ஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஜூலை 23 2018

0

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஜூலை 23 2018

விரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு – கிளிக் செய்யவும்

ஜூலை நடப்பு நிகழ்வுகள் வினா விடை – கிளிக் செய்யவும்

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு – கிளிக் செய்யவும்

  • ருவாண்டா, உகாண்டா, தென்னாப்பிரிக்க குடியரசு ஆகியவற்றிற்கு பிரதமர் திரு. நரேந்திரமோடி அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறார். இந்தியப் பிரதமர் ஒருவர் ருவாண்டாவிற்குப் பயணம் மேற்கொள்வது இதுவே முதன்முறையாகும்.
  • பீகார் அரசு தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களுக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்க முடிவு செய்துள்ளது.
  • நாட்டின் முதல் பொது சைக்கிள் பகிர்வு (பிபிஎஸ்) அமைப்பான மைசூரு ட்ரின் ட்ரின் 10,000 பதிவுகளைத் தாண்டியது.
  • சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள், கப்பல், நீர்வழங்கல், நதி அபிவிருத்தி மற்றும் கங்கா புனரமைப்பு ஆகியவற்றின் அமைச்சர் திரு நிதின் கட்கரி மத்திய பிரதேசத்தில் 5485 கோடி ரூபாய் மதிப்புள்ள தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
  • ஜார்க்கண்ட் மாநில நலத்துறை கல்யாண் குருகுல் என்ற பெயரின் கீழ் தொழிற்பயிற்சி மையங்களை (VTC) நிறுவியது.
  • சமூக ஊடகங்களில் வரும் தவறான செய்தி காரணமாக ஏற்படும் வன்முறை மற்றும் வன்முறை சம்பவங்களைக் கட்டுப்படுத்த உத்தரப்பிரதேச போலீஸார் முக்கிய நபர்களால் டிஜிட்டல் இராணுவம் அமைக்கவுள்ளனர்.
  • ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையே இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஈரான் இரண்டாவது மிகப் பெரிய எண்ணெய் வழங்குநராக இருந்தது.
  • இந்தியாபங்களாதேஷ் எல்லைப்புறச் சாவடிகள் பற்றிய கூட்டுக் குழுவின் முதல் கூட்டம், 22-23 ஜூலை 2018-ல் திரிபுரா மாநிலம், அகர்தலாவில் நடைபெற்றது.
  • கும்பல் வன்முறையை கட்டுப்படுத்த மத்திய உள்துறை செயலர் தலைமையில் உயர்நிலைக் குழுவை அமைத்தது அரசு.
  • திரு. எஸ். என். அக்ரவால் – ரயில்வே வாரியத்தின் பணியாளர் பிரிவு புதிய உறுப்பினராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
  • விசாகப்பட்டினம்சென்னை தொழில்துறை போக்குவரத்துப் பாதை (விசிஐசி) திட்ட வரைவில் (i) விசாகப்பட்டினமும் (ii) எற்பேடு-ஸ்ரீகாளகஸ்தியும் இரு முனையங்களாகப் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.
  • சேவா போஜ் யோஜனா என்பது ஒரு மையத் துறைத் திட்டமாகும் இதன் கீழ் மத்திய சரக்கு மற்றும் சேவை வரி (CGST) மற்றும் மத்திய அரசின் பங்களிப்பு ஒருங்கிணைந்த பொருட்கள் மற்றும் சேவை வரி (IGST), குறிப்பிட்ட மூலப்பொருட்களை கொள்முதல் செய்வதற்காக அறக்கட்டளை மத நிறுவனங்கள் பணம் செலுத்தும் தொகையை, இந்திய அரசு நிதி உதவியாக திருப்பி அளிக்கப்படும்.
  • அரசு வெற்றிகரமாக உன்னத் பாரத் அபியான்0-வை தொடங்கியது. UBA 2.0 அதிகாரப்பூர்வமாக ஏ.ஐ.சி.டி.இ., வசந்த்குஞ்ச்சில் ஏப்ரல் 25, 2018 அன்று தொடங்கப்பட்டது.
  • நாட்டின் ஒட்டுமொத்த பொதுப் போக்குவரத்து முறையை மேம்படுத்துவதற்கு உதவி கோரும் வகையில், பிரிட்டனுடன் மத்திய அரசு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
  • மாற்றத்தை விரும்பும் மாவட்டங்களின் திட்டங்களில் இணைந்து செயல்பட நிதி ஆயோக்லூபின் அறக்கட்டளை இடையே இன்று (23.07.18) விருப்ப ஆவணம் (எஸ் ஓ ஐ) கையெழுத்தானது.
  • என்.சி.டி.இ. அனுமதி இல்லாமல் ஆசிரியர் கல்வி படிப்புகளை நடத்தி வரும் மைய / அரசு நிறுவனங்களுக்கு சுயபரிசோதனை அங்கீகாரம் வழங்குவதற்காக மக்களவையில் தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (சட்டதிருத்தம்) மசோதா  நிறைவேற்றப்பட்டது.
  • மேம்படுத்தப்பட்ட தில்லி மெட்ரோ ரெயில் செயலி தொடங்கப்பட்டது. இந்த செயலி மெட்ரோ வாடிக்கையாளர்களுக்கு மெட்ரோ சேவைகளைப் பயன்படுத்த உதவுகின்ற பல பயனுள்ள தகவல்களை வழங்குகிறது.
  • ஹால் ஆஃப் ஃபேம் டென்னிஸ் இறுதிச் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன் அமெரிக்காவின் ஸ்டீவ் ஜான்சனிடம் மோதி தோல்வி.

PDF DOWNLOAD

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!