IPL 2021 : KKR vs RCB இன்று பலப்பரீட்சை – உத்தேச 11 அணி, பிட்ச் ரிப்போர்ட்!

0
IPL 2021 KKR vs RCB இன்று பலப்பரீட்சை - உத்தேச 11 அணி, பிட்ச் ரிப்போர்ட்!
IPL 2021 KKR vs RCB இன்று பலப்பரீட்சை - உத்தேச 11 அணி, பிட்ச் ரிப்போர்ட்!

IPL 2021 : KKR vs RCB இன்று பலப்பரீட்சை – உத்தேச 11 அணி, பிட்ச் ரிப்போர்ட்!

இன்றைய ஐபிஎல் போட்டியில் மோதும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளின் நிலை, பிட்ச் ரிப்போர்ட், உத்தேச அணி விவரம் ஆகியவற்றினை இங்கு காணலாம்.

KKR vs RCB:

கொரோனா தொற்றினால் நிறுத்தி வைக்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள் தற்போது மீண்டும் தொடங்கி உள்ளது. நேற்று நடந்த 30வது ஆட்டத்தில் (இரண்டாம் கட்டத்தில் முதல் ஆட்டம்) சென்னை – மும்பை அணிகள் மோதின. அதில் சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கு சென்றுள்ளது.

IPL 2021 – RCB கேப்டன் பொறுப்பில் இருந்தும் விலகும் விராட் கோஹ்லி! ரசிகர்கள் அதிர்ச்சி!

இன்று (செப் 20) நடக்க இருக்கும் 31வது ஆட்டத்தில் கொல்கத்தா – பெங்களூர் அணிகள் கோதாவில் களம் காண உள்ளன. இந்த சீசன் துவக்கத்தில் இருந்தே பெங்களூர் அணி அசுர பலத்துடன் வருகை புரிகிறது. பேட்டிங், பௌலிங் என இரண்டிலும் பலமாக தென்படும் பெங்களூர் அணி தொடர்ந்து புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருந்தது. ஆனால் அதற்கு மாறாக கொல்கத்தா அணி துவக்கத்தில் இருந்து சரிவையே சந்தித்து வருகிறது.

இதுவரை மோதிய போட்டிகளில் வெற்றியை எட்ட முடியாமல் தடுமாறி வருகிறது. பெங்களூர் அணி பட்டியலில் 3வது இடத்தில பிளே ஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்கிறது. கொல்கத்தா அணி 4 புள்ளிகளுடன் 7வது இடத்தில் உள்ளது. கொல்கத்தா அணியை காட்டிலும் பெங்களூர் அணி சற்று பலமாகவே உள்ளது.

பிட்ச் ரிப்போர்ட்:

இன்று போட்டி நடக்கும் ஷேக் சயீத் ஸ்டேடியம் ஆனது பேட்டிங்கிற்கு சொர்க்கபுரியாக திகழும். பந்து வீச்சில் வேகப்பந்து வீச்சு சற்று ஈடுபடும் என்றாலும் பேட்டிங்கிற்கே அதிக அனுகூலமாக அமையும். இரு அணிகளிலும் வாணவேடிக்கை காட்ட விராட் கோஹ்லி, டிவில்லியர்ஸ், மேக்ஸ்வெல், ரசல், ராணா, தினேஷ் கார்த்திக் என வீரர்கள் அணிவகுத்து நிற்கின்றனர். இவர்கள் மட்டையை சுழற்றினால் ரசிகர்களுக்கு விருந்து தான்.

இரு அணிகள் இதுவரை:

ஐபிஎல் போட்டிகளில் இதுவரை இரண்டு அணிகளும் இது வரை 28 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் கொல்கத்தா அணி 15 முறையும், பெங்களூர் அணி 13 முறையும் வெற்றி பெற்றுள்ளன. இந்த சீசனில் இவ்விரு அணிகளும் மோதிய போட்டியில் பெங்களூர் அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது.

அப்போட்டியில் பெங்களூர் அணி டிவில்லியர்ஸ் (76*), மேக்ஸ்வெல் (78) ஆகியோரின் அதிரடியால் 204 ரன்களை குவித்து பிரமிக்க வைத்தது. ஆனால் கொல்கத்தா அணி 166 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. இதனால் இந்த ஆட்டத்தில் அதற்கு பழி தீர்க்க கொல்கத்தா அணி வரிந்து கட்டும்.

IPL 2021, CSK vs MI LIVE Updates : 20 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி அசத்தல் வெற்றி பெற்றது!!

உத்தேச அணி விவரம்:

நேற்றைய போட்டியில் ரோஹித் சர்மா மும்பை அணிக்கு கேப்டன் ஆக களமிறங்கவில்லை. தனிமைப்படுத்துதலில் இருந்தார். அதே போல் இன்று விராட் கோஹ்லி களமிறங்குவாரா என்பது சந்தேகமாக உள்ளது. இல்லையெனில், டிவில்லியர்ஸ் அல்லது மேக்ஸ்வெல் இவர்களில் யாராவது ஒருவர் அணியை வழிநடத்துவார்.

  • பெங்களூர் அணி – தேவதத் படிக்கல், விராட் கோலி, ஏபி டிவில்லியர்ஸ், க்ளென் மேக்ஸ்வெல், ரஜத் படிதர், வனிந்து ஹசரங்கா, ஷாபாஸ் அகமது, கைல் ஜேமிசன், ஹர்ஷல் பட்டேல், முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல்
  • கொல்கத்தா அணி – ஷுப்மான் கில், நிதிஷ் ராணா, ராகுல் திரிபாதி, ஈயின் மோர்கன், தினேஷ் கார்த்திக், ஆண்ட்ரே ரஸ்ஸல், சுனில் நரைன், வருண் சக்கரவர்த்தி, பிரசித் கிருஷ்ணா, லோக்கி பெர்குசன், சந்தீப் வாரியர்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!