Post Office இல் சூப்பர் சேமிப்பு திட்டம் – வட்டி விகிதம் குறித்த முழு விவரங்கள் இதோ!

0
Post Office இல் சூப்பர் சேமிப்பு திட்டம் - வட்டி விகிதம் குறித்த முழு விவரங்கள் இதோ!
Post Office இல் சூப்பர் சேமிப்பு திட்டம் - வட்டி விகிதம் குறித்த முழு விவரங்கள் இதோ!
Post Office இல் சூப்பர் சேமிப்பு திட்டம் – வட்டி விகிதம் குறித்த முழு விவரங்கள் இதோ!

இந்திய அஞ்சல் துறையில் பல்வேறு சேமிப்பு திட்டங்கள் நடைமுறையில் உள்ளது. இதில் ஒவ்வொரு சேமிப்பு திட்டங்களிலும் பெறப்படும் லாபங்கள் மாறுபடுகிறது. தற்போது இந்த சேமிப்பு திட்டங்கள் குறித்த வட்டி விகிதங்கள் பற்றி விரிவாக பார்க்கலாம்.

சேமிப்பு திட்டம்

கொரோனா பரவல் காரணமாக பொதுமக்கள் பல்வேறு பொருளாதார நெருக்கடி நிலை சந்தித்து வந்தனர். அதனால் தங்கள் பணத்தை பாதுகாப்பான முறையில் சேமிக்கவும் நிலையான வருமானத்தை பெறவும் பல்வேறு முறைகளில் முதலீடுகளை செலுத்தத் தொடங்கினர். இதில் குறிப்பாக அஞ்சல் சேமிப்பு திட்டங்களில் அதிகளவு பணத்தை சேமிக்க தொடங்கியுள்ளனர். ஏனெனில் சேமிப்பு திட்டங்களில் குறைவான நாட்களில் அதிக வட்டி தொகையை முதலீட்டாளர்கள் பெற முடிகிறது. அத்துடன் குறைந்தபட்சமாக 100 ரூபாய் இருந்து சேமிப்புத் திட்டங்களில் கணக்கை தொடங்க முடியும்.

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – பொங்கல் பரிசு! களத்தில் இறங்கும் முதல்வர்!

தற்போது சேமிப்பு திட்டங்களில் வழங்கப்படும் வட்டி விகிதம், வரி விலக்கு உள்ளிட்ட பலன்களை பற்றி பார்க்கலாம். முதலாவதாக மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டத்தில் ஆண்டுக்கு 7.4% வரை வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் வங்கிகளில் வழங்கப்படும் வட்டிகளை காட்டிலும் அதிகமான அளவு வட்டி விகிதத்தை வழங்குகிறது. அடுத்ததாக கிசான் விகாஸ் பத்திர திட்டத்தில் 6.9% வரை வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இதில் 10 வயதுக்கு மேற்பட்டவர்கள் கூட சேமிப்பு கணக்கை தொடங்க முடியும். இதையடுத்து பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் ஆண்டுக்கு 7.1% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.

சென்னை: அதிரடியாக உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!

இத்திட்டத்தில் வரி விலக்கு சலுகைகளும் வழங்கப்படுகிறது. அடுத்ததாக சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தில் 7.6% வட்டி வழங்கப்படுகிறது. இதில் பிறந்த குழந்தை முதல் 10 வயது உடைய குழந்தைகள் வரை அவர்களின் பெற்றோர் பெயரில் சேமிப்பு கணக்கை தொடங்க முடிகிறது. இறுதியாக ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தில் குறைந்தபட்ச தொகையாக 100 ரூபாய் முதல் கணக்கை தொடங்க முடியும். அதனால் இத்திட்டம் சாதாரண மக்களுக்கு பெருமளவு பயனுள்ளதாக உள்ளது இத்திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள் ஆகும். தற்போது இத்திட்டத்திற்கு 5.8% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!