பிரபல தமிழ் எழுத்தாளர் கோணங்கிக்கு கி.ரா.விருது – ரூ.5 லட்சம் ரொக்கப்பரிசு அறிவிப்பு!

0
பிரபல தமிழ் எழுத்தாளர் கோணங்கிக்கு கி.ரா.விருது - ரூ.5 லட்சம் ரொக்கப்பரிசு அறிவிப்பு!
பிரபல தமிழ் எழுத்தாளர் கோணங்கிக்கு கி.ரா.விருது - ரூ.5 லட்சம் ரொக்கப்பரிசு அறிவிப்பு!
பிரபல தமிழ் எழுத்தாளர் கோணங்கிக்கு கி.ரா.விருது – ரூ.5 லட்சம் ரொக்கப்பரிசு அறிவிப்பு!

தமிழ் இலக்கிய படைப்புகளில் சிறந்த எழுத்துக்களுக்கு சொந்தக்காரரான பிரபல எழுத்தாளர் கோணங்கி அவர்களுக்கு விஜயா பதிப்பக வாசகர் வட்டத்தின் சார்பில் எழுத்தாளருக்கான கி.ரா.விருதுடன், ரூ.5 லட்சம் ரொக்கப்பரிசும் வழங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எழுத்தாளருக்கு விருது

பொதுவாக ஒவ்வொரு மொழியிலும் உள்ள தொன்மை, புலமை, சிறப்பு போன்றவற்றை எடுத்துரைக்கும் ஒரு சிறப்பு பண்பு எழுத்துகளுக்கே உரித்தானது ஆகும். இந்த எழுத்துக்களை எல்லாம் ஒருங்கிணைக்கும் இலக்கியங்கள் தான் அந்த மொழிக்கே உரிய அடையாளமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் தமிழ் எழுத்துக்களுக்கு பெருமை சேர்ந்த இலக்கியவாதிகள் பலருக்கு தமிழக அரசும் அவ்வப்போது விருதுகளை வழங்கி பாராட்டி வருகிறது.

பொறியியல் மேற் படிப்புகளில் சேர்வதற்கு கேட் தேர்வு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த பிரபல இலக்கிய படைப்பாளர் கோணங்கி அவர்களுக்கு இந்த ஆண்டுக்கான கி.ரா.விருது வழங்கப்பட இருப்பதாக அறிவிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது விஜயா பதிப்பக வாசகர் வட்டத்தின் சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் பிரபல கரிசல் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் விருது சிறந்த படைப்பாளருக்காக கோணங்கிக்கு அளிக்கப்பட இருக்கிறது. மேலும் ரூ.5 லட்சம் வரை ரொக்கப்பரிசும் அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விருது செப்டம்பர் மாதம் 19 ஆம் தேதி ஜூம் செயலி மூலம் கொடுக்கப்பட இருக்கிறது.

TN Job “FB  Group” Join Now

கோணங்கி 1958 ஆம் ஆண்டு நென்மேனி எனும் கிராமத்தில் பிறந்தவர். புதுமைப்பித்தன், மௌனி, நகுலன், ந.முத்துச்சாமி, கி.ராஜநாராயணன் போன்ற தமிழ் இலக்கியவாதிகளால் கவரப்பட்ட இவர் கடந்த 1980 ஆண்டில் இருந்து தனது எழுத்தாளர் பயணத்தை துவங்கினார். அந்த வகையில் மதினிமார்கள் கதை, கொல்லனின் ஆறு பெண் மக்கள், பொம்மைகள் உடைபடும் நகரம், பாழி, நீர்வளரி, த உள்ளிட்ட படைப்புகள் இவரது பெயர் சொல்லும். இதில் சில நாவல்களும், சில சிறுகதை தொகுப்புகளும் அடங்கும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!