முக்கியமான நிகழ்வுகள் செப்டம்பர் – 17

0

ஈ. வெ. இராமசாமி

பெரியார் என்று பரவலாக அறியப்படும் ஈ. வெ. இராமசாமி (இயற்பெயர்: ஈ. வெ. இராமசாமி நாயக்கர், ஆங்கிலம்:E. V. Ramasamy, செப்டம்பர் 17, 1879 – திசம்பர் 24, 1973) சமூக சீர்திருத்தத்திற்காகவும், சாதி வேற்றுமையினை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் போராடியவர். தமிழகத்தின் மிக முக்கியமான இயக்கமாகக் கருதப்படும் திராவிடர் கழகத்தினைத் தோற்றுவித்தவர்[1]. இவருடைய சுயமரியாதை இயக்கமும், பகுத்தறிவுவாதமும் மிகவும் புகழ்பெற்றது. இவர் வசதியான, முற்பட்ட சாதியாகக் கருதப்பட்ட நாயக்கர் என்ற சமூகத்தில் பிறந்திருந்தும், சாதிக் கொடுமை, தீண்டாமை, மூடநம்பிக்கை, வர்ணாஸ்ரம தர்மம் கடைப்பிடிக்கும் பார்ப்பனியம், பெண்களைத் தாழ்வாகக் கருதும் மனநிலை போன்றவற்றை எதிர்த்து மக்களுக்காகக் குரல் கொடுத்தார். இம்மனநிலை வளரக் காரணமானவை மக்களிடையே இருக்கும் மூடநம்பிக்கையும், அந்த மூடநம்பிக்கைக்குக் காரணமாக இருக்கும் கடவுள் நம்பிக்கையும், கடவுள் பெயரால் உருவான சமயங்களும் தான் என்பதை கருத்தில் கொண்டு ஈ.வெ.ரா, தீவிர இறைமறுப்பாளாராக இருந்தார். இந்திய ஆரியர்களால், தென்னிந்தியாவின் பழம்பெருமை வாய்ந்த திராவிடர்கள் பார்ப்பனரால்லாதார் என்ற ஒரு காரணத்தினால் புறக்கணிக்கப்படுவதையும், அவர்களால் திராவிடர்களின் வாழ்வுச் சுரண்டப்படுவதையும் இராமசாமி எதிர்த்தார்.

நரேந்திர மோதி

நரேந்திர தாமோதரதாசு மோதி (Narendra Dāmodardās Modī, குசராத்தி  பரவலாக நரேந்திர மோடி), (பி. செப்டம்பர் 17, 1950) இந்தியப் பிரதமர் ஆவார். பாரதிய ஜனதா கட்சியின்முக்கிய அரசியல்வாதிகளில் ஒருவர். இவர் அக்டோபர் 7, 2001 முதல் மே, 2014 வரை குசராத்துமாநிலத்தின் முதல்வராக பதவி வகித்தவர்.

குசராத்தின் முதல்வர்

அப்போதைய முதல்வர் கேசுபாய் படேல் பதவி விலகியதை அடுத்து நடந்த இடைத் தேர்தலில் நரேந்திர தாமோதர்தாசு மோதி வெற்றிபெற்று அக்டோபர் 7, 2001 ல் குசராத்தின் முதல்வர் ஆனார். இவர் தன் பதவிக்காலத்தை அக்டோபர் 7, 2001 தொடங்கி சூலை, 2007 வரை இருந்தார். பின் திசம்பர் 23, 2007 தேர்தலில் மறுபடியும் வெற்றிபெற்று ஆட்சியை தொடர்ந்தார். இவர் தொடர்ந்து 2063 நாட்கள் முதல்வர் பதவியில் இருந்து குசராத்து வரலாற்றில் சாதனை படைத்துள்ளார்.

இந்தியப் பிரதமர்

மே 26, 2014 அன்று பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார். அவருடன் ஏனைய 44 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். புது தில்லியிலுள்ள குடியரசுத் தலைவர் மாளிகையின் வெளிமுற்றத்தில் பதவியேற்பு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, நரேந்திர மோடி மற்றும் அவரது அமைச்சரவை உறுப்பினர்களுக்கு பதவிப் பிரமாணமும், இரகசிய காப்புப் பிரமாணமும்

To Follow  Channel –கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!