இந்திய கடலோர காவல் படையில் புதிய வேலைவாய்ப்பு 2023 – 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்!
Store Keeper Grade I, Store Keeper Grade II, Engine Driver மற்றும் பல்வேறு பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை இந்திய கடலோர காவல்படை ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் Pay Matrix Level 4 அளவிலான மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | Indian Coast Guard |
பணியின் பெயர் | Store Keeper Grade I, Store Keeper Grade II, Engine Driver etc |
பணியிடங்கள் | 15 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 02.10.2023,17.10.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
Indian Coast Guard காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Store Keeper Grade I, Store Keeper Grade II, Engine Driver மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள 15 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Engine Driver கல்வி தகுதி:
- இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மேலும் பணியிடம் அடிப்படையில் மத்திய அல்லது மாநில அரசில் பணிபுரிந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
Indian Coast Guard வயது வரம்பு:
பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 30 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Engine Driver ஊதிய விவரம்:
இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் Pay Matrix Level 1, 2 மற்றும் 4 அளவில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ரூ.10,000/- ஊதியத்தில் புதிய வேலைவாய்ப்பு!
Indian Coast Guard தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் மதிப்பெண்களின் அடிப்படையில், சான்றிதழ் சரிபார்ப்பின் மூலம் / Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 02.10.2023 மற்றும் 17.10.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.