IPL 2021, KKR vs RCB LIVE Updates: கொல்கத்தா அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!

0
IPL 2021, KKR vs RCB LIVE Updates: கொல்கத்தா அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!
IPL 2021, KKR vs RCB LIVE Updates: கொல்கத்தா அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!
IPL 2021, KKR vs RCB LIVE Updates: கொல்கத்தா அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!

கொரோனா நோய் தொற்றினால் பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டிகள் தற்போது மீண்டும் தொடங்கி உள்ளது. அதனை தொடர்ந்து, இன்று (செப் 20)  31வது ஆட்டத்தில் கொல்கத்தா – பெங்களூர் அணிகள் களத்தில் களத்தில் சந்தித்தது. விறுவிறுப்பாக சென்ற இன்றைய போட்டியில் கொல்கத்தா அணியின் வெங்கடேஷ் ஐயர், கில் மற்றும் வருண் சக்ரவர்த்தி ஆகியோர் களத்தில் கலக்கியுள்ளனர். இதனால் கொல்கத்தா அணி 94/ 1 மற்றும் 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது.

IPL 2021 : KKR vs RCB இன்று பலப்பரீட்சை – உத்தேச 11 அணி, பிட்ச் ரிப்போர்ட்!

RRB VS KKR LIVE UPDATES:

  • 10 ஓவர் – 9 வது ஓவரின் சாஹல் எறிந்த அடுத்தடுத்த பந்துகளில் வெங்கடேஷ் ஐயர் 3 பவுண்டரிகளை அடித்துள்ளார். 9 ஓவரின் முதல் பந்தில் கில் 48 ரன்கள் எடுத்து அவுட்டானார். இறுதியில் 94 ரன்களுக்கு 1 விக்கெட் இழப்பில் கொல்கத்தா அணியினர் 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளனர்.
  • 9 ஓவர் – ஹஸரங்கா எறிந்த பந்தில் 7.6 வது பந்தில் வெங்கடேஷ் ஐயர் ஒரு பவுண்டரி அடித்துள்ளார். ஹர்ஷல் படேலின் 8.5 வது பந்தில் கில் மீண்டும் ஒரு பவுண்டரி அடித்துள்ளார். 9 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி 82 ரன்கள் எடுத்துள்ளது. ஒரு விக்கெட் கூட இழக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
  • 7 ஓவர் – 5.4 ஓவரில் சாஹல் பந்தில் கில் 1 பவுண்டரி அடித்துள்ளார். 7.2 ஓவர் பந்தில் கில் மீண்டும் ஒரு சிக்ஸர் அடித்துள்ளார். அணி 70 ரன்கள் எடுத்துள்ளது.
  • 5 ஓவர் – 4.4 வது பந்தில் ஜேமிசன் எறிந்த பந்தில் கில் பவுண்டரி விரட்டியுள்ளார். 5 வது ஓவரின் இறுதி பந்தில் வெங்கடேஷ் 1 சிக்ஸர் அடித்து அசத்தியுள்ளார். கொல்கத்தா அணி 5 ஓவர் முடிவில் ( 45/0) ரன்களை எடுத்துள்ளது.
  • 3 ஓவர் – சுப்மேன் கில் 1.2 ஓவரில் பவுண்டரி அடித்துள்ளார். 2 ஓவர் முடிவில் வெங்கடேஷ் 9 மற்றும் கில் 8 ரன்கள் எடுத்துள்ளனர். கொல்கத்தா அணி (20/0) ரன்கள் எடுத்துள்ளது. 3 வது ஓவர் முடிவில் அணி ( 22/ 0) ரன்கள் எடுத்துள்ளது.
  • 1 ஓவர் – பெங்களூர் அணியின் சிராஜ் முதலில் பவுலிங்கை தொடங்கியுள்ளார். சுப்மேன் கில் மற்றும் வெங்கடேஷ் ஐயர் பேட்டிங்கை தொடங்கியுள்ளனர். வெங்கடேஷ் முதல் ஓவரில் 2 பவுண்டரிகளை விரட்டி உள்ளார். முதல் ஓவர் முடிவில் கொல்கத்தா அணி 10 ரன்களை எடுத்துள்ளது.

93 ரன்கள் இலக்கை நோக்கி கொல்கத்தா அணி களமிறங்கியுள்ளது.

  • 19 ஓவர் – 19 ஓவர் முடிவிலேயே பெங்களூர் அணியின் வீரர்கள் அனைவரும் ஆட்டத்தை இழந்துள்ளனர். அணி இறுதியாக ( 92- 9) ரன்கள் எடுத்துள்ளது. பெங்களூர் வீரர்கள் விரைவில் ஆட்டத்தை இழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அணியின் அதிக ரன்களை படிக்கல் (22 ரன்கள்) எடுத்துள்ளார்.
  • 18 ஓவர் – 16.6 வது பந்தில் பெர்குசன் எறிந்த பந்தின் வேகத்தில் ஹர்ஷல் பட்டேல் 12 ரன்கள் எடுத்து அவுட்டானார். அணி 83 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்துள்ளது. பிரசித் கிருஷ்ணா பணத்திற்கு சிராஜ் பவுண்டரி அடித்துள்ளார். இதனால் 18 ஓவர் முடிவில் அணி 89 ரன்கள் எடுத்துள்ளது.
  • 16 ஓவர் – 15.3 வது ஓவரில் கைல் ஜேமிசன் வருண் சக்ரவர்த்தியின் பந்தில் ரன் அவுட் ஆகியுள்ளார். 16 வது ஓவர் முடிவில் பெங்களூர் அணி 79 ரன்கள் எடுத்துள்ளது. 8 விக்கெட்டுகள் இழந்துள்ளது.
  • 15 ஓவர் – 15 வது ஓவரில் பெங்களூரு அணி 68 ரன்கள் எடுத்துள்ளது. 7 விக்கெட்டுகள் இழந்துள்ளது. ஹர்ஷல் படேல் ஒரு பவுண்டரி அடித்துள்ளார்.
  • 13.4 ஓவர் – 13. 4 வது ஓவரில் வருண் சக்ரவர்த்தியின் பந்தில் சச்சின் பேபி ஆட்டமிழந்துள்ளார்.
  • 13 ஓவர் – 13 வது ஓவர் முடிவில் பெங்களூர் அணி 66 ரன்கள் எடுத்துள்ளது. 6 விக்கெட்டுகளை இழந்துள்ளது. அடுத்தடுத்து பெங்களூர் அணியின் வீரர்கள் வெளியேறி உள்ளதால் ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.
  • 11.4 ஓவர் – 11.4 வது ஓவரில் சக்கரவர்த்தி எறிந்த பந்தில் மாக்ஸ்வெல் பௌல்ட் ஆகியுள்ளார். அணி 63 ரங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்துள்ளது. அடுத்த பந்தில் ஹசரங்கா வந்த வேகத்தில் ஆட்டத்தை இழந்துள்ளார்.
  • 11 ஓவர் – 11 வது ஓவர் முடிவில் பெங்களூர் அணி 60 ரன்கள் எடுத்துள்ளது, மற்றும் 4 விக்கெட்டுகள் இழந்துள்ளது. சச்சின் பேபி 5 ரன்கள் மற்றும், மாக்ஸ்வெல் 10 ரன்கள் எடுத்துள்ளனர்.
  • 9 ஓவர் – 9 வது ஓவர் தொடக்கத்தில் ஏபி டிவில்லியர்ஸ,  ரசூல் பந்தில் டக் அவுட் ஆகியுள்ளார். அணி 52 ரன்கள் எடுத்துள்ளது.
  • 8 ஓவர் – 8 வது ஓவர் முடிவில் பெங்களூர் அணியின் ஸ்ரீகர் பரத் 16 ரன்கள் மற்றும் மாக்ஸ்வெல் 5 ரன்கள் எடுத்துள்ளனர். ரசூல் அடித்த பந்தில் 8.1 ஓவரில் ஸ்ரீகர் பரத் ஆட்டத்தை இழந்துள்ளார்.
  • 5.5 ஓவர் – 5.5 வது ஓவர் முடிவில் தேவ்தத் படிக்கல் 22 ரன்கள் எடுத்து லோக்கி பெர்குசன் எறிந்த பந்தில் அவுட் ஆகி ஆட்டத்தை இழந்துள்ளார்.
  • 4 ஓவர் – 4 வது ஓவர் முடிவில் படிக்கல் 15 ரன்கள் எடுத்துள்ளார். 1 பவுண்டரி எடுத்துள்ளார். ஸ்ரீகர் 5 ரன்கள் எடுத்துள்ளார்.
  • 2 ஓவர் – 2 வது ஓவர் முடிவில் விராட் 5 ரன்கள் எடுத்து அவுட் ஆகியுள்ளார்.
  • 1 ஓவர் – முதலில் களமிறங்கிய பெங்களூர் அணியின் கேப்டன் விராட் மற்றும் படிக்கல் இவர்களுக்கு வரும் பந்து வீசிவருகிறார். முதல் ஓவர் முடிவில் விராட் 5 ரன்கள் மற்றும் படிகள் 4 ரன்கள் எடுத்து ஆட்டத்தை தொடங்கியுள்ளனர்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!