ஆதார் – பான் இணைப்பிற்கு ஜூன் 30 கடைசி நாள் – மத்திய அரசு எச்சரிக்கை!

0
ஆதார் - பான் இணைப்பிற்கு ஜூன் 30 கடைசி நாள் - மத்திய அரசு எச்சரிக்கை!
ஆதார் - பான் இணைப்பிற்கு ஜூன் 30 கடைசி நாள் - மத்திய அரசு எச்சரிக்கை!
ஆதார் – பான் இணைப்பிற்கு ஜூன் 30 கடைசி நாள் – மத்திய அரசு எச்சரிக்கை!

மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பின் படி, ஆதார் மற்றும் பான் கார்டுகளை இணைக்க ஜூன் 30 கடைசி தேதி ஆகும். அவ்வாறு இணைக்காவிட்டால் பொருளாதார ரீதியாக பெரிதும் பாதிப்பு ஏற்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆதார் – பான் இணைப்பு:

ஆதார் – பான் இணைப்பு காலக்கெடு மார்ச் 31 ஆம் தேதி வரை வழங்கப்பட்ட நிலையில் கொரோனா பரவல் காரணமாக அந்த அறிவிப்பு ஜூன் 30 வரை நீடிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு இணைக்கா விட்டால் பல சேவைகள் உங்களுக்கு வழங்கப்பட மாட்டாது. இதனை தவிர்க்க 12 இலக்க ஆதார் எண்ணை உங்கள் பான் அட்டையுடன் இணைக்க வேண்டும்.

கொரோனா பரவல் எதிரொலியாக 4 வாரங்கள் வரை ஊரடங்கு நீட்டிப்பு – இங்கிலாந்து அரசு அறிவிப்பு!

மத்திய நேரடி வரி வாரியம் (சிபிடிடி) அறிவித்த விதி 114 ஏஏஏ படி, கடைசி தேதிக்கு பின்னரும் ஆதார் பான் கார்டுடன் இணைக்கப்படவில்லை என்றால், நபரின் ஆதார் அட்டை உடனடியாக நீக்கப்படும். இதனால் பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்பு ஏற்படும். பான் உடன் ஆதார் இணைக்காதது பான் கார்டு இல்லாததற்கு சமமாகும். பான் மூலமாக மட்டுமே வங்கி சார்ந்த அனைத்து பணபரிவர்த்தனைகளும் வருமான வரித்துறையுடன் இணைக்கப்படுகிறது.

TN Job “FB  Group” Join Now

வங்கி கணக்குகள், வங்கி பரிவர்த்தனைகள், மியூச்சுவல் ஃபண்ட் பரிவர்த்தனைகள், பங்குச் சந்தை முதலீடுகள் போன்றவற்றுக்கு பான் கார்டு தேவைப்படுகிறது. அத்தகைய முக்கியமான பான் அட்டை, ஆதார் அட்டையுடன் இணைக்கவிட்டால் செயலிழக்க நேரிடும் என எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஜூன் 30 ஆம் தேதிக்குள் கட்டாயம் பான்-ஆதார் இணைத்து கொள்ள வேண்டும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!