மிஸ்டு கால் மூலம் சிலிண்டர் பெறலாமா? – என்ன வழிமுறைகள்!

0
மிஸ்டு கால் மூலம் சிலிண்டர் பெறலாமா? - என்ன வழிமுறைகள்!
மிஸ்டு கால் மூலம் சிலிண்டர் பெறலாமா? - என்ன வழிமுறைகள்!
மிஸ்டு கால் மூலம் சிலிண்டர் பெறலாமா? – என்ன வழிமுறைகள்!

சிலிண்டர் எரிவாயுவிற்கான புதிய இணைப்பை ஒரே ஒரு மிஸ்டு கால் மூலம் பயனர்கள் பெற்றுக் கொள்ளும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சிலிண்டர் எரிவாயு:

நாட்டில் உள்ள அனைத்து குடும்பத்தினரும் கேஸ் சிலிண்டர் எரிவாயு பயன்படுத்த உதவி செய்யும் வகையில் மத்திய அரசு பல்வேறு திட்டங்களையும் இதற்காக செயல்படுத்தி வருகிறது. மேலும் கேஸ் நிறுவனங்களும் புதிய இணைப்பு பெறுவதற்கான வழிமுறைகளை மிகவும் எளிதாக்கியுள்ளது. அந்த வகையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் இண்டேன் எரிவாயு இணைப்பை ஒரே ஒரு மிஸ்டு கால் மூலம் பயனர்கள் பெற்றுக் கொள்ளலாம். முன்னதாக இதற்காக கேஸ் சிலிண்டர் அலுவலகத்திற்கு சென்று இதற்காக விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். அதன் பிறகு சில தினங்கள் கழித்து சிலிண்டர் புத்தகமும், ரெகுலேட்டரும் வழங்கப்படும்.

உலக கோப்பை போட்டி: இலங்கை சொதப்பல் பேட்டிங்.. ஆஸ்திரேலியாவுக்கு 210 ரன்கள் இலக்கு…!

ஆனால் தற்போது இன்னும் இதற்கான வழிமுறைகள் எளிதாக்கப்பட்டுள்ளது. 8454955555 என்ற எண்ணிற்கு டயல் செய்து மிஸ்டு கால் கொடுத்தால் உங்கள் வீட்டிற்கு புதிய சிலிண்டர் இணைப்பு வழங்கப்படும். மிஸ்டு கால் கொடுத்தவுடன் உங்கள் மொபைல் எண்ணுக்கு ஒரு எஸ்எம்எஸ் வரும். அதில் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தேவையான விவரங்களை வழங்க வேண்டும். இதன் பின்னர் கேஸ் சிலிண்டர் நிறுவனத்தில் இருந்து உங்களை தொடர்பு கொண்டு உங்களுக்கான இன்டேன் சிலிண்டரை வழங்குவார்கள். மிஸ்டு கால் மூலம் புதிய சிலிண்டரை பெறும் வசதி நாடு முழுவதும் படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

Follow our Instagram for more Latest Updates

Follow our Twitter Page for More Latest News Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!