நடப்பு நிகழ்வுகள் ஜூன் 2 மற்றும் 3

0

நடப்பு நிகழ்வுகள் ஜூன் 2 மற்றும் 3

ஒருவரி நடப்பு நிகழ்வுகளுக்கு – கிளிக் செய்யவும்

ஜூன் நடப்பு நிகழ்வுகள் வினா விடை – கிளிக் செய்யவும்

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு – கிளிக் செய்யவும்

முக்கியமான நாட்கள்

ஜூன் 2 – தெலுங்கானா மாநிலம் உருவான நாள்

ஜூன் 3 – உலக சைக்கிள் நாள்

  • ஜூன் 3, 2018 அன்று முதல் அதிகாரப்பூர்வ உலக சைக்கிள் தினம் கொண்டாடப்படுகிறது.12 ஏப்ரல் 2018 அன்று ஐக்கிய நாடுகள் சைக்கிள் தினமாக அங்கீகரிக்கப்பட்டது.

தேசிய செய்திகள்

மகாராஷ்டிரம்

மும்பை ஃபின்டெக் திருவிழா

  • மகாராஷ்டிரா, அர்ப்பணிப்பு நிதியுதவி கொள்கையை கொண்டிருக்கும் முதல் மாநிலம், தகவல் தொழில்நுட்ப துறையில் அர்ப்பணிக்கப்பட்ட ‘பின்டெக் ஆஃபீசர் ‘ பதவியை அமைக்க திட்டமிட்டுள்ளது என்று அம்மாநில முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னவிஸ் கூறினார்.

அரியானா

ஹரியானாவில் ரூபாய் 1 க்கு பெண் மாணவர்கள் சானிட்டரி நாப்கின்ஸை பெறுவார்கள்

  • ஹரியானாவில் உள்ள அரசு பள்ளிகள் மாணவிகளுக்கு ஆகஸ்ட் மாதத்திலிருந்து ரூபாய் 1 க்கு சானிட்டரி நாப்கின்ஸை வழங்கவுள்ளது.

உத்தரப்பிரதேசம்

நினைவுச்சின்னத்திற்கு அருகே பிளாஸ்டிக் மாசுபாட்டை எதிர்த்து ‘தாஜ் மஹால் டெக்லரேஷன் ‘

  • உலக சுற்றுச்சூழல் தினம் ஜூன் 5 ம் முன்னதாக தாஜ் மஹால் சுற்றுப்பகுதிகளை 500 மீட்டர் ஆழத்தில், குப்பை மற்றும் பாலிதீன் பொருட்களின் இருப்பைக் குறைத்து தாஜ் மஹால் சுற்றுப்பகுதிகளை தூய்மையாக்குவதற்கான ஒரு உறுதிமொழி.

குஜராத்

குழந்தைகளுக்கு  ஆம்புலன்ஸ் சேவை திட்டம்

  • சுகாதார மையங்களில் மருத்துவ அவசர வசதி இல்லாததால் பிறந்த குழந்தைகளின் இறப்புகளை தடுக்க, குஜராத் அரசாங்கம் சிறப்பான மருத்துவமனைளுக்கு  குழந்தைகளை  மாற்றுவதற்கு ஒரு பிரத்யேக ஆம்புலன்ஸ் சேவையை ஆரம்பிக்க முடிவு செய்துள்ளது.

சர்வதேச செய்திகள்

சிங்கப்பூரில் பூவிற்கு பிரதமர்  நரேந்திர மோடியின் பெயர்

  • பிரதமர் நரேந்திர மோடி சிங்கப்பூர் தேசிய ஆர்க்கிட் கார்டனுக்கு வருகை தந்தை நினைவு கூரும் வண்ணமாக அவரது பெயரை டென்ட்ரோபியம் நரேந்திர மோடி என்று சிங்கப்பூர் அரசு ஒரு பூவிற்கு சூட்டியுள்ளது .

அறிவியல் செய்திகள்

சீனா புதிய புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியுள்ளது

  • லாங் மார்ச் – 2D ராக்கெட் மூலம்  புதிய புவி கண்காணிப்பு (Gaofen-6) செயற்கைக்கோளை  வெற்றிகரமாக சீனா விண்ணில் செலுத்தியுள்ளது . இது விவசாய வளங்கள் ஆராய்ச்சி மற்றும் பேரழிவு கண்காணிப்புகளில் முக்கியமாக பயன்படுத்தப்படுகிறது.

ஹீலியோஸ்பியரில் காஸ்மிக் கதிர்களைப் படிக்க நாசாவின் IMAP

  • ஹீலியோஸ்பியரில் உள்ள காஸ்மிக் கதிர்கள் பற்றி மேலும் அறிய ஒரு புதிய பணியின் துவக்கத்திற்காக நாசா 2024 ஐ இலக்காகக் கொண்டிருக்கிறது. இது ஒரு வகையான சூரிய மண்டலத்தை சுற்றியுள்ள மற்றும் பாதுகாக்கும் காந்த குமிழியாகும்.

வணிக & பொருளாதாரம்

PhonePe 100 மில்லியன் வாடிக்கையாளர்களை தாண்டியுள்ளது

  • பிலிப்கார்டின் டின் நிறுவனமான PhonePe நுகர்வோர் கொடுப்பனவு நிறுவனமாக பே டிஎம்- ஐ தாண்டி அதிக வாடிக்கையாளர்களை கொண்ட நிறுவனமாக மாறியுள்ளது.

இயங்கும் ஈ-மோட்டார் சைக்கிள் தொடங்க ஸ்டார்ட்அப்

  • இ மோஷன்ஸ்,மோட்டார்ஸ் , ஒரு கோயம்புத்தூர் சார்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் , அதன் சுற்றுச்சூழல் மின் மோட்டார் சைக்கிளை ஜூன் 5, உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு அறிமுகப்படுத்துகிறது.

புரிந்துணர்வு ஒப்பந்தம்(MoU),ஒப்பந்தங்கள்& மத்திய அமைச்சரவை ஒப்புதல்

காந்தி 150 வது பிறந்த நாள் விழா கொண்டாடும் செயற்குழு

  • மத்திய அரசு பிரதமர் நரேந்திர மோடி தலைமையின் கீழ் ஒரு நிறைவேற்றுக் குழுவை (ஈ.சி) தேசிய மற்றும் சர்வதேச அளவில் மக்களிடையே “மகாத்மா காந்தியின் கொள்கைகளை”பரப்புவதற்காக அமைத்துள்ளது.

மாநாடுகள்

யோகா தொடர்பான தேசிய சுகாதார ஊடக ஆசிரியர்கள் மாநாடு

  • புதுதில்லியில் உள்ள மொரார்ஜி தேசாய் தேசிய யோகா நிறுவனத்தில் நடைபெறும் யோகா தொடர்பான 3-ஆவது தேசிய சுகாதார ஊடக ஆசிரியர்கள் மாநாட்டை, மத்திய ஆயுஷ் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு. ஸ்ரீபத் யசோ நாயக் 2018 ஜூன் 5 அன்று தொடங்கி வைக்கவுள்ளார்.

பாதுகாப்பு செய்திகள்

அக்னி-5 ஏவுகணை வெற்றிகர சோதனை

  • அணு ஆயுதங்களைச் சுமந்து சென்று தொலைதூர இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கி அழிக்கும் அக்னி-5 ஏவுகணை, டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் தீவிலிருந்து (வீலர் தீவு) 03.06.2018 அன்று வெற்றிகரமாக ஏவிப் பரிசோதிக்கப்பட்டது.
  • அனைத்து ரேடார்கள், மின் ஒளியியல் சுவடு பற்றிச் செல்லும் நிலையங்கள், தொலை தூரத் தொடர்பு நிலையங்கள், ஏவுகணையின் விசை வீச்சு வளைவை அதன் பாதையில் செலுத்தின. ஏவுகணையின் அனைத்து நோக்கங்களும் இந்த பரிசோதனையில் எட்டப்பட்டன.

இந்தியர்களை காப்பாற்றுவதற்காக ஆபரேஷன் ‘NISTAR’

  • மெக்னு புயலால் ஏமன் சோகோட்ரா தீவில் தனியாக சிக்கிக்கொண்டிருந்த 38 இந்தியர்கள் இந்திய கப்பல் ஐ.என்.எஸ். சுனேயானால் மீட்கப்பட்டனர்.

திட்டங்கள்

“கோபபந்து சாம்படிகா ஸ்வஸ்த்யா பீமா யோஜனா”

  • ஒடிசா அரசாங்கம் மாநிலத்தில் பத்திரிகையாளர்களுக்கு ஒரு சுகாதார காப்பீடு திட்டத்தை தொடங்கியுள்ளது.

நியமனங்கள்

  • தினேஷ் குப்தா – இந்தியாவின் புவியியல் ஆய்வு மையத்தின் (ஜிஎஸ்ஐ) பொது இயக்குனர்

ஸ்பெய்ன் நாட்டின் புதிய பிரதமராக பெட்ரோ சான்சஸ் பதவியேற்பு

  • ஸ்பெய்ன் பிரதமராக இருந்த மரியான ரஜாய் பதவி விலகியதை அடுத்து பெட்ரோ சான்சஸ் அந்நாட்டின் புதிய பிரதமராக இன்று பதவியேற்றுக்கொண்டார்.

இத்தாலி பிரதமர் பதவியேற்பு

  • கியூசெப் கான்டே – இத்தாலியின் பிரதம மந்திரி
  • சமூக தொழில் முனைவர் விஜய் மகாஜன் – ராஜீவ் காந்தி அறக்கட்டளை செயலாளர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி

மொபைல் செயலிகள் & இணைய போர்ட்

பூமி விஞ்ஞான அமைச்சகம் முன்னறிவிப்பிற்கு புதிய முன்மாதிரியை  அறிமுகப்படுத்துகிறது

  • மழை, வெப்ப அலை மற்றும் குளிர் அலை போன்ற தீவிர வானிலை நிகழ்வுகளின்மற்றும் பரவலான வானிலை முன்னறிவிப்புகளை மிகவும் துல்லியமாக உருவாக்குவதற்காக புவி அறிவியல் அமைச்சகம் என்ஸம்பில் ப்ரெடிக்ஷன்  சிஸ்டம் (ஈபிஎஸ்) ஐ அறிமுகப்படுத்தியது.

விளையாட்டு செய்திகள்

பெண்கள் T20 ஆசியா கோப்பை கிரிக்கெட்

  • மகளிர் T20 ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா மலேசியாவை தோற்கடித்தது.

PDF Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!