முக்கிய திட்டங்கள் – மார்ச் 2019

0

முக்கிய திட்டங்கள் – மார்ச் 2019

இங்கு மார்ச் மாதத்தின் முக்கிய திட்டங்கள் பற்றிய விவரங்களை வழங்கியுள்ளோம். இது அனைத்து வகையான போட்டித்தேர்வுகளுக்கும் முக்கியமான விவரங்கள் ஆகும். இதை படித்தால் UPSC, TNPSC, SSC, RRB தேர்வுகளில் பொது அறிவு – நடப்பு நிகழ்வுகள் பிரிவில் கேட்க படும் கேள்விகளுக்கு எளிதில் பதில் அளிக்கலாம்.

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் – மார்ச் 2019
மார்ச் மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Quiz PDF Download

இளம் அறிவியலாளர் நிகழ்ச்சித்திட்டம்

  • இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் “இளம் அறிவியலாளர் நிகழ்ச்சித்திட்டம்” “யுவா விஞ்ஞானி கார்யக்ரம்” என்றழைக்கப்படும் பள்ளி சிறுவர்களுக்கான ஒரு சிறப்புத் திட்டத்தை இந்த ஆண்டு தொடங்கியுள்ளது. விண்வெளி தொழில்நுட்பம், விண்வெளி அறிவியல் மற்றும் விண்வெளி பயன்பாடுகள் ஆகியவற்றில் அடிப்படை அறிவை வழங்குவதன் மூலம், சிறுவர்களுக்கு விண்வெளி நடவடிக்கைகளில் வளரும் வயதில் ஆர்வத்தை வளர்ப்பது இதன் நோக்கம் ஆகும்.

ஒருதேசம், ஒரு கார்டு

  • பிரதமர் அகமதாபாத்தில் ஒருதேசம், ஒரு கார்டு-ஐ அறிமுகப்படுத்தினார், இதன்மூலம் நாடு முழுவதும் ஒரே கார்டு மூலம் அனைத்து மெட்ரோ மற்றும் இதர போக்குவரத்து அமைப்புகளிலும் பயன்படுத்திக்கொள்ளலாம். தேசிய பொது மொபிலிட்டி கார்டு, NCMC- இந்தியாவின் முதல் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கட்டணம் செலுத்தம் தளம்

வேளாண் பொருட்களின் போக்குவரத்து, சந்தைப்படுத்துதல் ஆகியவற்றிற்கான நிதியுதவி வழங்க திட்டம்

  • ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் உள்ள சில நாடுகளுக்கு விவசாயப் பொருட்களின் ஏற்றுமதியை அதிகரிக்கும் நோக்கில், வேளாண் பொருட்களின் போக்குவரத்து மற்றும் விற்பனைக்கான நிதி உதவி வழங்கும் திட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.
  • போக்குவரத்து மற்றும் சந்தைப்படுத்துதல் உதவித் திட்டத்தின் கீழ், அரசாங்கம் சரக்குக் கட்டணங்களின் ஒரு குறிப்பிட்ட பகுதியை திருப்பிச் செலுத்தி விவசாய விளைபொருட்களின் விற்பனைக்கு உதவி வழங்கும்.
  • இந்த ஆண்டு மார்ச் 1 முதல் மார்ச் 2020 வரை செய்யும் ஏற்றுமதிகளுக்கு இந்தச் சலுகை உண்டு.

இந்தியா குளிர்ச்சி நடவடிக்கை திட்டம்

  • உலகில் முதல் நாடாக ஒரு விரிவான குளிர்ச்சி நடவடிக்கை திட்டத்தை வரையறுத்துள்ளது, இது ஒரு நீண்ட கால பார்வை கொண்டது, இது பல்வேறு துறைகளில் உள்ள குளிர்விக்கும் தேவையை பூர்த்தி செய்வதற்கும், குளிரூட்டும் கோரிக்கைகளை குறைக்க உதவும் செயல்களை பட்டியலிடும். சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் காலநிலை மாற்றத்திற்கான மத்திய அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்தன் இந்தியா குளிர்ச்சி நடவடிக்கை திட்டத்தை (ஐ.சி.ஏ.பி) துவக்கி வைத்தார்.

ஜன் அவ்ஷதி திட்டம்

  • ஜன் அவ்ஷதி திட்டத்தின் கீழ், மலிவான விலையில் தரமான மருந்துகளை அரசாங்கம் வழங்கியுள்ளது, பொது மக்களுக்கு ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சேமிப்புக்கு வழிவகுத்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

ஸ்டார் மதிப்பீட்டு திட்டம்

  • மைக்ரோவேவ் ஓவன்கள் மற்றும் வாஷிங் மெஷின்களுக்கான ஸ்டார் மதிப்பீட்டு திட்டம் தொடங்கப்பட்டது; இதன் மூலம் 2030ம் ஆண்டளவில் 3.0 பில்லியன் யூனிட்களை சேமிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • தேசிய எரிசக்தி திறன் மூலோபாயம் திட்டம் 2031 – UNNATEE (தேசிய எரிசக்தி ஆற்றல் திறன் நிகழும் தன்மை) தொடங்கப்பட்டது.

“மாதவிடாய் சுகாதாரம் மேலாண்மை திட்டம்“

  • இந்தியாவின் ஸ்டீல் ஆணையத்தின் கீழ், ஹரியானாவில் உள்ள நுஹ் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து, கார்ப்பரேட் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் “மாதவிடாய் சுகாதாரம் மேலாண்மை திட்டத்தை” ஆதரவு அளிக்கிறது.

PDF Download

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whatsapp குரூப்பில் சேர – கிளிக்செய்யவும்
Telegram Channel ல் சேர – கிளிக்செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!