விஜய் டிவி சூப்பர் சிங்கர் பிரபலம் மாளவிகா சுந்தருக்கு விரைவில் திருமணம் – ரசிகர்கள் வாழ்த்து!

0
விஜய் டிவி சூப்பர் சிங்கர் பிரபலம் மாளவிகா சுந்தருக்கு விரைவில் திருமணம் - ரசிகர்கள் வாழ்த்து!
விஜய் டிவி சூப்பர் சிங்கர் பிரபலம் மாளவிகா சுந்தருக்கு விரைவில் திருமணம் - ரசிகர்கள் வாழ்த்து!
விஜய் டிவி சூப்பர் சிங்கர் பிரபலம் மாளவிகா சுந்தருக்கு விரைவில் திருமணம் – ரசிகர்கள் வாழ்த்து!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான பாடகி மாளவிகா சுந்தருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை சமூக வலைதளங்களில் பதிவிட்ட அவருக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

சிங்கர் மாளவிகா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் ரியாலிட்டி ஷோவான ‘சூப்பர் சிங்கர்’ ல் கலந்து கொண்டு தற்போது சினிமாவின் பின்னணி பாடகியாக ஜொலித்து வருபவர் பாடகி மாளவிகா சுந்தர். அதாவது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் ஆரம்பகால கட்டங்களில் கலந்து கொண்ட மாளவிகா ஒரு வீணை வித்துவானும் கூட. கர்நாடகா இசையில் முறையாக பயிற்சி பெற்றிருக்கும் இவர் தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் சுமார் 200க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.

விஜய் டிவி மாகாபாவிற்கு கையில் திடீர் எலும்பு முறிவு – நலம் விசாரிக்கும் பிரபலங்கள்!

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி முடிந்த கையோடு படிப்பில் ஆர்வம் செலுத்தி வந்த மாளவிகா தனது முதுகலை படிப்பை வெளிநாட்டில் படித்து முடித்து சமீபத்தில் இந்தியா திரும்பியிருந்தார். அந்த வகையில் ‘சூப்பர் சிங்கர் சாம்பியன் ஆப் சாம்பியன்ஸ்’ நிகழ்ச்சி மூலம் மாளவிகாவை மறுபடியும் மக்கள் மத்தியில் அறிமுகம் செய்தது விஜய் டிவி. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாளவிகா, அதில் வெற்றியும் பெற்றிருந்தார். அவ்வப்போது மாடலிங்கில் ஈடுபட்டு வரும் மாளவிகா வித்தியாசமான உடை அலங்காரத்துடன் புகைப்படங்களை எடுத்து அதனை சமூக வலைதள பக்கத்தில் பதிவிடுவது வழக்கமாக வைத்துள்ளார்.

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” முதல் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” வரை – ப்ரோமோக்களில் டாப் கமெண்ட்ஸ்!

அந்த வகையில் தற்போது 30 வயதை கடந்திருக்கும் மாளவிகாவுக்கு, திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட அவருக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதனுடன் சமீபத்தில், ‘சூப்பர் சிங்கர் சீசன் 6’ல் கலந்து கொண்ட மற்றொரு பிரபலம், ‘டைமண்ட்’ மாளவிகா வைத்யாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!