LPG சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ.25 அதிகரிப்பு – பொதுமக்கள் அதிர்ச்சி!

0
LPG சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ.25 அதிகரிப்பு - பொதுமக்கள் அதிர்ச்சி!
LPG சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ.25 அதிகரிப்பு - பொதுமக்கள் அதிர்ச்சி!
LPG சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ.25 அதிகரிப்பு – பொதுமக்கள் அதிர்ச்சி!

ஜூலை மாதத்தின் முதல் நாளான இன்று சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலைக்கு ஏற்ப தற்போது வீடுகளில் சமையலுக்கு பயன்படுத்தும் LPG கேஸ் சிலிண்டரின் விலை ரூ.25 உயர்ந்துள்ளது.

கேஸ் சிலிண்டர்:

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப வீடுகளில் பயன்படுத்தப்படும் மானிய சமையல் கேஸ் சிலிண்டரின் விலை மற்றும் விமான எரிபொருள் விலை 15 நாட்களுக்கு ஒரு முறை மாறுபடும். அதன்படி கடந்த 2020 டிசம்பர் மாதம், ஒரே மாதத்தில் கேஸ் சிலிண்டர் விலை இரு முறை உயர்ந்தது. அதேபோல் கடந்த 2021 பிப்ரவரி மாதம் கேஸ் சிலிண்டரின் விலை ரூ.25 அதிகரித்தது.

ஜூலை 10 வரை 7 மாவட்டங்களில் முழு ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!

இதன் காரணமாக தமிழகத்தில் சிலிண்டர் விலை ரூ.810ல் இருந்து ரூ.835 ஆக அதிகரித்து விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனை தொடர்ந்து கடந்த ஏப்ரல், மே மற்றும் ஜூன் ஆகிய மாதங்களில் சிலிண்டர் விலை ரூ.825 ஆக விற்பனை செய்யப்பட்டு வந்தது. கடந்த மூன்று மாத காலமாக சமையல் கேஸ் சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது, இந்நிலையில் தற்போது புதிய மாதம் ஜூலை பிறந்துள்ளது.

TN Job “FB  Group” Join Now

இதன் காரணமாக சமையல் கேஸ் சிலிண்டர் விலையில் பெரிய மாற்றம் ஏற்படும் என்று கூறப்பட்டு வந்தது. காரணம் தற்போது நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நடப்பு மாதத்திற்கான கேஸ் சிலிண்டர் விலை திருத்தப்பட்டு ரூ.25 அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி சிலிண்டரின் விலை ரூ.25 உயர்ந்து ரூ.850 ஆக விற்பனை செய்யப்படுகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் தற்போது அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!