இந்தியாவிலேயே அதிவேக 4ஜி இன்டர்நெட் தரவரிசை – ஜியோ முதலிடம்!

0
இந்தியாவிலேயே அதிவேக 4ஜி இன்டர்நெட் தரவரிசை - ஜியோ முதலிடம்!
இந்தியாவிலேயே அதிவேக 4ஜி இன்டர்நெட் தரவரிசை - ஜியோ முதலிடம்!
இந்தியாவிலேயே அதிவேக 4ஜி இன்டர்நெட் தரவரிசை – ஜியோ முதலிடம்!

இந்தியாவில் செயல்பட்டு வரும் தொலைத்தொடர்பு முன்னணி நிறுவனங்களில் இருந்து அதன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் இணையசேவை தரத்தில் ரிலையன்ஸ் ஜியோ முன்னிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இன்டர்நெட் சேவை

வாடிக்கையாளர்களுக்கான இணைய சேவைகளை வழங்கும் 4 G இன்டர்நெட் பிரிவில் ரிலையன்ஸ் ஜியோ நெட்வொர்க் 20.7 மெகாபைட் வினாடிக்கு சராசரி பதிவிறக்க வேகத்துடன் தொடர்ந்து நீடிக்கிறது. அதே நேரத்தில் பதிவேற்ற பிரிவில், கடந்த மே மாதத்தில் 6.7 mbps தரவு வேகத்துடன் வோடாபோன் ஐடியா நிறுவனம் முன்னேறி வந்துள்ளதாக தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை Trai வெளியிட்டுள்ள தகவல்கள் தெரிவிக்கிறது.

ஆதார் அட்டையில் பிறந்த தேதி ஆன்லைன் முறையில் மாற்றம் – UIDAI ன் நேரடி இணைப்பு!!

அதாவது ரிலையன்ஸ் ஜியோ 4 G நெட்வொர்க் வேகமானது, அதன் போட்டியாளரான வோடாபோன் ஐடியாவை விட மூன்று மடங்கு அதிகமாக இருந்தது. ஆனால் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வோடபோன் மற்றும் ஐடியா நெட்வொர்க் இணைக்கப்பட்ட பின்னர், அதன் வேகம் அதிகரித்ததில் இதுவே முதல் முறையாகும். அந்த வகையில் ஜூன் 8 அன்று இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (Trai) வெளியிட்ட தகவல்களின் படி, ஏர்டெல் நெட்வொர்க்கின் மிக குறைந்த சராசரி வேகம் 4.7 mbps ஆக இருந்தது.

TN Job “FB  Group” Join Now

அதே நிலையில் கடந்த மே மாதத்தில் வோடபோன் ஐடியா நெட்வொர்க்கின் பதிவேற்றும் வேகம் 6.3 mbps ஆக கணக்கிடப்பட்டது. அதைத் தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ 4.2 mbps உடன் இரண்டாவது இடத்திலும், பின்னர் ஏர்டெல் 3.6 mbps உடன் மூன்றாவது இடத்திலும் உள்ளது. தவிர அரசுக்கு சொந்தமான தொலைத் தொடர்பு ஆபரேட்டர் BSNL ஒரு குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் 4 ஜி சேவையை முதன் முறையாக அறிமுகப்படுத்தியது. அதனால் BSNL நெட்வொர்க் வேகம் Trai குறிப்பிட்ட தரவரிசையில் இடம்பெறவில்லை.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!