இந்திய கடலோர காவல்படையில் 255 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க பிப்.19 கடைசி நாள்!

0
இந்திய கடலோர காவல்படையில் 255 காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்க பிப்.19 கடைசி நாள்!
இந்திய கடலோர காவல்படையில் 255 காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்க பிப்.19 கடைசி நாள்!
இந்திய கடலோர காவல்படையில் 255 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க பிப்.19 கடைசி நாள்!

இந்திய கடலோர காவல்படையில் 255 Navik (General Duty) and Navik (Domestic Branch) CGEPT – 02/2023 Batch பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு பிப்ரவரி மாத தொடக்கத்தில் வெளியானது. இப்பணிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க பிப்ரவரி 19 கடைசி நாள் என்பதால், ஆர்வமுள்ளவர்கள் உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இந்திய கடலோர காவல்படை வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Navik (General Duty) – 225 பணியிடங்கள் மற்றும் Navik (Domestic Branch) – 30 பணியிடங்கள் என மொத்தம் 255 பணியிடங்கள் காலியாக உள்ளன.
  • விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 22 க்குள் இருக்க வேண்டும். 01 செப்டம்பர் 2001 முதல் 31 ஆகஸ்ட் 2005 வரை பிறந்தவர்கள் மட்டுமே இப்பணிக்கு விண்ணப்பிக்க முடியும். எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு வழங்கப்பட்டுள்ளது.
  • அங்கீகாரம் பெற்ற கல்வி வாரியத்தில் கணிதம் மற்றும் இயற்பியலுடன் 10+2 தேர்ச்சி பெற்றவர்கள் Navik (General Duty) பதவிக்கு விண்ணப்பிக்கலாம். COBSE அங்கீகாரம் பெற்ற கல்வி வாரியத்தில் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் Navik (Domestic Branch) பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
  • மேற்கண்ட பணிக்கு தேர்வர்கள் Written Examination, Physical Fitness Test & Document Verification, Document Verification, Medical Examination & Police Verification மற்றும் Merit List மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
  • அவ்வாறு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.21700/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:

https://joinindiancoastguard.cdac.in/ இன் தற்போதைய வேலை வாய்ப்புகள் பிரிவில் உள்ள இந்திய கடலோர காவல்படை இணையதளத்தில் உள்ள இணைப்பின் மூலம் ஆன்லைனில் இப்பணிக்கு பிப்ரவரி 19 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Download Notification 2023 Pdf
Apply Online

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!