தமிழ், சரஸ்வதி திருமணத்தில் நடைபெறும் சிக்கல், அதிர்ச்சியில் கோதை – ஸ்பெஷல் எபிசோடு! ஷாக் ப்ரோமோ ரிலீஸ்!

0
தமிழ், சரஸ்வதி திருமணத்தில் நடைபெறும் சிக்கல், அதிர்ச்சியில் கோதை - ஸ்பெஷல் எபிசோடு! ஷாக் ப்ரோமோ ரிலீஸ்!
தமிழ், சரஸ்வதி திருமணத்தில் நடைபெறும் சிக்கல், அதிர்ச்சியில் கோதை - ஸ்பெஷல் எபிசோடு! ஷாக் ப்ரோமோ ரிலீஸ்!
தமிழ், சரஸ்வதி திருமணத்தில் நடைபெறும் சிக்கல், அதிர்ச்சியில் கோதை – ஸ்பெஷல் எபிசோடு! ஷாக் ப்ரோமோ ரிலீஸ்!

விஜய் டிவி ‘தமிழும் சரஸ்வதியும்’ சீரியலில் தமிழ் மற்றும் சரஸ்வதியின் திருமண வைபோகம் இரண்டரை மணிநேர சிறப்பு எபிசோடாக வெளியாக இருக்கிறது. இது தொடர்பான ப்ரோமோ ஒன்று வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழும் சரஸ்வதியும்

ஒவ்வொரு நாளும் புத்தம் புதிய கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வரும் ‘தமிழும் சரஸ்வதியும்’ சீரியலில் தற்போது திருமணம் தொடர்பான கதைக்களம் வெளியாகி கொண்டிருக்கிறது. அந்த வகையில் சரஸ்வதியின் படிப்பை மறைத்து தமிழுடன் திருமணம் செய்து வைக்க மின்னல், நமச்சிவாயம் உட்பட சரஸ்வதியின் குடும்பத்தார் அனைவரும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இதற்கிடையில் சந்திரலேகா தமிழ், சரஸ்வதியின் திருமணத்தை நிறுத்த தேவையான அனைத்து வேலைகளையும் செய்து கொண்டிருக்கிறார்.

இப்போது சரஸ்வதியின் படிப்பு விஷயம் கோதைக்கு தெரியாமல் தமிழ் மற்றும் சரஸ்வதியின் திருமணம் நடைபெறுமா என்று திரைக்கதை ஸ்வாரசியமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் ‘தமிழும் சரஸ்வதியும்’ சீரியலில் தமிழ் மற்றும் சரஸ்வதியின் திருமண வைபோகம் சிறப்பு எபிசோடாக ஒளிபரப்பாக இருப்பதாக எடிட் செய்யப்பட்ட ப்ரோமோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.

IND VS WI: மீண்டும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு திரும்பிய கீமர் ரோச் – ரசிகர்கள் உற்சாகம்!

அந்த வகையில் திருமணத்தின் போது சரஸ்வதி கடத்தப்படுவதாகவும், அவரை தமிழ் எப்படி மீட்கப் போகிறார் என்றும் சில காட்சிகள் ‘தமிழும் சரஸ்வதியும்’ சீரியல் ப்ரோமோவில் இடம்பிடித்துள்ளது. மேலும் இந்த ஸ்பெஷல் எபிசோடானது விஜய் டிவியில் வரும் ஞாயிற்று கிழமையன்று இரண்டரை மணி நேரம் ஒளிபரப்பாக இருப்பதாகவும் அந்த ப்ரோமோவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது எடிட் செய்யப்பட்ட ப்ரோமோவாக இருந்தாலும் அது பார்வையாளர்களின் வரவேற்பை பெற்று வருகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!