத்து ஏற்பட்டது. அதனால் கையில் பல இடங்களில் அடிபட்டுள்ளது.
பிரபல பின்னணி பாடகி ஷ்ரேயா கோஷலின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ரிப்போர்ட்!
அதை இன்ஸ்டாவில் புகைப்படத்துடன் வெளியிட்டு இருக்கிறார். மேலும் விரைவில் குணமடைந்து அவர் படங்களில் நடிப்பேன் என தெரிவித்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் அவர் விரைவில் குணமடைய வேண்டும் என பிராத்தனை செய்து வருகின்றனர். அவர் நலமுடன் குணமடைந்ததும் மீண்டும் ஆக்சன் படங்களில் நடிப்பேன் எனவும் அவர் தெரிவித்து இருக்கிறார். ஆனால் இந்த விபத்தால் எந்த படப்பிடிப்பும் தடைபடாது. அதே போல போட்டோஷூட்களும் வழக்கம் போல நடைபெறும் என அவர் தெரிவித்துள்ளார்.