நாட்டின் 5G இணைய சேவையின் வேகம் முக்கிய பகுதிகளில் அதிகரிப்பு – அரசின் கோரிக்கை!

0
நாட்டின் 5G இணைய சேவையின் வேகம் முக்கிய பகுதிகளில் அதிகரிப்பு - அரசின் கோரிக்கை!
நாட்டின் 5G இணைய சேவையின் வேகம் முக்கிய பகுதிகளில் அதிகரிப்பு - அரசின் கோரிக்கை!
நாட்டின் 5G இணைய சேவையின் வேகம் முக்கிய பகுதிகளில் அதிகரிப்பு – அரசின் கோரிக்கை!

இந்தியாவில் உள்ள முக்கிய இடங்களில் தொலை தொடர்பு நிறுவனங்களின் 5G அதிவேக இணைய சேவையை மேம்படுத்த மத்திய அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

G20 தலைவர்:

இந்தியா, கடந்த டிசம்பர் 1, 2022 முதல் நவம்பர் 30, 2023 வரை G20 நாடுகளின் தலைவர் பதவியை ஏற்றுக் கொண்டுள்ளது. இதனால் உலக நாடுகளின் கவனம் இந்தியாவின் மீது அதிகம் இருக்கும் சூழல் உள்ளது. முக்கியமாக இது தொடர்பாக நாட்டில் பல பகுதிகளில் ஆலோசனை கூட்டங்கள் நடைபெற உள்ளது. இதனால், மத்திய அமைச்சகம் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பார்தி ஏர்டெல் போன்ற நாட்டின் தொலை தொடர்பு நிறுவனங்களுடன் ஆலோசனை கூட்டத்தை நடத்தியது.

நாளை முதல் அடுத்த 3 நாட்களுக்கு வெளுத்து வாங்க இருக்கும் மழை – வானிலை மையம் தகவல்!!

Follow our Instagram for more Latest Updates

அந்த கூட்டத்தில், G20 ஆலோசனை கூட்டங்கள் மற்றும் அதற்கான உள் நாட்டு, அயல்நாட்டு பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் தங்கும் குறிப்பிட்ட பகுதிகளை சுற்றியும் 5G இணைய சேவையை அதிக வேகத்தில் அளிப்பதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், இறுதி G20 உச்சி மாநாடு செப்டம்பர் 9 மற்றும் 10ம் தேதிகளில் நடக்க உள்ளதாகவும், அதற்கு முன்னதாக G20 நாடுகளின் ஆலோசனை கூட்டம் நாட்டின் 50 முக்கிய நகரங்கள், 32 பணிநிலைகளில் என்று மொத்தமாக 200 கூட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளது.

இதனால், தொலை தொடர்பு துறையில் நமது நாட்டின் வளர்ச்சியை நாம் உலகின் மற்ற நாடுகளுக்கு காண்பிக்க தகுந்த நேரம் இது, எனவே இந்த ஆலோசனை கூட்டத்தில் டேட்டா வேகம், கால் டிராப் மற்றும் இதர குறைபாடுகளை நீக்கி சிறப்பான, தரம் உயர்ந்த சேவையை அளிக்க வேண்டும் என்றும் தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு அரசிடம் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!