இந்தியப் படைகள் (பாதுகாப்பு) செய்திகள் – அக்டோபர் 2018

0

இந்தியப் படைகள் (பாதுகாப்பு) செய்திகள் – அக்டோபர் 2018

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் – அக்டோபர் 2018

இங்கு அக்டோபர்  மாதத்தின் முக்கிய நாட்கள், கருப்பொருள் மற்றும் அன்றைக்கு நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் பற்றிய விவரங்களை வழங்கியுள்ளோம். இது அணைத்து வகையான போட்டித்தேர்வுகளுக்கும் முக்கியமான விவரங்கள் ஆகும். இதை படித்தால் UPSC, TNPSC, SSC, RRB தேர்வுகளில் பொது அறிவு – நடப்பு நிகழ்வுகள் பிரிவில் கேட்க படும் கேள்விகளுக்கு எளிதில் பதில் அளிக்கலாம்.

இந்திய பாதுகாப்பு படைகள்

இந்திய மற்றும் வியட்நாமிய கடலோர காவலாளர்கள் இடையே உயர் மட்ட சந்திப்பு

  • 2015 ஆம் ஆண்டில் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கை விதிகளின் கீழ், இந்திய மற்றும் வியட்நாம் கடலோரப் படைகளுக்கு இடையே ஒரு உயர் நிலைக் கூட்டம் கடலோர காவல்படை மையத்தில் நடைபெற்றது.

IBSAMAR- 6வது பதிப்பு

  • இந்தியா, பிரேசில் மற்றும் தென் ஆப்பிரிக்க கடற்படைகள் இடையே ஒரு கூட்டு பல தேசிய கடல் பயிற்சிக்கான IBSAMAR இன் ஆறாவது பதிப்பு, தென் ஆப்பிரிக்காவில் சிமன்ஸ் டவுனில் 01 முதல் 13 அக்டோபர் 18 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

சஹ்யோக் [Sahyog HOP TAC-2018] பயிற்சி

  • இந்தியா மற்றும் வியட்நாம் கடலோரக் காவலர்கள் இணைந்து சஹ்யோக்[Sahyog HOP TAC-2018] பயிற்சி – அவர்களுக்கு இடையேயான பணிநிலை உறவுகளை வலுப்படுத்தும் நோக்கம் கொண்டு சென்னையில் நடந்தது.

வரலாற்று சிறப்புமிக்க பிலிப்பைன் போர் விளையாட்டுகலிள் “Kamandag” இணைகிறது ஜப்பான் இராணுவம்

  • பிலிப்பைன்ஸில் அமெரிக்க மற்றும் பிலிப்பைன் இராணுவ குழுக்களுடனான கூட்டு பயிற்சியில் ஜப்பானிய ராணுவம் ஈடுபட்டது, இது டோக்கியோவின் கவச வாகனங்கள் முதல் முறையாக 1945 இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் வெளிநாட்டு மண்ணில் பயன்படுத்தப்பட்டது.

JIMEX 18

  • ஜப்பான் மற்றும் இந்தியா இடையேயான இருதரப்பு கடல்சார் பயிற்சி (JIMEX 18) விசாகப்பட்டினத்தில் துவங்குகிறது.

ஷங்க்நாத் [Shankhnaad]

  • வீர் மஹார் படையினரின் வீரத்தை வெளிப்படுத்தும் ஷங்க்நாத் என்ற இராணுவ இசையை, இராணுவ வீரர்களின் தலைவரான ஜெனரல் பிபின் ராவத் நாட்டிற்காக அர்ப்பணித்தார். இந்த இசையை பிரிகேடியர் விவேக் சோஹல் (ஓய்வு பெற்றவர்) எழுதி, டாக்டர் (திருமதி) தனுஜா நஃப்தே இசை அமைத்துள்ளார்.

உயர் தர இராணுவ ட்ரோன்கலை பாகிஸ்தானுக்கு விற்க சீனா திட்டம்

  • 48 உயர்தர இராணுவ ட்ரோன்களை அதன் நட்பு நாடான பாகிஸ்தானுக்கு சீனா விற்க திட்டம்.

சீனா மற்றும் ஆசியான் கூட்டு கடற்படை பயிற்சிகளை நடத்தத் திட்டம்

  • சீனா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் தங்கள் முதல் கூட்டு கடற்படை பயிற்சிகளை அடுத்த வாரம் நடத்த திட்டம். சீனாவின் கடற்படைகளும் 10 நாடுகளைக்கொண்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கமும் (ஆசியான்) ஆசியான்-சீன கடல்சார் பயிற்சி தென் சீனக் கடலில் ஜான்ஜியாங்கிற்கு அருகே நடத்தத்திட்டம்.

IFR இல் பங்கேற்க தென் கொரியா விரைந்தது INS ரானா

  • ஐ.என்.எஸ். ரானா சர்வதேச கப்பல் மதிப்பீட்டு ஆய்வில் (IFR) பங்கேற்க கொரியாவின் ஜிஜு, தென் கொரியா வந்து சேர்ந்தது.

32 இந்தியா  இந்தோனேசியா ஒருங்கிணைந்த ரோந்து பயிற்சி (CORPAT)

  • இந்தியா-இந்தோனேசியா இடையேயான 32 வது வருடாந்திர ஒருங்கிணைந்த ரோந்துப் பயிற்சி (IND-INDO ​​CORPAT)ல் பங்குபெற இந்திய கடற்படைக் கப்பல் குலிஷ் பெலாவன் துறைமுகம், இந்தோனேசியா வந்தடைந்தது.

ஆழமான நீர்மூழ்கிக் கப்பல் மீட்பு வாகனம் (DSRV) புதிதாகசேர்க்கப்பட்டது

  • புதிதாக சேர்க்கப்பட்ட ஆழமான நீர்மூழ்கி மீட்பு வாகனம் (டி.எஸ்.ஆர்.வி) சோதனை வெற்றிகர அடைந்ததால் இந்திய கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல் மீட்பு திறன்களை அதிகரித்துள்ளது.

 ‘DHARMA GUARDIAN-2018’

  • நவம்பர் 01 முதல் நவம்பர் 14 ஆம் தேதி வரை இந்திய இராணுவம் மற்றும் ஜப்பான் தரை சுய பாதுகாப்பு படையை உள்ளடக்கிய முதல் கூட்டு இராணுவப் பயிற்சி ‘DHARMA GUARDIAN-2018’ ஆகியவற்றை இந்தியா மற்றும் ஜப்பான் நடத்த உள்ளன.
  • இந்தியப்படை சார்பில் 6/1 கூர்க்கா ரைபிள்ஸ் கலந்து கொள்வார்கள்.

இந்தியா, ஜப்பான், அமெரிக்கா கூட்டு விமானப்படை பயிற்சிக்குதிட்டம்

  • இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகியவை இருதரப்பு ‘Cope India’ விமானப்படை பயிற்சியை முத்தரப்பு பயிற்சியாக உயர்த்தத்திட்டம். ஏற்கனவே மூன்று நாடுகளும் விரிவுபடுத்தப்பட்ட மலபார் கடற்படை பயிற்சியில் மேற்கொண்டு வருகின்றனர்.

நேட்டோவின் மிகப்பெரிய இராணுவப்பயிற்சி

  • பனிப்போருக்குப் பிறகு நடக்கும் நேட்டோவின் மிகப்பெரிய இராணுவ பயிற்சி நார்வேயில் தொடங்கியது.

பாதுகாப்புப்படை ஓய்வூதிய அதாலத்

  • மகாராஷ்டிராவின் பூந்த், அவுன்ட் இராணுவ நிலையத்தில் ஒரு பாதுகாப்புப்படை ஓய்வூதிய அதாலத் நடத்தப்பட்டது.

ITBP யின் 57வது தொடக்க தின அணிவகுப்பு

  • உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கிரேட்டர் நொய்டாவில் இந்திய-திபெத்திய எல்லை காவல்துறை (ITBP) யின் 57 வது தொடக்க தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

ஊட்டியில் இந்திய இராணுவத்தின் காலாட்படையின் 72வது தொடக்கதின கொண்டாட்டம்

  • இந்திய இராணுவத்தின் காலாட்படைப் படைப்பிரிவின் 72வது தொடக்க தினத்தை கொண்டாடும் வகையில், சிறப்பு அணிவகுப்பு, அணிவகுப்பு நடத்துதல் மற்றும் மாலைகளை வழங்குவது ஆகியவை சென்னை ரெஜிமென்ட் பயிற்சி மையம், வெல்லிங்டன், குன்னூர், ஊட்டி, தமிழ்நாட்டில் நடைபெற்றது.

அமெரிக்க இராணுவம் வெற்றிகரமாக கண்டம் விட்டு கண்டம் பாயும்ஏவுகணை இடைமறிப்பு அமைப்பை சோதனை செய்தது

அமெரிக்க இராணுவம் புதிய இடைமறிப்பு அமைப்பை, ஒரு நடுத்தர கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை இடைமறித்து தாக்கி அழித்து வெற்றிகரமாக சோதனை செய்தது. இது ஜப்பான் உடன் இணைந்து உருவாக்கப்பட்டது.

PDF Download

நடப்பு நிகழ்வுகள்  2018

நடப்பு நிகழ்வுகள்  WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

Facebook  Examsdaily Tamil – FB ல் சேர –கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!