ஆதார் அட்டையில் பிறந்த தேதி ஆன்லைன் முறையில் மாற்றம் – UIDAI ன் நேரடி இணைப்பு!!

0
ஆதார் அட்டையில் பிறந்த தேதி ஆன்லைன் முறையில் மாற்றம் - UIDAI ன் நேரடி இணைப்பு!!
ஆதார் அட்டையில் பிறந்த தேதி ஆன்லைன் முறையில் மாற்றம் - UIDAI ன் நேரடி இணைப்பு!!
ஆதார் அட்டையில் பிறந்த தேதி ஆன்லைன் முறையில் மாற்றம் – UIDAI ன் நேரடி இணைப்பு!!

ஆதார் அட்டையில் நமது பிறந்த தேதியை ஆன்லைன் முறையில் எளிதாக மாற்றுவதற்கான வழிமுறைகளை இந்த பதிவில் காண்போம். UIDAI இதற்கான நேரடி இணைப்பு முகவரியையும் கொடுத்துள்ளது.

பிறந்த தேதி மாற்றம்:

ஆதார் அட்டை மூலம் மத்திய அரசு வழங்கும் மானியங்கள், பிரதமர் கிசான் சம்மன் நிதி யோஜனா, பிரதம் மந்திரி ஜன தன் யோஜனா போன்ற நலத்திட்டங்களுக்கான பலன்கள் வழங்கப்படுகிறது. இந்த ஆதார் அட்டையில் நமது அனைத்து தரவுகளும் பதிவு செய்யப்பட்டிருக்கும். அவற்றில் ஏதவாது ஒரு தரவு தவறாக பதிவு செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தால் அதனை நாம் உடனடியாக மாற்றி சரியான தகவலை பதிவு செய்ய வேண்டும்.

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!!

முதலில் ஆதார் அட்டையில் ஏதேனும் தகவலை மாற்ற நினைத்தால் அதற்கு அருகில் உள்ள ஆதார் மையத்தை அணுக வேண்டியதிருக்கும். ஆனால் தற்போது அனைத்து விதமான சேவைகளுக்கும் ஆன்லைன் முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது ஆதார் அட்டையில் பிறந்த தேதியை மாற்றியமைக்க UIDAI அப்டேட் ஆனது புதிய இணைப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஆதார் அட்டையில் பிறந்த தேதியை மாற்றியமைக்க பாஸ்போர்ட், பான் கார்டு, ரேஷன் / பி.டி.எஸ் புகைப்பட அட்டை, வாக்காளர் ஐடி, ஓட்டுநர் உரிமம் போன்ற 32 வகையான புகைப்பட அடையாள அட்டையில் ஏதேனும் ஒன்றை சமர்ப்பிக்க அனுமதி அளித்துள்ளது.

ஆதார் அட்டையில் பிறந்த தேதியை மாற்றும் முறை:
  • முதலில் UIDAI ன் நேரடி இணைப்பான ssup.uidai.gov.in/ssup/ ல் உள்ளே நுழைய வேண்டும்.
  • இப்பொழுது 12 இலக்க ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும்.
  • கேப்ட்சா அல்லது சரிபார்ப்புக் குறியீட்டை உள்ளிட வேண்டும்.
  • ‘OTP அனுப்பு ‘ என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
  • இப்பொழுது உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும்.

TN Job “FB  Group” Join Now

  • இப்பொழுது OTP எண்ணை உள்ளிட்ட பிறகு, உங்களது ஆதார் விவரங்கள் அனைத்தும் திரையில் வரும்.
  • அதில், பிறந்த தேதியை மாற்றிக் கொள்ளலாம்.
  • UIDAI அனுமதித்துள்ள 32 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை ஸ்கேன் செய்து பதிவேற்ற வேண்டும்.
  • இப்பொழுது ‘சமர்ப்பி’ தேர்வை கிளிக் செய்ய வேண்டும்.
  • இப்பொழுது உங்களது ஆதார் தரவுகளில் நீங்கள் மாற்றி அமைத்த பிறந்த தேதி பதிவு செய்யப்படும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!