சமூக பாதுகாப்பு திட்டங்களுக்கான ஓய்வூதியம் உயர்வு – அமைச்சரவை ஒப்புதல்!

0
சமூக பாதுகாப்பு திட்டங்களுக்கான ஓய்வூதியம் உயர்வு - அமைச்சரவை ஒப்புதல்!

மாநிலத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் 14 வகையான சமூக பாதுகாப்பு ஓய்வூதிய திட்டங்கள் குறித்து அமைச்சரவையில் ஒப்புதல் தற்போது வெளியாகி உள்ளது.

ஓய்வூதிய உயர்வு:

ஹரியானா மாநிலத்தில் 14 வகையான சமூக பாதுகாப்பு ஓய்வூதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டங்களுக்கான தொகை உயர்த்தப்படுவதாக அரசு அறிவித்திருந்தது. இதற்கான ஒப்புதல் குறித்து அமைச்சரவையில் விவாதம் செய்யப்பட்டதை தொடர்ந்து நேற்று அமைச்சரவையில் ஓய்வூதிய உயர்வுக்காக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டங்களின் மூலமாக மொத்தம் சுமார் 31.40 லட்சம் பயனாளிகள் பயனடைவார்கள். உயர்த்தப்பட்ட ஓய்வூதியமானது ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வந்து, பிப்ரவரி மாதம் முதல் செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதிய திட்டம், லாட்டனி சமூக உதவி திட்டம், ஹரியானா குள்ள நபர்கள் உதவித்தொகை திட்டம், அயோன்ஸ் திட்டம், விதவைகள் மற்றும் திருமணம் ஆகாத நபர்களுக்கு நிதி உதவி, வயது முதிர்ந்தவர்களுக்கான நிதி உதவி, அரிதான நோயால் தாக்கப்பட்டவர்கள் போன்ற நபர்களுக்கு வழங்கப்பட்டு வரும் உதவித்தொகை ரூபாய் 2750 இல் இருந்து தற்போது ரூ.3000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு ரூபாய் 2400 ஆகவும், ஆதரவற்ற குழந்தைகளுக்கு ரூபாய் 2100 ஆகவும், காஷ்மீரி குடிபெயர்ந்து ஒரு திட்டத்திற்கு ரூபாய் 1500 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!