சன் டிவி ‘கயல்’ சீரியலில் நடிக்கும் நடிகை சைத்ரா யார் தெரியுமா? ரசிகர்கள் உற்சாகம்!

0
சன் டிவி 'கயல்' சீரியலில் நடிக்கும் நடிகை சைத்ரா யார் தெரியுமா? ரசிகர்கள் உற்சாகம்!
சன் டிவி ‘கயல்’ சீரியலில் நடிக்கும் நடிகை சைத்ரா யார் தெரியுமா? ரசிகர்கள் உற்சாகம்!

சன் டிவியில் தற்போது ‘கயல்’ சீரியலில் நடித்து வரும் கதாநாயகி சைத்ரா ரெட்டி பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனை அறிந்த ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

‘கயல்’ நடிகை:

தற்போது சன் டிவியில் சமீபத்தில் தொடங்கப்பட்ட சீரியல் தான் கயல். இதில் பல முன்னணி நடிகர், நடிகைகள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். கதையின் நாயகனாக நடிகர் சஞ்சீவ் உள்ளார். கதாநாயகியாக சைத்ரா ரெட்டி உள்ளார். இவர்கள் இருவரின் ஜோடிக்கு தற்போது அதிக ரசிகர்கள் சேர்ந்துள்ளனர். மேலும், கதையும் மிகவும் விறுவிறுப்பாக உள்ளதால் தொடங்கிய சிறிது நாட்களிலேயே ரேட்டிங்கில் நம்பர் 1 இடத்தை பிடித்தது. இந்த பதிவில் நடிகை சைத்ரா ரெட்டி பற்றி அறிந்து கொள்வோம்.

“பாரதி கண்ணம்மா” சீரியலில் அஞ்சலியுடன் மீண்டும் இணைந்த அகிலன் – வெளியான வீடியோ!

சைத்ரா ஆந்திர மாநிலத்தின் அமராவதியில் ஜூலை மாதம் 1993ம் ஆண்டு பிறந்துள்ளார். இவரது அப்பா பெயர் சந்திரா ரெட்டி. இவரது அக்கா ஸ்ரீலதா, இவரும் மீடியாவில் தான் பணியாற்றி வருகிறார். சைத்ரா முதன் முதலில் கன்னடா மொழியில் வந்த சீரியலில் தான் அறிமுகம் ஆகியுள்ளார். விஜய் டிவியில் வந்த ‘கல்யாணம் முதல் காதல் வரை’ சீரியலின் ஒரிஜினல் வெர்சன் தான் அந்த சீரியல். அதன் பிறகு தமிழில் அதே சீரியலில் அறிமுகம் ஆனார். மேலும் ஜீ தமிழில் யாரடி நீ மோகினி சீரியலில் வில்லியாக நடித்தார்.

ஜோடியாக கேம் ஷோவில் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” விஜே தீபிகா & சரவண விக்ரம் – வைரலாகும் வீடியோ!

வில்லியாக நடித்தாலும், இந்த வேடம் சைத்ராவிற்கு அதிக புகழை வாங்கி தந்தது. இவருக்கு நெருங்கிய தோழிகளாக நக்ஷத்ரா, ஸ்ரீநிதி, ஷபானா, ரேஷ்மா உள்ளனர். இவர்கள் அனைவரும் சேர்ந்து அடிக்கடி பல போட்டோக்களை வெளியிட்டு வருகின்றனர். இவை அனைத்தும் நல்ல வரவேற்பை பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. சைத்ரா நடிகர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகை ஆவார். இதனால் இவரை பார்க்க பல வருடங்களாக காத்திருந்து காலா படத்தின் ஷூட்டிங்கின் போது நேரடியாக பார்த்தார். சைத்ரா இது போல் பல வெற்றி பெறும் ப்ராஜெக்ட்களில் நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!