முக்கியமான நிகழ்வுகள் அக்டோபர் – 01

0

முக்கியமான நிகழ்வுகள் அக்டோபர் – 01

அனைத்துலக முதியோர் நாள்

ஐக்கிய நாடுகள் அவை அறிவித்துள்ளபடி சர்வதேச முதியோர் தினம் (International Day of Older Persons) உலகம் முழுவதும் அக்டோபர் 1 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.அக்டோபர் 1, 1991 இல் இருந்து இந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

நோக்கம்

உலகம் முழுவதிலும் உள்ள மூத்த குடிமக்களை மதிக்கவும், மரியாதையை செலுத்தவும், குடும்பம், சமூகம் மற்றும் நாட்டுக்கு அவர்கள் ஆற்றிய சேவைகளை நினைவு கூறும் வகையிலும், அவர்களின் அறிவு, ஆற்றல் மற்றும் சாதனைகளை பார்த்துக் கற்றுக்கொள்ளவும் மக்களுக்கு எடுத்துரைக்கும் நாளாக காணப்படுகிறது.

முதியோர் நலன்

பொதுவாக 60 வயதை கடந்த ஆண், பெண் அனைவரும் மூத்த குடிமக்கள் அல்லது முதியோர் என்று கருதப்படுகின்றனர். அவர்கள் நலனை பாதுகாக்கவும், அவகளின் உரிமைகளை மதிக்கவும் அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

உலக குடியிருப்பு தினம் இன்று

உலக குடியிருப்பு தினம் இன்று அனுஷ்டிக்கப்படும் நிலையில் நாட்டிலுள்ள சுமார் 12 லட்சம் குடும்பங்களுக்கு வீடு தேவை என தேசிய வீடமைப்பு அதிகார அதிகார சபை ​தெரிவித்துள்ளது.

இதனைக்கருத்திற் கொண்டு ஒவ்வொரு வருடமும் சுமார் 50 லட்சம் வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்கவுள்ளதாக தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தலைவர் லக்விஜய சாகர பலன்சூரிய தெரிவித்தார்.

1986 ஆம் ஆண்டு தொடக்கம் ஒக்டோபர் மாதம் வருகின்ற முதலாவது திங்கட்கிழமையை உலக குடியிருப்பு தினமாக ஐக்கிய நாடுகள் அமைப்பு பிரகடனப்படுத்தியுள்ளது.

குடியிருப்பு தினத்தை முன்னிட்டு மாளிகாவத்தை வீடமைப்பு திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்படவுள்ளதுடன் குடியிருப்பு தின நிகழ்வுகளும் இன்று நடைபெறவுள்ளது.

சுதந்திர பூமியில் அனைவரும் என்ற தொனிப்பொருளில் இம்முறை குடியிருப்பு தினம் கொண்டாடப்படுவதாக தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தலைவர் லக்விஜய சாகர பல்சூரிய குறிப்பிட்டார்.

இதேவேளை, குடியிருப்பு தினத்தை முன்னிட்டு கொழும்பு நகரில் வீட்டுரிமை கிடைக்கப்பெற்ற சுமார் ஆயிரம் குடும்பங்களுக்கு உறுதிப்பத்திரம் வழங்கப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

To Follow  Channel –கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!