IOCL நிறுவனத்தில் ரூ.1,27,000/- ஊதியத்தில் புதிய வேலைவாய்ப்பு – 60+ காலியிடங்கள்..!

0
IOCL நிறுவனத்தில் ரூ.1,27,000/- ஊதியத்தில் புதிய வேலைவாய்ப்பு - 60+ காலியிடங்கள்..!
IOCL நிறுவனத்தில் ரூ.1,27,000/- ஊதியத்தில் புதிய வேலைவாய்ப்பு - 60+ காலியிடங்கள்..!
IOCL நிறுவனத்தில் ரூ.1,27,000/- ஊதியத்தில் புதிய வேலைவாய்ப்பு – 60+ காலியிடங்கள்..!

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) நிறுவனத்தில் தற்போது புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Grade 3, Grade 5 பதவிகளுக்கு என மொத்தமாக 62 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்தவர்கள் இப்பதிவின் மூலம் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான முழு விவரங்களையும் இப்பதிவில் எளிமையாக கொடுத்துள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Indian Oil Corporation Limited (IOCL)
பணியின் பெயர் Grade 3, Grade 5
பணியிடங்கள் 62
விண்ணப்பிக்க கடைசி தேதி 25.02.2022
விண்ணப்பிக்கும் முறை Online
IOCL காலிப்பணியிடம் :

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பில், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் Grade 3 பதவிக்கு 16 பணியிடம் மற்றும் Grade 5 பதவிக்கு 46 பணியிடம் என மொத்தம் 62 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

IOCL கல்வித்தகுதி :

விண்ணப்பதாரர் அரசு அல்லது அரசு அங்கீகரித்த கல்லூரிகள் / பல்கலைக்கழகங்கள் / கல்வி நிறுவனங்களில் விண்ணப்பிக்கும் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் 12th / Diploma / B.Sc/ GNM / Graduate போன்ற பணிக்கு தகுந்தாற்போல் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இந்தியன் ஆயில் நிறுவன அனுபவம் :

இப்பணிகளை விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் குறைந்தது 1 வருடம் முதல் 3 வருடங்கள் வரை பணிபுரிந்த அனுபவம் பெற்றவராக இருப்பது அவசியமாகும். மேலும் அனுபவம் பற்றிய கூடுதல் தகவலுக்கு அறிவிப்பை வாசிக்கவும்.

இந்தியன் ஆயில் நிறுவன வயது வரம்பு :

விண்ணப்பதாரர் 25.02.2022 அன்றைய நாளின் படி குறைந்தது 18 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும். மேலும் அதிகபட்ச வயது வரம்பு மற்றும் தளர்வுகள் குறித்த தகவல்களை அறிவிப்பில் காணலாம்.

IOCL ஊதிய தொகை :
  • Grade 5 பதவிக்கு தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு ரூ.32,000/- முதல் ரூ.1,27,000/- வரை மாத ஊதியம் அளிக்கப்படும்.
  • Grade 3 பதவிக்கு தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு ரூ.26,600/- முதல் ரூ.90,000/- வரை மாத ஊதியம் அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
IOCL தேர்வு முறை :
  • Computer Based Test
  • Document Verification
இந்தியன் ஆயில் நிறுவன விண்ணப்ப கட்டணம் :
  • General மற்றும் OBC வகுப்பு விண்ணப்பதாரர்கள் ரூ.200/- விண்ணப்ப கட்டணம் ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
  • SC / ST / EWS / Persons with Benchmark Disabilities / Ex-Servicemen போன்ற வகுப்பைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது என தெரிவித்துள்ளது.
இந்தியன் ஆயில் நிறுவன விண்ணப்பிக்கும் முறை :

மேற்கண்ட இந்தியன் ஆயில் நிறுவனத்தின் பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் நாங்கள் கொடுத்துள்ள இணைப்பின் மூலம் அதிகாரப்பூர்வ தளத்தில் உள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். இப்பணிக்கான கால அவகாசம் 25.02.2022 அன்றுடன் முடிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Indian Oil Corporation Notification PDF 

Indian Oil Corporation Online Apply link

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!