நடப்பு நிகழ்வுகள் – 27 ஜூலை 2023

0
நடப்பு நிகழ்வுகள் - 27 ஜூலை 2023
நடப்பு நிகழ்வுகள் - 27 ஜூலை 2023
நடப்பு நிகழ்வுகள் – 27 ஜூலை 2023

தேசிய செய்திகள்

இந்த நிதியாண்டிற்கான இந்தியாவின் வளர்ச்சியானது 6.1% ஆக உயரும் – IMF சமீபத்திய ஆய்வறிக்கை.

  • சர்வதேச நாணய நிதியமானது(IMF) நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி பொருளாதார வளர்ச்சியை முன்னறிவிப்பிலிருந்து உயர்த்தி 6.1% ஆக இருக்கும் என தனது சமீபத்திய ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
  • IMF ஆனது ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையில் நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 5.9 சதவீதமாக இருக்கும் என்று குறிப்பிட்டிருப்பது முக்கியம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. “வேகமாக வளரும் பொருளாதாரம்” என்ற பிரிவில் இந்தியா தனது இடத்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்கிறது என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊக்கமருந்து எதிர்ப்பு விதிகள் மற்றும் வழிகாட்டுதல்கள் பற்றிய தகவல்களுக்காக உதவி எண்ணை “நாடா” அறிமுகப்படுத்தியுள்ளது.

  • ஊக்கமருந்து எதிர்ப்பு விதிகள் மற்றும் அதன் வழிகாட்டுதல்கள் பற்றிய தகவல்களை விளையாட்டு வீரர்கள் மற்றும் தடகள ஆதரவு பணியாளர்களுக்கு எளிதாக வழங்குவதற்காக தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமையானது(NADA)  “ஊக்கமருந்து தடுப்பு உதவி எண்ணை”(1800-119-919)  அறிமுகப்படுத்தியுள்ளது.  
  • இதன் மூலம் அதில் ஏதேனும் குழப்பங்கள் மற்றும் சிக்கல்கள் இருப்பின் அவற்றை எளிதாக விளையாட்டு வீரர்கள் களைய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய இணை அமைச்சர் “நிறுவனங்களுக்கு அப்பால் மனநலத்தை பாதுகாத்தல்” என்ற தேசிய மாநாட்டை துவக்கி வைத்துள்ளார்.

  • மத்திய குடும்பம் மற்றும் சுகாதாரம் நலத்துறை இணையமைச்சர் டாக்டர் பாரதி பிரவின் பவார், “நிறுவனங்களுக்கு அப்பால் மனநலத்தை பாதுகாத்தல்” என்ற தேசிய மாநாட்டை ஜூலை 26 அன்று தொடங்கி வைத்துள்ளார்.
  • மனநலப் பாதுகாப்புச் சட்டம், 2017-ஐ நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கல்கள், சவால்கள் மற்றும் மனநலப் பிரச்சினைகளை தாண்டி  எவ்வாறு முன்னோக்கிச் செல்வது குறித்து ஆலோசிப்பதை நோக்கமாக கொண்டு இந்த மாநாடானது நடைப்பெற உள்ளது.

மாநில செய்திகள்

மத்திய அமைச்சர் ஸ்ரீ சிந்தியா 2023 ஆம் ஆண்டிற்கான “ஹெலி உச்சி மாநாட்டை” மத்திய பிரதேசத்தில் தொடங்கி வைத்துள்ளார்.

  • மத்திய அமைச்சர் ஸ்ரீ ஜோதிராதித்ய எம் சிந்தியா 2023 ஆம் ஆண்டிற்கான ஹெலி உச்சி மாநாட்டை ஜூலை 25 2023 அன்று மத்திய பிரதேசத்தில் உள்ள கஜுராஹோவில் தொடங்கி வைத்துள்ளார்.
  • “கடைசி மைலை அடைதல் : ஹெலிகாப்டர்கள் மற்றும் சிறிய விமானங்கள் மூலம் பிராந்திய இணைப்பை வலுப்படுத்துதல்” என்ற கருப்பொருளை கொண்டு இந்த மாநாடானது நடைபெறுகிறது.

உலகளாவிய இரசாயனங்கள் மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் குறித்த உச்சிமாநாடானது புது டெல்லியில் தொடங்க உள்ளது.

  • இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பும்(FICCI) மத்திய ரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகமும் இணைந்து “இந்தியாவில் உலகளாவிய பெட்ரோ கெமிக்கல்ஸ் மற்றும் இரசாயனங்கள் உற்பத்தி மையங்கள் 2023″(GCPMH 2023) என்ற உச்சிமாநாட்டின் 3வது பதிப்பை ஜூலை 27 அன்று புது டெல்லியில் தொடங்க உள்ளது.
  • இந்த இரண்டு நாள் மாநாட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றும் இரசாயனம் மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் தொழில்துறையை மேலும் எவ்வாறு வலுப்படுத்துவது மற்றும் அதில் உள்ள சிக்கல்களை களைந்து அவற்றை எவ்வாறு மேம்படுத்துவது என்பதை விவாதிப்பதை நோக்கமாக கொண்டு இந்த மாநாடானது நடைபெற உள்ளது.

மத்திய அமைச்சர் ஸ்ரீ சிந்தியா HeliSewa மற்றும் RCS UDAN 5.2 என்ற கைபேசி செயலிகளை அறிமுகப்படுத்தியுள்ளார்.

  • மத்தியப் பிரதேச மாநிலத்தின் கஜுராஹோவில் ஜூலை 25 2023 அன்று, 2023 ஆம் ஆண்டிற்கான ஹெலி உச்சி மாநாட்டை தொடங்கும் அதே வேளையில் மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய எம் சிந்தியா HeliSewa மற்றும் RCS UDAN 5.2 என்ற கைபேசி செயலிகளை அறிமுகப்படுத்தியுள்ளார்.  இந்த விழாவில் UDAN 5.2 என்ற முன்னெடுப்பு திட்டத்தையும் அவர் தொடங்கி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
  • UDAN 5.2 என்பது நாட்டின் தொலைதூர மற்றும் பிராந்திய பகுதிகளுக்கான இணைப்பை மேம்படுத்துதல் மற்றும் வலுப்படுத்துதல், 1A போன்ற சிறிய விமானங்கள் மூலம் நாட்டின் கடைசி மைல் வரை இணைப்பை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டு உருவாக்கப்பட்டதாகும்.

அரசியல் செய்திகள்

பாராளுமன்ற லோக்சபாவில் பல – மாநில கூட்டுறவு சங்கங்கள் (திருத்தம்) மசோதா, 2022 ஆனது நிறைவேற்றப்பட்டுள்ளது.

  • பல – மாநில கூட்டுறவு சங்கங்கள் திருத்த மசோதா 2022 ஆனது  ஜூலை 25 2023 அன்று பாராளுமன்ற லோக்சபாவில் (மக்களவையில்) நிறைவேற்றப்பட்டுள்ளது. 
  • பல மாநில கூட்டுறவுச் சங்கங்களில் நிர்வாகத்தை வலுப்படுத்துதல், பொறுப்புணர்வை அதிகரித்தல், வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துதல் மற்றும் தேர்தல் செயல்முறைகளை சீர்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்த மசோதாவானது கொண்டுவரப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற மக்களவையில் NDA அரசிற்கு எதிராக காங்கிரஸ் கட்சியானது “நம்பிக்கையில்லா தீர்மானத்தை” கொண்டு வந்துள்ளது.

  • மணிப்பூர் மாநிலத்தின் வன்முறை விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில்  NDA கூட்டணி அரசிற்கு எதிராக காங்கிரஸ் கட்சியானது ஜூலை 26 அன்று மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளது. 
  • காங்கிரஸ் கட்சியின் எம்பி கௌரவ் கோகோய் இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை சபையில் முன்வைத்துள்ளார். இதுவரை நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து “27 நம்பிக்கையில்லா தீர்மானங்கள்” நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்திரா காந்தி அதிக எண்ணிக்கையிலான நம்பிக்கையில்லா தீர்மானங்களை எதிர்கொண்டவராவார் – 15 முறை.

நியமனங்கள்

CMA நீரஜ் ஜோஷி இந்திய மத்திய கவுன்சிலின் உறுப்பினராக ஜூலை 2023 இல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

  • இந்திய செலவுக் கணக்காளர்கள் அமைப்பின்(ICMAI) மத்திய கவுன்சில் உறுப்பினராக (CCM) செலவு மற்றும் மேலாண்மை கணக்காளரான(CMA) நீரஜ் ஜோஷி ஜூலை 25 அன்று தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • மேலும் CMA சைதன்யா மொஹரிர் அவர்களுக்கு மேற்கு இந்திய பிராந்திய கவுன்சில் உறுப்பினர்(RCM) பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் தங்களின் துறை சார்ந்த முக்கிய முன்னெடுப்பு நடவடிக்கைகளால் இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது என மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

உலக வர்த்தக அமைப்பின் 13வது அமைச்சர்கள் மாநாட்டின் தலைவராக டாக்டர் தானி அல் சியோதி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

  • உலக வர்த்தக அமைப்பின் 13வது அமைச்சர்கள் மாநாட்டின் தலைவராக ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளியுறவு வர்த்தக அமைச்சர் டாக்டர் தானி அல் ஜேயோடி ஜூலை 2023 இல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 
  • 13வது அமைச்சர்கள் மாநாடானது பிப்ரவரி 2024 இல் UAE-ன் அபுதாபியில் நடைபெறவுள்ளது. இது வர்த்தக அமைப்பின் செயல்திறனை மதிப்பாய்வு செய்து, எதிர்காலத்திற்கான சில முக்கிய முன்னெடுப்புகளை எடுப்பதை நோக்கமாக கொண்டு இந்த மாநாடானது நடைபெற உள்ளது என 24 ஜூலை 2023 அன்று வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சீனாவின் புதிய வெளியுறவுத்துறை அமைச்சராக வாங் யி பதவியேற்றுள்ளார்.

  • சீன அரசாங்கமானது வெளியுறவுத்துறை அமைச்சர் பதவியில் ஏற்கனவே இருந்த குயின் கேங்கை நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக நாடு மூத்த அரசியல்வாதியான வாங் யியை ஜூலை 2023 இல் நியமித்துள்ளது. 
  • 57 வயதான குயின் கேங் நீண்ட நாள் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு வந்த காரணத்தால் வாங் யி இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார் என சீன அரசாங்கம் தெரிவித்துள்ளது. இவர் சீனாவின் வெளியுறவு கொள்கையை சிறப்பாக கையாளுவார் என நம்பிக்கை தெரிவித்துள்ளதாக சீன அரசாங்கம் தெரிவித்துள்ளது.

பீகார் மாநில மகளிர் ஆணையத்தின் தலைவராக அஸ்வமேத தேவி நியமிக்கப்பட்டுள்ளார்.

  • பீகார் மாநில மாநில மகளிர் ஆணையத்தின் மறுசீரமைப்பானது நீண்ட காலமாக நிலுவையில் இருந்த நிலையில் அதை மீட்டுருவாக்கம் வகையில் அம்மாநில அரசாங்கமானது அஸ்வமேத தேவி அவர்களை மகளிர் ஆணையத்தின் தலைவராக  நியமித்து ஆணையத்தை ஜூலை 26 2023 அன்று பிறப்பித்துள்ளது.
  • இவர் பீகார்மாநிலத்தின் சமஸ்திபூர் நாடாளுமன்றத் தொகுதியின் முன்னாள் ஜேடி(யு) எம்.பி ஆவார். மேலும் அவ்வாணையத்தில் பேராசிரியர் கீதா யாதவ், டாக்டர். சுஜாதா சும்ப்ரூய், பிரபாவதி மஞ்சி, ரபியா கட்டூன், ஸ்வேதா பிஸ்வாஸ், சுனிதா குஷ்வாஹா & சுலோச்சனா தேவி ஆகியோரும் இந்த மகளிர் ஆணைய குழுவில் நியமிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

அனிதா கர்வால் GujRERA அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

  • குஜராத் மாநிலத்தின் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் (GujRERA) தலைவராக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியான அனிதா கர்வால் ஜூலை 2023 இல் அம்மாநில அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். 
  • அவ்வமைப்பின் முன்னாள் தலைவர் அமர்ஜித் சிங் சமீபத்தில் ஓய்வு பெற்றதையடுத்து, இவர் இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்

விருதுகள்

நடுவர்களான கிஷன் சந்த் ஜோஷி மற்றும் ராகுல் குப்தா ஆகியோர் 2023 ஆம் ஆண்டிற்கான AIFF விருதுகளை வென்றுள்ளனர்.

  • அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பானது(AIFF), 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டின் பருவத்திற்கான சிறந்த நடுவர் பிரிவில் ராகுல் குப்தாவும், சிறந்த உதவி நடுவர் பிரிவில் கிஷன் சந்த் ஜோஷி அவர்களும் விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • இந்தியன் சூப்பர் லீக் (ISL) மற்றும் தேசிய மற்றும் சர்வதேச அளவிலான அணிக்கான அவரது சிறப்பான செயல்பாட்டின் காரணமாக இந்தியா மற்றும் மும்பை சிட்டி எஃப்சி விங்கர் “லல்லியன்சுவாலா சாங்டே” சமீபத்தில் AIFF ஆடவர் கால்பந்து வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

விளையாட்டு செய்திகள்

ISSF இளையோர் துப்பாக்கி சுடுதல் உலக சாம்பியன்ஷிப் போட்டியின் தனிநபர் 50 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இந்தியா தங்கம் வென்றுள்ளது.

  • தென் கொரியா நாட்டின் சாங்வான் நகரில்  ஜூலை 24 ஆம் தேதி நடைபெற்ற 2023 ஆண்டிற்கான ISSF இளையோர் துப்பாக்கி சுடுதல் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் ஆண்களுக்கான தனிநபர் 50 மீட்டர் சிறு துப்பாக்கி பிரிவில் இந்தியாவின் கமல்ஜீத் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.
  • 90 துப்பாக்கி சுடுதல் வீரர்களைக் கொண்ட இந்த ISSF தொடரில் இந்தியாவானது  5 வெண்கலம், 6 வெள்ளி, 6 தங்கம் என 17 பதக்கங்களை கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இரங்கல் செய்திகள்

நாட்டின் மூத்த பத்திரிகையாளர் ஷிரிஷ் கனேகர் காலமானார்.

  • நாட்டின் மூத்த பத்திரிகையாளர், கட்டுரையாளர், எழுத்தாளர் ஷிரிஷ் கனேகர் தனது 80 வயதில் மாரடைப்பு காரணமாக மும்பையில் ஜூலை 25 அன்று காலமானார். 
  • இவரது கதைகளின் முக்கிய “லகான் பாட்டி” தொகுப்பானது மகாராஷ்டிரா மாநிலத்தின் சிறந்த நகைச்சுவைக்கான “இலக்கிய பரிஷத் விருதைப்” பெற்றுள்ளது.

முக்கிய தினம்

கார்கில் விஜய் திவாஸ் 2023

  • 1999 ஆம் ஆண்டு கார்கில் போரில் நம் நாட்டிற்காக போரிட்டு தியாகம் செய்த இந்திய ராணுவ வீரர்களின் வீரம் மற்றும் தைரியத்தை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26 ஆம் நாளானது நாடு முழுவதும் “கார்கில் விஜய் திவாஸ்” கொண்டாடப்படுகிறது. அதாவது கார்கில் வெற்றி தினம் என தமிழில் குறிப்பிடப்படுகிறது.
  • பாகிஸ்தான் ராணுவமானது அத்துமீறி இந்திய எல்லையான காஸ்மீரின் கார்கில் பகுதியில் ஆக்கிரமிப்பு செய்ததை எதிர்த்து இந்திய ராணுவமானது “ஆபரேஷன் விஜய்” திட்டத்தை கையில் எடுத்து வெற்றி கண்டது. இந்த திட்டத்தின் இந்திய வெற்றியானது உலகளவில் மிக முக்கியமான வெற்றியாக பார்க்கப்படுகிறது.

DOWNLOAD PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!