ENG vs IND 4வது டெஸ்ட் – நடுவர் முடிவை ஏற்க மறுத்த கேஎல் ராகுல்! அபராதம் விதிப்பு!

0
ENG vs IND 4வது டெஸ்ட் - நடுவர் முடிவை ஏற்க மறுத்த கேஎல் ராகுல்! அபராதம் விதிப்பு!
ENG vs IND 4வது டெஸ்ட் - நடுவர் முடிவை ஏற்க மறுத்த கேஎல் ராகுல்! அபராதம் விதிப்பு!
ENG vs IND 4வது டெஸ்ட் – நடுவர் முடிவை ஏற்க மறுத்த கேஎல் ராகுல்! அபராதம் விதிப்பு!

இந்தியா, இங்கிலாந்து அணிகள் இடையேயான 4வது டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடுவரின் முடிவை ஏற்க மறுத்த இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் கேஎல் ராகுலுக்கு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

டெஸ்ட் போட்டிகள்:

இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள இந்திய டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் 3 போட்டிகள் நிறைவடைந்து உள்ள நிலையில் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமநிலையில் உள்ளது. இதனையடுத்து 4வது டெஸ்ட் போட்டி செப்.2ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியின் 2வது இன்னிங்சில் நடுவரின் முடிவில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதற்காக இந்திய தொடக்க வீரர் கேஎல் ராகுலுக்கு 15 சதவீதம் போட்டி சம்பளத்தில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தெரிவித்துள்ளது.

Tokyo Paralympics – இந்தியாவிற்கு மேலும் ஒரு தங்கம்! கிருஷ்ணா நாகர் வெற்றி!

கேஎல் ராகுல் 46 ரன்களில் பேட்டிங் செய்தபோது, ​​ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்துவீச்சில் ஜானி பேர்ஸ்டோவிடம் கேட்ச் கொடுத்தார். இதற்கு நடுவர் ஆரம்பத்தில் நாட் அவுட் கொடுத்தார், ஆனால் இங்கிலாந்து ரிவியூ எடுத்ததால் நடுவரின் அசல் முடிவு தலைகீழானது. இந்த முடிவினால் கேஎல் ராகுல் அதிர்ச்சி அடைந்தார். சர்வதேச போட்டியின் போது நடுவரின் முடிவில் கருத்து வேறுபாடு காட்டுவது தொடர்பாக ஐசிசி நடத்தை விதியினை ராகுல் மீறியது உறுதியானது. இந்த குற்றச்சாட்டுகளை ராகுல் ஏற்றுக் கொண்டதால் முறையான விசாரணை தேவையில்லை என்று கிரிக்கெட் நிர்வாக குழு தெரிவித்துள்ளது. இதனால் அபராதம் மட்டும் விதிக்கப்பட்டு உள்ளது.

TNPSC & UPSC போட்டித் தேர்வுக்கு தயாராகுவோர் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு!

இப்போட்டியில் 4 வது நாளுக்கு முன்னதாக இந்தியா அணி 171 ரன்கள் முன்னிலை பெற்றது. தற்போது ஆட்டம் மீண்டும் தொடங்கி உள்ள நிலையில் விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா கிரீஸில் உள்ளனர். ஒரு சதம் மற்றும் மற்றொரு அரைசதத்துடன், கேஎல் ராகுல் இந்தத் தொடரில் 42.85 சராசரியுடன் 315 ரன்கள் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!