இந்திய கடலோர காவல்படையில் யாந்த்ரிக் (Yantrik) பணிக்கு வேலைவாய்ப்பு 2020

0
இந்திய கடலோர காவல்படையில் யாந்த்ரிக் (Yantrik) பணிக்கு வேலைவாய்ப்பு 2020

இந்திய கடலோர காவல்படையில் யாந்த்ரிக் (Yantrik) பணிக்கு வேலைவாய்ப்பு 2020

இந்திய கடலோர காவல்படையில் யாந்த்ரிக் (Yantrik) பணிக்கு வேலைவாய்ப்பு (Coast Guard Jobs 2020) அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள், 22 மார்ச் 2020 க்குள் விண்ணப்பிக்கும்மாறு அறிவுறுத்தப்படுகிறது.

பணியிட விவரங்கள்:

மொத்தம் 37 காலியிடங்கள்.

  • Mechanical – 19
  • Electrical – 3
  • Electronics and Telecommunication – 15

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவராகவும், அதிகபட்சம் 22 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். அதாவது 1 ஆகஸ்ட் 1998 முதல் 31 ஜூலை 2002 க்குள் பிறந்தவராக இருக்க வேண்டும். இந்த இரு தேதியில் பிறந்தவர்களும் விண்ணப்பிக்கலாம். SC / ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படுகிறது.

கல்வித்தகுதி:

யாந்த்ரிக் (Yantrik) பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், 60 சதவீத மதிப்பெண்களுடன் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். டிப்ளமோவில் எலெக்ட்ரிக்கல் / மெக்கானிக்கல் / எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் டெலி கம்யூனிகேசன் (ரேடியோ / பவர்) இன்ஜினியரிங் படித்திருக்க வேண்டும். SC / ST மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு டிப்ளமோ மதிப்பெண் தகுதியில் 5 சதவீதம் தளர்வு அளிக்கப்படுகிறது.

தேர்வு முறை:

எழுத்துத்தேர்வு, நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு, உடற்திறன் தேர்வு, உடற்தகுதித் தேர்வு, மருத்துவ பரிசோதனை ஆகியவை மூலம் யாந்த்ரிக் பணிக்கு விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

கடலோரக் காவல்படையில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள், www.joinindiancoastguard.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பம் பெற்று, அதனை பூர்த்தி செய்து, மார்ச் 22 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Download Indian Coast Guard Notification 2020 Pdf
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!