இந்திய கடற்படையில் 2500 காலிப்பணியிடங்கள் – 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

0
இந்திய கடற்படையில் 2500 காலிப்பணியிடங்கள் - 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
இந்திய கடற்படையில் 2500 காலிப்பணியிடங்கள் - 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
இந்திய கடற்படையில் 2500 காலிப்பணியிடங்கள் – 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

இந்திய கடற்படை தற்போது மாபெரும் வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் கடலோர காவல் படையில் காலியாக உள்ள Artificial Apprentice, Senior Secondary Recruit பணிகளுக்கான தகுதியும், திறமையும் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு என மொத்தமாக 2500 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. பணிக்கு தேர்வு செய்யும் முறை, வயது, கல்வி ஆகியவை பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Indian Navy
பணியின் பெயர் Artificial Apprentice, Senior Secondary Recruit
பணியிடங்கள் 2500
விண்ணப்பிக்க கடைசி தேதி 05.04.2022
விண்ணப்பிக்கும் முறை Online
கடற்படை காலிப்பணியிடங்கள்:

இந்திய கடற்படையில் தற்போது காலியாக உள்ள Artificial Apprentice, Senior Secondary Recruit பணிகளுக்கு என மொத்தமாக 2500 பணியிடங்கள் பின்வருமாறு ஒதுக்கப்பட்டுள்ளது.

  • Artificial Apprentice – 500
  • Senior Secondary Recruit – 2000
    AA, SSR கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

AA, SSR வயது வரம்பு:

1.8.2022 அன்றைய நாள் முதல் 31.7.2005 அன்றைய நாளுக்குள் பிறந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். 31.7.2005 நாளுக்கு பின் பிறந்தவர்களின் விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது.

உங்கள் அரசுப்பணி கனவை நினைவாக்க – TNPSC Coaching Center Join Now

Indian Navy ஊதியம்:

தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர் Pay Level 3 படி குறைந்தபட்சம் ரூ.21,700/- முதல் அதிகபட்சம் ரூ.69,100/- வரை ஊதியம் பெறுவார்கள்.

Indian Navy தேர்வு முறை:

விண்ணப்பதாரர் பின்வரும் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

  • Shortlisting
  • Written Test
  • Physical Fitness Test (PFT)
  • Medical Test
Indian Navy விண்ணப்பக்கட்டணம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் ரூ.60 விண்ணப்பக் கட்டணத்துடன் சேர்த்து GST-யும் Online மூலம் செலுத்த வேண்டும்.

Indian Navy விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் பதிவின் இறுதியில் தரப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் தங்களின் பதிவுகளை இறுதி நாளுக்குள் செய்து கொள்ள வேண்டும். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க 05.04.2022 ம் தேதி இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!