9ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கை – அரசாணை வெளியீடு!
தமிழகத்தில் கொரோனா அச்சம் காரணமாக 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து 9 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று தமிழக அரசு உத்தரவிட்டு அதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது.
பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கை:
தமிழகத்தில் கொரோனா அச்சம் காரணமாக 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி பெறுவார்கள் என்று தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில் உயர் கல்வியில் எந்த மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்பது குறித்த ஆலோசனையை கல்வித்துறை செய்து வருகிறது. இதற்கு மத்தியில் தமிழகத்தில் சில தினங்களுக்கு முன்பு பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கியது.
TN Job “FB
Group” Join Now
உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் அதற்கான இணையத்தை தொடங்கி வைத்தார். இந்நிலையில் 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு எவ்வாறு பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்பதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது, 2021-22 ஆம் கல்வி ஆண்டில் கொரோனா பெருந்தொற்றை கருத்தில் கொண்டு அரசு பலவகை தொழில்நுட்ப கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை இணையதளம் வாயிலாக மேற்கொள்ள அனுமதி வழங்கியது.
டெலிகிராம் (Telegram) பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு – குரூப் வீடியோ கால் அறிமுகம்!
தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு கல்வித்தகுதி மற்றும் மதிப்பெண் அடிப்படையில் முதலாம் ஆண்டு பட்டய படிப்பு மாணவர் சேர்க்கை நடைமுறையில் இருந்து வருகிறது. இந்நிலையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் உயர்கல்வித்துறை செயலாளர் மற்றும் தொழில்நுட்ப கல்வி இயக்கக அலுவலர்களுடன் கலந்து கொண்ட கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் இதுவரை பலவகை தொழில்நுட்ப கல்லூரிகளில் முதலாம் ஆண்டு பட்டய படிப்பில் சேர்வதற்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி என்று நிலையில், 2020-21 ஆம் கல்வியாண்டில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கைவிடப்பட்டதை தொடர்ந்து 9 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் பட்டய படிப்பு மாணவர்கள் சேர்கை செய்து கொள்ளலாம் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.