“தமிழும் சரஸ்வதியும்” & “பாண்டியன் ஸ்டோர்ஸ்” மகா சங்கமம் கதைக்களம் – ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

0
"தமிழும் சரஸ்வதியும்" & "பாண்டியன் ஸ்டோர்ஸ்" மகா சங்கமம் கதைக்களம் - ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
“தமிழும் சரஸ்வதியும்” & “பாண்டியன் ஸ்டோர்ஸ்” மகா சங்கமம் கதைக்களம் – ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

விஜய் டிவி “தமிழும் சரஸ்வதியும்” சீரியல் மற்றும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் இரண்டும் இணைந்து மகா சங்கமம் விரைவில் நடைபெற இருக்கிறது.

தமிழும் சரஸ்வதியும்:

விஜய் டிவி சீரியல்களுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உண்டு. சீரியலில் நடிக்கும் நடிகர் நடிகைகள் அனைவரும் மக்களிடம் புகழின் உச்சியில் இருக்கின்றனர். விஜய் டிவியில் புதிதாக தொடங்கப்பட்ட ஒரு சீரியல் தான் தமிழும் சரஸ்வதியும் சீரியல். அதில் தற்போது கார்த்திக் மற்றும் வசு திருமணம் நடைபெற இருக்கிறது. திருமண நிகழ்ச்சியில் கோதையை அவமானப்படுத்த சந்திரலேகா திட்டமிட்டு பழிவாங்குகிறார். ஆனால் அதை எல்லாம் முறியடித்து கோதை சந்தோசமாக இருக்கிறார்.

‘பாரதி கண்ணம்மா’ சீரியல் அஞ்சலிக்கு திடீர் திருமணம்? போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!

மேலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனத்தின் குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா நடைபெற இருக்கிறது. அதில் கண்ணனை அழைக்காமல் இருக்கின்றனர். கண்ணன் வாசலில் நின்று காத்துக் கொண்டிருக்கிறார். இப்படியான இருவேறு கதை கொண்ட சீரியல்கள் தற்போது மாக சங்கமமாக இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே பாக்கியலட்சுமி சீரியல் மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இரண்டும் இணைந்து மகா சங்கமம் நடத்தப்பட்டது.

பாரதி கண்ணம்மாவில் இருந்து விலகும் வெண்பா? வினுஷா மீது எகிறும் எதிர்பார்ப்பு! ரசிகர்கள் ஷாக்!

அதே போல தற்போது தமிழும் சரஸ்வதியும் சீரியல் மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் மகா சங்கமம் நடைபெற இருக்கிறது. அதில் எந்த மாதிரியான கதை அமைக்கப்படும் என ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர். மேலும் அதில் பாண்டியன் ஸ்டோர்ஸ் கதாபாத்திரங்கள் அனைவரும் கலந்து கொள்ள இருக்கிறார்களா அல்லது ஒரு சிலர் மட்டும் கலந்து கொள்ள இருக்கின்றனரா என கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து அதிகாரபூர்வ ப்ரோமோ வரும் வரை காத்திருக்கலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!