IPL AUCTION 2024: எந்த அணியில் எந்த வீரர்?? முழு விவரங்களுடன்…!!

0
IPL AUCTION 2024: எந்த அணியில் எந்த வீரர்?? முழு விவரங்களுடன்...!!
IPL AUCTION 2024: எந்த அணியில் எந்த வீரர்?? முழு விவரங்களுடன்...!!
IPL AUCTION 2024: எந்த அணியில் எந்த வீரர்?? முழு விவரங்களுடன்…!!

இந்தியாவில் அடுத்த ஆண்டு IPL தொடர் நடைபெறவுள்ளது. அதற்கான வீரர்கள் விடுவிப்பு மற்றும் டிரேடிங் முடிவடைந்த நிலையில், இன்று துபாயில் ஏலம் நடைபெற்று வருகிறது. கடந்த சீசனுடன் குறிப்பிட்ட சீனியர் வீரர்கள் ஓய்வு பெற்றுவிட்டதாலும், அணிகளின் கவனம் இளம் வீர்ரகளின் மீது திரும்பியதனாலும் தற்போது ஏலம் சூடுபிடித்துள்ளது. அந்த வகையில் எந்த அணி யாரை தேர்வு செய்தது என்பதை கீழே வரிசைப்படுத்தியுள்ளோம்.

Follow our Instagram for more Latest Updates

  • ரோவ்மென் பவல் (அடிப்படை விலை INR 1 கோடி) – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 7.4 கோடிக்கு விற்கப்பட்டுள்ளார்.
  • ஹாரி புரூக் (அடிப்படை விலை INR 2 கோடி) – டெல்லி கேபிடல்ஸ் அணி இவரை 4 கோடிக்கு வாங்கியுள்ளது.
  • டிராவிஸ் ஹெட் (அடிப்படை விலை INR 2 கோடி) – உலகக் கோப்பையின் நட்சத்திர வீரரான இவரை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 6.8 கோடிக்கு தட்டித் தூக்கியது.
  • வனிந்து ஹசரங்கா (அடிப்படை விலை INR 1.5 கோடி) – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் INR 1.5 கோடிக்கு அவரது அடிப்படை விலை கொடுத்தே பெற்றுக் கொண்டது.
  • ரச்சின் ரவீந்திரா (அடிப்படை விலை INR 50 லட்சம்) – உலகக் கோப்பையில் ஜொலித்த நட்சத்திர வீரரான இவரை CSK அணி 1.8 கோடிக்கு வாங்கியுள்ளது.
  • ஷர்துல் தாக்கூர் (அடிப்படை விலை INR 2 கோடி) – முன்னாள் CSK வீரரான இவர் மீண்டும் 4 கோடிக்கு சென்னை அணிக்கே திரும்புகிறார்.
  • ஹஸ்மதுல்லா ஓமர்சாய் (அடிப்படை விலை INR 50 லட்சம்) – ஆப்கான் அணிக்கு சீராக பங்காற்றிய இவர் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு 50 லட்சத்திற்கு விற்கப்பட்டுள்ளார்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

  • பேட் கம்மின்ஸ் (அடிப்படை விலை INR 2 கோடி) – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இவரை 20.50 கோடிக்கு விற்கப்பட்டார்.
  • ஜெரால்டு கோட்ஸே (அடிப்படை விலை INR 2 கோடி) – மும்பை இந்தியன்ஸ் அணி 5 கோடி ரூபாய் கொடுத்து தங்கள் அணி வசம் இவரை எடுத்துக்கொண்டது.
  • ஹர்ஷல் படேல் (அடிப்படை விலை INR 2 கோடி) – இந்திய அணியின் நட்சத்திர வீரர் பஞ்சாப் கிங்ஸுக்கு 11.75 கோடிக்கு விற்கப்பட்டுள்ளார்.
  • டேரியல் மிச்சேல் (அடிப்படை விலை INR 1 கோடி) – CSK அணி இவரை அதிகபட்சமாக 14 கோடிக்கு விற்கப்பட்டது.
  • கிறிஸ் வோக்ஸ் (அடிப்படை விலை INR 2 கோடி) பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு 4.2 கோடிக்கு ஏலத்தில் பெறப்பட்டார்.
  • ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் (அடிப்படை விலை INR 50 லட்சம்) டெல்லி கேபிடல்ஸ் அணி இவரை 50 லட்சத்திற்கு வாங்கியது.
  • KS பாரத் (அடிப்படை விலை INR 50 லட்சம்) – இவர் KKRக்கு 50 லட்சம் என்ற அடிப்படை விலையிலேயே விற்கப்பட்டுள்ளார்.
  • சேத்தன் சகாரியா (அடிப்படை விலை INR 50 லட்சம்) – KKR அணி இவரை 50 லட்ச ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது.
  • அல்சாரி ஜோசப் (அடிப்படை விலை INR 1 கோடி) – RCBக்கு 11.5 கோடிக்கு இந்த ஆல்ரவுண்டர் விற்கப்பட்டுள்ளார்.
  • உமேஷ் யாதவ் (அடிப்படை விலை INR 2 கோடி) – குஜராத் டைட்டன்ஸ் 5.8 கோடிக்கு இவரை ஏலத்தில் தேர்வு செய்தது.

  • சிவம் மாவி (அடிப்படை விலை INR 50 லட்சம்) – ஏலத்தில் நிதானமாக செயல்பட்ட லக்னோ அணி 6.4 கோடிக்கு தேர்வு செய்தது.
  • மிட்செல் ஸ்டார்க் (அடிப்படை விலை INR 2 கோடி) – ஏலத்திலேயே அதிகமான தொகையாக 24.75 கோடிக்கு KKR அணி இவரை கவ்விக் கொண்டது.
  • ஜெய்தேவ் உனத்கட் (அடிப்படை விலை INR 50 லட்சம்) – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 1.6 கோடி கொடுத்து இவரை பெற்றுக் கொண்டது.
  • தில்ஷன் மதுஷங்கா (அடிப்படை விலை INR 50 லட்சம்) மும்பை இந்தியன்ஸ் அணி 4.6 கோடிக்கு இவரை எடுத்துக் கொண்டது.

Follow our Twitter Page for More Latest News Updates

  • சுபம் துபே (அடிப்படை விலை INR 20 லட்சம்) ராஜஸ்தான் ராயல்ஸுக்கு 5.8 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டார்
  • சமீர் ரிஸ்வி (அடிப்படை விலை INR 20 லட்சம்) CSK அணி அவரை 8.4 கோடிக்கு எடுத்துக் கொண்டது.
  • ஆங்கிரிஷ் ரகுவன்ஷி (அடிப்படை விலை INR 20 லட்சம்) KKRக்கு 20 லட்சத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.
  • அர்ஷின் குல்கர்னி (அடிப்படை விலை INR 20 லட்சம்) LSG அணி இவரை அடிப்படை விளையான 20 லட்சத்திற்கு ஒப்பந்தம் செய்தது
  • ஷாருக் கான் (அடிப்படை விலை INR 20 லட்சம்) தமிழக வீரரை குஜராத் டைட்டன்ஸ் அணி 7.4 கோடிக்கு தனது அணியில் சேர்த்துக் கொண்டது.
  • ரமன்தீப் சிங் (அடிப்படை விலை INR 20 லட்சம்) KKRக்கு 20 லட்சத்துக்கு வாங்கப்பட்டார்.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

  • காட்மோர் (அடிப்படை விலை INR 40 லட்சம்) ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அவரை ஏலத்தில் தேர்வு செய்து கொண்டது.
  • ரிக்கி புய் (அடிப்படை விலை INR 20 லட்சம்) டெல்லி கேபிடல்ஸ் அணி இவரை 20 லட்சத்திற்கு அணியின் இணைத்து கொண்டது
  • குமார் குஷாக்ரா (அடிப்படை விலை INR 20 லட்சம்) டெல்லி கேபிடல்ஸ் அணி இவரை 7.2 கோடிக்கு ஏலத்தில் எடுத்துக் கொண்டது.
  • யாஷ் தயாள் (அடிப்படை விலை INR 20 லட்சம்) இந்திய வீரரான இவரை RCB அணி 5 கோடி ரூபாய்க்கு போட்டி போட்டு எடுத்தது.
  • சுஷாந்த் மிஸ்ரா (அடிப்படை விலை INR 20 லட்சம்) குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு 2.2 கோடிக்கு விற்கப்பட்டார்.
  • ஆகாஷ் சிங் (அடிப்படை விலை INR 20 லட்சம்) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அடிப்படை விலையிலேயே இவரை பெற்றுக் கொண்டது
  • கார்த்திக் தியாகி (அடிப்படை விலை INR 20 லட்சம்) குஜராத் டைட்டன்ஸ் இவரை 60 லட்சத்திற்கு அணியில் எடுத்துக் கொண்டது
Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!