இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 8,586 பேருக்கு தொற்று உறுதி – மத்திய சுகாதாரத்துறை ஷாக் ரிப்போர்ட்!

0
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 8,586 பேருக்கு தொற்று உறுதி - மத்திய சுகாதாரத்துறை ஷாக் ரிப்போர்ட்!
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 8,586 பேருக்கு தொற்று உறுதி - மத்திய சுகாதாரத்துறை ஷாக் ரிப்போர்ட்!
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 8,586 பேருக்கு தொற்று உறுதி – மத்திய சுகாதாரத்துறை ஷாக் ரிப்போர்ட்!

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 8,586 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. அத்துடன் பலி எண்ணிக்கை மற்றும் சிகிச்சை பெறுவோர் குறித்த விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு:

இந்தியாவில் கொரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு பணிகள் மேற்கொண்ட போதிலும் இன்னும் தொற்று முழுமையாக குறையவில்லை. தற்போது வரை பாதிப்புகள் இருந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் நேற்று ஒரே நாளில் மட்டும் நாடு முழுவதும் சுமார் 8,586 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,43,57,546ஆக உயர்ந்துள்ளது. நாளுக்கு நாள் அதிகரிக்கும் பாதிப்புகள் மீண்டும் ஊரடங்கு நிலைக்கு கொண்டு செல்லுமோ என்று அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதனை தொடர்ந்து புதிதாக 84 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை நேற்றை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நாட்டின் மொத்த பலி எண்ணிக்கை 5,27,416ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் கடந்த மாதங்களை ஒப்பிடும் போது குணமடைந்தோர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது சற்று ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது. தற்போது மொத்தம் 4,37,33,624 பேர் தொற்றில் இருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனர். அதனால் குணமடைந்தோர் விகிதம் 98.59% ஆக உள்ளது.

தமிழகத்தில் பொறியியல் மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டங்கள் – அண்ணா பல்கலை வெளியீடு!

மேலும் சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.22% ஆக குறைந்துள்ளது. தற்போது குணமடைந்தோர் விகிதம் அதிகரிப்பதற்கு காரணம் கொரோனா தடுப்பூசிகளே ஆகும். அதனால் பொதுமக்கள் அலட்சியம் காட்டாமல் விரைந்து 2 டோஸ் கொரோனா தடுப்பூசிகளை செலுத்தி கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தி வருகிறது. அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு இரு தவணை கொரோனா தடுப்பூசி மற்றும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்தி கொள்ள வேண்டும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here