ஆதார் சேவைகளை வழங்குவதற்கான புதிய மொபைல் ஆப் அறிமுகம் – முழு விவரங்களுடன்!

0
ஆதார் சேவைகளை வழங்குவதற்கான புதிய மொபைல் ஆப் அறிமுகம் - முழு விவரங்களுடன்!
ஆதார் சேவைகளை வழங்குவதற்கான புதிய மொபைல் ஆப் அறிமுகம் - முழு விவரங்களுடன்!
ஆதார் சேவைகளை வழங்குவதற்கான புதிய மொபைல் ஆப் அறிமுகம் – முழு விவரங்களுடன்!

ஆதார் அட்டையின் மூலமாக கிடைக்கும் அனைத்து அரசின் திட்டங்களையும் வழங்குவதற்கான புதிய மொபைல் ஆப் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த மொபைல் ஆப் தொடர்பான முழு விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆதார் சேவை:

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு இந்தியக் குடிமக்களும் ஒரே டிஜிட்டல் தளத்தின் மூலமாகவே அரசின் அனைத்து சேவைகளையும் பெறுவதற்கு மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) மற்றும் தேசிய மின் ஆளுமைப் பிரிவு (NeGD) தற்போது UMANG என்கிற மொபைல் செயலி ஒன்றை உருவாக்கியுள்ளனர். மேலும், இந்த UMANG ஆப் மூலமாக ஆதார் அட்டையின் மூலமாக கிடைக்கும் அனைத்து சேவைகளும் இந்த செயலியின் மூலமாகவே செயல்படுத்த முடியும்.

தற்போது இந்த மொபைல் செயலியின் மூலமாக எந்தெந்த ஆதார் சேவைகளை வாடிக்கையாளர்கள் பெற முடியும் என்பது குறித்த தகவலை பார்க்கலாம். முதலில், இந்த செயலியின் மூலமாக அனைத்து ஆதார் நிலையையும் சரிபார்த்துக் கொள்ளலாம் மற்றும் ஆதார் அட்டையின் பதிவு அல்லது புதுப்பித்தல் கோரிக்கையின் நிலையையும் இந்த செயலியின் மூலமாகவே சரிபார்க்க முடியும். மேலும், ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண் மற்றும் மின்னஞ்சலையும் இந்த செயலின் மூலமாக சரிபார்த்து கொள்ளலாம். மேலும் குடிமக்கள் இந்த மொபைல் செயலியின் மூலமாகவே ஆதார் எண் அல்லது பதிவு ஐடி சேவைகளை கண்டறிந்து கொள்ளலாம்.

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்யும் – வானிலை அறிக்கை!

Exams Daily Mobile App Download

மேலும், இந்த செயலியின் மூலமாக வேறு என்ன விதமான சேவைகள் கிடைக்கிறது என்பதையும் பார்க்கலாம். அதாவது, இந்த UMANG ஆப் மூலமாக பயோமெட்ரிக் கூட்டுதல் அல்லது திறப்பது, ஆதார் பதிவிறக்கம் ஆஃப்லைன் இ-கேஒய்சி, விர்ச்சுவல் ஐடி உருவாக்கம், கட்டண வரலாறு, பதிவு மற்றும் புதுப்பிப்பு நிலையைச் சரிபார்ப்பது, ஆதார் எண்ணை மீட்டெடுப்பது, ஆதாரை சரிபார்ப்பது ஆகிய அனைத்து சேவைகளையும் இந்த திட்டத்தின் மூலமாகவே பெற்றுக்கொள்ள முடியும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!