டெலிகிராம் (Telegram) பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு – குரூப் வீடியோ கால் அறிமுகம்!

0
டெலிகிராம் (Telegram) பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு - குரூப் வீடியோ கால் அறிமுகம்!
டெலிகிராம் (Telegram) பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு - குரூப் வீடியோ கால் அறிமுகம்!
டெலிகிராம் (Telegram) பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு – குரூப் வீடியோ கால் அறிமுகம்!

டெலிகிராம் நிறுவனம் தனது பயனர்களை கவரும் வகையில் குரூப் வீடியோ கால் செய்யும் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் டெலிகிராமில் க்ரூப் வீடியோ அழைப்பை மேற்கொள்ளும் வழிமுறைகளையும் விளக்கியுள்ளது.

வீடியோ கால் அழைப்பு:

இன்ஸ்டா, வாட்ஸ்அப், ட்விட்டர், டெலிகிராம் போன்ற சமூக வலைத்தளங்கள் தகவல் தொடர்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் வசதிக்கேற்ப அவ்வப்போது புதிய வசதிகளை அறிமுகப்படுத்துகிறது. சமீபத்தில் வாட்ஸ் ஆப் நிறுவனம் தனியுரிமைக் கொள்கையை அகற்றி வணிகமாக்க முற்பட்டது. இதன் விளைவால் பலரும் வாட்ஸ் அப்பை தவிர்த்து டெலிகிராம் செயலியை பயன்படுத்தினர். டெலிகிராம் செயலி அதிக வரவேற்பை பெற்றது. நாளுக்கு நாள் பயனாளர்களும் அதிகமாகினர்.

Jio சிம் பயனர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – புதிய ரீசார்ஜ் சலுகை திட்டம் அறிமுகம்!

இதனால் இந்த நிறுவனம் புதிய வசதிகளை அறிமுகப்படுத்தும் நோக்கில் கடந்த ஏப்ரல் மாதம் மற்ற ஆப்களை போல டெலிகிராமிலும் வீடியோ கால் வசதி அறிமுகப்படுத்தப்படும் என அறிவித்தது. மேலும் திரை பகிர்வு மற்றும் சத்தம் கட்டுப்படுத்துதல் போன்ற பிற புதிய வசதிகளையும் கொண்டு வந்துள்ளது. இந்த க்ரூப் வீடியோ அழைப்புகள் ஒரு தனி சாளரத்தில் திறக்கப்படும் அதனை தொடர்ந்து அனிமேஷன் பின்னணிகள், செய்தி அனிமேஷன்கள் போன்றவற்றை டெலிகிராம் சேர்க்கிறது. இந்த அம்சங்களை கொண்டு பங்கேற்பாளர்களின் பட்டியலுடன் வீடியோ கிரிட், பிளவு திரை காட்சியில் வீடியோ அழைப்புகள் தோன்றும்.

முழு ஊரடங்கு ஜூலை 10ம் தேதி வரை நீட்டிப்பு – நாளை முதல் தளர்வுகள் அமல்!

மேலும் அதிகமான மாணவர்கள் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளின் விளைவாக பள்ளிகளிலிருந்து விலகி இருப்பதாகவும், இந்த தருணத்தில் கல்வி சார்ந்த தேவைகளுக்காகவும் தொழில் நிறுவனங்களுக்காகவும் வீடியோ கால் சேவை அறிமுகப்படுத்தபட்டதாக டெலிகிராம் நிறுவனம் கூறுகிறது. மேலும் மக்கள் தங்கள் சொந்த ஸ்டிக்கர்களை உருவாக்கி அவற்றை ஒரே கிளிக்கில் பயன்படுத்தவும் டெலிகிராம் அனுமதிக்கிறது. இந்த புதிய அம்சங்களுடன் டெலிகிராம் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. டெலிகிராம் செயலியை அப்டேட் செய்வது மூலம் புதிய வசதிகளை பெற முடியும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!