மத்திய அரசின் PM KISAN திட்டத்தில் ரூ.4,000 பெற இன்றே கடைசி நாள் – முழு விவரம் இதோ!

0
மத்திய அரசின் PM KISAN திட்டத்தில் ரூ.4,000 பெற இன்றே கடைசி நாள் - முழு விவரம் இதோ!
மத்திய அரசின் PM KISAN திட்டத்தில் ரூ.4,000 பெற இன்றே கடைசி நாள் - முழு விவரம் இதோ!
மத்திய அரசின் PM KISAN திட்டத்தில் ரூ.4,000 பெற இன்றே கடைசி நாள் – முழு விவரம் இதோ!

நாடு முழுவதும் உள்ள தகுதியுடைய விவசாயிகளுக்கு மத்திய அரசு வழங்கி வரும் நிதியுதவி திட்டத்தில் இணைந்து ரூ.4,000 வரை கூடுதலாக பெற்று பயனடைய இன்று (செப்டம்பர் 30) கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நிதியுதவி திட்டம்

இந்தியா முழுவதும் இருக்கும் தகுதியுடைய விவசாயிகளுக்கு மத்திய அரசு வழங்கி வரும் நிதியுதவி திட்டமான ‘பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா’ன் கீழ் ஒவ்வொரு ஆண்டும் ரூ.6,000 அளிக்கப்பட்டு வருகிறது. இப்போது இந்த திட்டத்தின் கீழ் சேராமல் இருந்து வரும் தகுதியுடைய விவசாயிகளுக்காக ஒரு கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதாவது அரசின் உதவியை பெற தகுதியுடைய விவசாயிகள் இந்த மாத இறுதிக்குள் அதாவது இன்று (செப்.30) ‘பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா’ இணைந்தால் அவர்களுக்கு ரூ.4000 கூடுதல் நிதி வழங்கப்பட இருக்கிறது.

தமிழக அரசு சார்பில் ‘வீடு தேடி பள்ளிகள்’ திட்டம் – கல்வித்துறையில் அடுத்த அதிரடி!

வழக்கமாக இந்த திட்டத்தின் கீழ் பயனடையும் விவசாயிகளுக்கு ஒவ்வொரு காலாண்டும் ரூ.2000 நிதியுதவி அவர்களது வங்கி கணக்குக்கு செலுத்தப்படும். அந்த வகையில் இன்று (செப்டம்பர் 30) கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தில் இணையும் விவசாயிகளுக்கு அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்திற்குள் ரூ.2,000 நிதி அளிக்கப்படும் எனவும், மீதமுள்ள ரூ.2,000 நிதியுதவி அடுத்த தவணையாக வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் செலுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஒவ்வொரு காலாண்டுக்கும் செலுத்தப்படும் ரூ.2000 தொகையை 2 முறை பெற்றுக்கொள்வதற்கு வாய்ப்புள்ளது.

அதனால் தகுதியுடைய விவசாயிகள் முதலில் PM கிசான் சம்மன் நிதி யோஜனா இணையதளத்தில் தங்களை பதிவு செய்துகொள்ள வேண்டும். இது தவிர PM KISAN திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்படும் தொகையை 2 மடங்காக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இதன் மூலம் ஒரு விவசாயி ஆண்டுக்கு ரூ.12,000 வரை பெற்றுக்கொள்ள முடியும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இதற்கிடையில் மத்திய அரசின் PM KISAN திட்டத்தின் கீழ் இதுவரை சுமார் 12.14 கோடி விவசாயிகள் பயனடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு கிடையாது? சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு!

இப்போது பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தில் இணைய கீழ்காணும் வழிமுறைகளை பின்பற்ற வேண்டியது அவசியமாகும். அதற்காக,

  • முதலில் https://pmkisan.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளத்துக்குள் செல்லவும்.
  • இப்போது முகப்பு பக்கத்தின் வலதுபுறத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் Farmers Corner என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும்.
  • தொடர்ந்து New Farmer Registration என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
  • இப்போது ஆதார் எண்ணை உள்ளிடவும்.
  • பிறகு மாநிலத்தை தேர்வு செய்யவும்.
  • கேப்ட்சா குறியீட்டை பதிவு செய்ய வேண்டும்.
  • அடுத்த படிவத்தில் விவசாயியின் தனிப்பட்ட தகவல்களை நிரப்ப வேண்டும்.
  • தொடர்ந்து வங்கி கணக்கு விவரங்கள் மற்றும் நிலம் தொடர்பான தகவல்களை கொடுக்கவும்.
  • நிரப்பப்பட்ட படிவத்தை submit செய்தால் செயல்முறை முடிந்துவிடும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!