தமிழக சுகாதாரத் துறையில் வேலைவாய்ப்பு – டிச.15 வரை விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
தமிழக சுகாதாரத் துறையில் வேலைவாய்ப்பு - டிச.15 வரை விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழக சுகாதாரத் துறையில் வேலைவாய்ப்பு - டிச.15 வரை விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழக சுகாதாரத் துறையில் வேலைவாய்ப்பு – டிச.15 வரை விண்ணப்பங்கள் வரவேற்பு!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இடைநிலை சுகாதார மற்றும் பல்நோக்கு சுகாதார பணியாளர் பிரிவில் அதிக காலிப்பணியிடங்கள் உள்ளன. இதற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் வருகிற டிசம்பர் 15 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பித்து முடிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

சுகாதார பணியாளர் வேலைவாய்ப்பு:

கொரோனா பெருந்தொற்றின் காரணமாக பொதுமக்கள் பல்வேறு இழப்புகளை சந்தித்து வருகின்றன. அதில் குறிப்பாக தங்களது வேலைகளை இழந்து வருகின்றனர். இதனை சரி செய்யும் விதமாக தமிழக அரசு பல்வேறு அரசு காலிப்பணியிடங்களை அறிவித்து வருகிறது. இதனை தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இடைநிலை சுகாதார பணியாளர் மற்றும் பல்நோக்கு சுகாதார பணியாளர் ஆகிய பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணியில் சேருபவர்கள் தற்காலிக அடிப்படையில் மட்டுமே பணிபுரிவர்கள். மேலும் 117 இடைநிலை சுகாதார பணியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளது.

Uber நிறுவனத்தில் ரூ.2 கோடி சம்பளத்தில் வேலைவாய்ப்பு – IIT பட்டதாரிகளுக்கு ஜாக்பாட்!

இதற்கான 50 வயது வரை உட்பட்டவராக இருக்க வேண்டும். இப்பணிக்கான கல்வித்தகுதி செவிலியர் பட்டயப் படிப்பு அல்லது இளங்கலை செவிலியர் பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும். மேலும் அத்துடன் தமிழ்நாடு குழுமத்தில் பதிவு செய்யப்பட்ட ஒருங்கிணைந்த பாடத்திட்டத்தில் இளங்கலை செவிலியர் பட்டம் பெற்றவர்களும் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதேபோல் பல்நோக்கு சுகாதார பணியாளர் மற்றும் சுகாதார ஆய்வாளர் பிரிவில் 62 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதில் பல்நோக்கு சுகாதார பணியாளர் பிரிவில் ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு 50 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்.

சபரிமலை செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – முன்பதிவில் விலக்கு! தேவஸ்தானம் அறிவிப்பு!

இப்பணியிடத்தில் சேர விரும்புவோர் 12ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 10ம் வகுப்பில் தமிழ்வழிக் கல்வியில் தேர்ச்சி பெற்றவராகவும் இருக்க வேண்டும். மேலும் 2 ஆண்டு பல்நோக்கு சுகாதார ஆய்வாளர் அல்லது துப்புரவு ஆய்வாளர் ஆகிய கல்வித் தகுதியும் பெற்றிருக்க வேண்டும். இதற்கான விண்ணப்ப படிவத்தை http://nhm.tn.gov.in என்ற இணைய தளம் மூலமாக பெறலாம். இதற்கு வருகிற டிசம்பர் 15-ஆம் தேதி அன்று மாலை 5 மணிக்குள் வரை விண்ணப்பித்து முடிக்க வேண்டும். இந்த விண்ணப்பங்களை செயலாளர், மாவட்ட நலவாழ்வு சங்கம் மற்றும் துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள், துணை இயக்குனர் சுகாதார பணிகள் அலுவலகம், கள்ளக்குறிச்சி என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!