ஜாக்டோ ஜியோ போராட்ட நடவடிக்கைகள் ரத்து – பள்ளிக் கல்வித்துறை ஆணையர் செயல்முறைகள்!

0
ஜாக்டோ ஜியோ போராட்ட நடவடிக்கைகள் ரத்து - பள்ளிக் கல்வித்துறை ஆணையர் செயல்முறைகள்!
ஜாக்டோ ஜியோ போராட்ட நடவடிக்கைகள் ரத்து - பள்ளிக் கல்வித்துறை ஆணையர் செயல்முறைகள்!
ஜாக்டோ ஜியோ போராட்ட நடவடிக்கைகள் ரத்து – பள்ளிக் கல்வித்துறை ஆணையர் செயல்முறைகள்!

தமிழகத்தில் 22.01.2019 முதல் 30.01.2019 வரை நடத்தப்பட்ட ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஆசிரியர்கள் ஊழியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், மேலும் தண்டனை வழங்கி இருப்பின் அதனை ரத்து செய்வது குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆணையர் செயல்முறைகள் வெளியிட்டுள்ளார்.

ஜாக்டோ ஜியோ அமைப்பு:

தமிழகத்தில் அரசு ஆசிரியர்கள், ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஜாக்டோ ஜியோ அமைப்பின் பேரில் 22.01.2019 முதல் 30.01.2019 வரை போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. மேலும் பலருக்கு தண்டனை வழங்கப்பட்டது. இந்நிலையில் அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகள் ரத்து செய்ய வேண்டும்.

ஜூலை 5க்கு மேல் இரவு ஊரடங்கு உத்தரவு ரத்து? மாநில அரசு ஆலோசனை!

தண்டனை வழங்கி இருப்பின் அதனை ரத்து செய்ய வேண்டும் வேண்டும் என அரசாணை 02.02.2021 அன்று பணியாளர் மற்றும் நிருவாக சீர்திருத்த துறை வெளியிட்டது. மேலும் அந்த அரசாணை தகவலுக்காகவும் தக்க நடவடிக்கைக்காகவும் அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்த அரசாணையில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகள் கைவிடப்பட்டவர்கள் மற்றும் ஒழுங்கு நடவடிக்கையில் தண்டனை வழங்கி இருப்பின் அதனை ரத்து செய்தவர்கள் குறித்த விவரங்கள் அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

TN Job “FB  Group” Join Now

ஆனால் அதில் ஒரு சில மாவட்டங்களில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளாமல் தெரிய வந்துள்ளது. அதன் காரணமாக அரசாணையினை செயலாக்கம் செய்யும் பொருட்டு கிழ்காணும் அறிவுரைகள் அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும் ஒழுங்கு நடவடிக்கைகளில் தண்டனை ஏதும் வழங்கி இருப்பின் அவற்றை ரத்து செய்து ஆணை வழங்கப்பட வேண்டும். தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டிருப்பின் அதனை விலக்கி கொண்டு மீண்டும் பணிநியமனம் வழங்கப்பட வேண்டும். இவை அனைத்தும் பணிப்பதிவேட்டில் உரிய பதிவுகள் செய்யப்பட வேண்டும் என அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களும் அறிவுறுத்தப்படுகிறார்கள் என கூறப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here