உலக கோப்பை போட்டி: இலங்கை சொதப்பல் பேட்டிங்.. ஆஸ்திரேலியாவுக்கு 210 ரன்கள் இலக்கு…!
உலக கோப்பை தொடரின் 14 வது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா அணிக்கு 210 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது இலங்கை.
ஆஸ்திரேலியா அசத்தல் :
2023 உலக கோப்பை தொடர் கடந்த அக்டோபர் 5ம் தேதி முதல் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று அத்தொடரின் 12வது லீக் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் விளையாடிய இலங்கை அணியில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாத்தும் நிஸ்ஸங்க மற்றும் குசல் பெரேரா அதிரடியாக விளையாடி அசத்தினர்.
வலம் வரும் AI தொழில்நுட்பம் – IT துறையில் அதிகரிக்கும் பணி நீக்கம்.. காரணம் என்ன?
ஆனாலும் அடுத்த வந்த பேட்ஸ்மேன்கள் தங்களது விக்கெட்களை விரைவிலேயே பறி கொடுத்தால் இலங்கை அணி 43.3 ஓவர் முடிவில் 209 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. ஆஸ்திரேலிய அணி சார்பில் ஆடம் ஜம்பா 4 விக்கெட்டும், பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து 210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணி விளையாடி வருகிறது.