கொரோனவைக் கொல்லும் புறஊதாக்கதிர் டார்ச் லைட் – மஹாராஷ்டிரா அரசின் மாஸ்டர் பிளான்..!

0
கொரோனவைக் கொல்லும் புறஊதாக்கதிர் டார்ச் லைட்
கொரோனவைக் கொல்லும் புறஊதாக்கதிர் டார்ச் லைட்

கொரோனவைக் கொல்லும் புறஊதாக்கதிர் டார்ச் லைட் – மஹாராஷ்டிரா அரசின் மாஸ்டர் பிளான்..!

கொரோனவை தடுக்க தடுப்பு மருந்துகள் ஏதும் கண்டுபிடிக்காத நிலையில் தற்போது கொரோனா வைரஸைக் கொல்லக் கூடியது என்று சொல்லப்படும், புற ஊதாக்கதிர்களைக் கொண்ட கிருமிநாசினி எந்திரங்களை மாநில அரசு பிரபலப்படுத்தத் தொடங்கியுள்ளது.

கொரோனா தடுப்பு எந்திரம்

அவுரங்காபாத்தைச் சேர்ந்த மாணவர்களான அனிகெட் மற்றும் பூணம் ஆகியோர் தங்களது ஆய்வின் வழிகாட்டி ஆர்.ஜி.சொன்காவடேயுடன் இணைந்து கண்டுபிடித்திருக்கும் இந்தக்கருவி பார்ப்பதற்கு டார்ச் லைட் போல இருக்கும்.செல்போன்கள், கம்ப்யூட்டர் கீபோர்டுகள், கதவின் கைப்பிடிகள் மற்றும் காய்களையும் கூட கிருமிநாசம் செய்வதற்கு இந்த டார்ச் லைட்டைப் பயன்படுத்தலாம் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் உதய் சமந்த் தெரிவித்துள்ளார்.

ஊரடங்கால் பரிதவிக்கும் லாரி ஓட்டுனர்கள் – கோரிக்கை நிறைவேறுமா.?

16-33 வாட்ஸ் திறனுள்ள ஒளியின் மூலம் வைரஸைக் கொல்ல இந்த டார்ச்சைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்..இந்த டார்ச் லைட்களைத் தயாரிக்கும் பொறுப்பை மும்பையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று ஏற்றுக்கொண்டுள்ளது. இதுகுறித்து ஆய்வு வழிகாட்டி ஆர்.ஜி.எஸ் தெரிவித்ததாவது, “புற ஊதாக்கதிர்களால் கிருமிநீக்கம் செய்யப்பட்ட காய்கறிகள் உண்பதற்கு உகந்தவைதான் என்பது நிரூபணமாகியுள்ளது. நாங்கள் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு விட்டோம். புற ஊதாக்கதிர்கள் உணவுப் பொருட்களுக்குள் கலக்காது” என்றும் வலியுறுத்தினார்.

ஆனால், புற ஊதாக்கதிர்கள் ஓசோன் படலத்தை பாதிக்கும் தீய கதிர்கள் என்ற எண்னமே மக்கள் மத்தியில் இப்போது வரையிலும் பரவலாக்கப்பட்டிருக்கிறது. இதனால், கிருமிகளை அழிக்கும் பண்பும் அதற்கு இருப்பது கவனிக்கப்படவில்லை.ஆனாலும், தரவாரியாக பிரிக்கப்பட்டுள்ள புறஊதாக்கதிர்களின் மூன்று பிரிவுகளில் சி பிரிவு பழங்களின் மேற்புறத்தில் இருக்கும் புறக்கிருமிகளை அழிக்கப் பயன்படுகிறது.ஏ மற்றும் பி ஆகிய மற்ற இரண்டும் மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு தீங்கானவைதான்.

காவல்துறையுடன் இணைந்து பணியாற்ற முன்னாள் ராணுவத்தினருக்கு அழைப்பு

இந்நிலையில், புற ஊதாக்கதிர்களுக்கு இருக்கும் கிருமிநாசப் பண்பைப் பயன்படுத்தி இந்த டார்ச் லைட்டை தயாரிக்க முடிவு செய்துள்ளனர் இரண்டு மாணவர்கள். இந்த மாணவர்கள் இருவரில் ஒருவர் தீனதயாள் உபாத்யாயா கௌசாலா கேந்திராவில் முதலாமாண்டு படிக்கும் மாணவர். மற்றொருவர் பூனேவில் உள்ள ஆபாசாஹேப் கர்வரே கல்லூரியில் இரண்டாமாண்டு நுண்ணுயிரியியல் படித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!