முக்கியமான நிகழ்வுகள் அக்டோபர் – 04

0

முக்கியமான நிகழ்வுகள் அக்டோபர் – 04

சுப்பிரமணிய சிவா பிறந்த தினம் 

பிறப்பு:

 • சுப்பிரமணிய சிவா 4 அக்டோபர் 1884 ஆம் ஆண்டு பிறந்தார்.  இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஆவார்.

 • அரசியலையும், ஆன்மீகத்தையும் இணைத்து விடுதலைக்காகப் போராடியவர். தமிழகத்தின் ஏராளமான மக்களுக்கு விடுதலைத் தாகம் ஏற்படச்செய்த சிறந்த மேடைப்பேச்சாளர் மற்றும் சிறந்த இதழாளர். 1913-இல் ‘ஞானபாநு’ இதழை நடத்தியவர்.
 • விடுதலைப்போராட்ட வீரர் வ. உ. சிதம்பரனாருடனும் மகாகவி பாரதியாருடனும் நெருங்கிப்பழகியவர். இவர் ‘வீரமுரசு’ எனப் புகழப்பட்டார்.

எழுதிய நூல்கள்:

 1. மோட்ச சாதனை ரகசியம்
 2. ஸ்ரீ ஸ்வாமி விவேகானந்தர் ஆத்மஞான ரகசியம்
 3. அருள் மொழிகள்
 4. வேதாந்த ரகஸ்யம்
 5. ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ச வைபவம்
 6. ஞானாம்ருதமென்னும் பிரஹ்மானந்த சம்பாஷணை
 7. சச்சிதானந்த சிவம்
 8. பகவத்கீதா சங்கிலகம்
 9. சங்கர விஜயம்
 10. ராமானுஜ விஜயம்
 11. சிவாஜி (நாடகம்)
 12. தேசிங்குராஜன் (நாடகம்)
 13. நளின சுந்தரி (அ) நாகரிகத்தின் தடபுடல் (கதை)

இறப்பு: 

 • பாரதமாதா கோயில் திருப்பணிக்காக நிதி சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்ட நிலையில், உடல்நிலை மிக மோசமடைந்ததால் மதுரையிலிருந்து, பாப்பாரப்பட்டியை 22.7.1925 இல் வந்தடைந்தார். 23.7.1925 வியாழக்கிழமை காலை ஐந்து மணிக்கு, தம்முடைய 41ஆவது வயதில் சிவா மறைந்தார்.

திருப்பூர் குமரன் பிறந்த தினம் 

பிறப்பு:

 • திருப்பூர் குமரன் அக்டோபர் 4, 1904 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலையில்பிறந்தார்.

 • இந்திய விடுதலைப் போராட்ட தியாகி ஆவார்.
 • 1932 ஆம் ஆண்டு சட்ட மறுப்பு இயக்கம் மீண்டும் தொடங்கிய போது தமிழகம் முழுவதும் அறப்போராட்டம் பரவிய நேரத்தில் திருப்பூரில் தேசபந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள் அச்சமயம் ஏற்பாடு செய்த மறியல் போராட்டத்தில் தீவிரமாகப் பங்குகொண்டு, 1932 சனவரி 10 ஆம் தேதியன்று கையில் தேசியக் கொடியினை ஏந்தி, தொண்டர் படைக்குத் தலைமை ஏற்று, அணிவகுத்துச் சென்றபோது காவலர்களால் தாக்கப்பட்டு தடியடிபட்டு மண்டை பிளந்து கையில் இந்திய தேசியக் கொடியை ஏந்தியபடி மயங்கி விழுந்தார்.
 • பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சனவரி 11 இல் உயிர் துறந்தார். இதனால் இவர் கொடிகாத்த குமரன் என்றும் அழைக்கப்படுகிறார்.

நினைவகம்:

 • தமிழ்நாடு அரசு திருப்பூர் குமரன் தியாகத்தைப் போற்றும் வகையில் திருப்பூரில் திருப்பூர் குமரன் நினைவகம் ஒன்றை அமைத்துள்ளது. இங்கு தற்காலிக நூல் நிலையம் உள்ளது. படிப்பகம் ஒன்று செயல்பட்டு வருகின்றது. மேலும் இந்தியச் சுதந்திரப் போராட்ட வீரர்களின் படங்கள் வரைந்து பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

இறப்பு:

 • சனவரி 11, 1932 ஆம் ஆண்டு மறைந்தார்.

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here