முக்கியமான நிகழ்வுகள் மே-7

0

இரவீந்திரநாத் தாகூர் பிறந்த தினம்

பிறப்பு:

  • மே 7, 1861ல் பிறந்தார்.
Rabindranath_Tagore
See page for author [Public domain], via Wikimedia Commons

சிறப்பு:

  • புகழ் பெற்ற வங்காள மொழிக் கவிஞர், தத்துவஞானி, இசையமைப்பாளர், எழுத்தாளர், மற்றும் ஒரு கல்வியாளர்.
  • விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தை நிறுவிய ரவீந்திரநாத் தாகூர் அவர்கள், பிரபலமாக ‘குருதேவ்’ என்றும் அழைக்கப்பட்டார்.
  • அவரது பிரபலமான இசைதட்டுகள் அனைத்தும் ‘ரவீந்திரசங்கீத்’ என்ற பேரில் அழைக்கப்பட்டன.
  • இவர் இயற்றிய ரவீந்திரசங்கீத் நியதியிலுள்ள இரண்டு பாடல்களான “ஜன கண மன” மற்றும் “அமர் சோனார்”, இந்தியா மற்றும் வங்காளத்தின் தேசிய கீதங்களாக உள்ளது.
  • 1877ஆம் ஆண்டில் இவரது முதல் சிறுகதையும், நாடகமும் வெளிவந்தன.

விருதுகள்:

  • 1913ல், அவரது கவிதைத் தொகுப்பான ‘கீதாஞ்சலி’ என்ற படைப்புக்காக நோபல் பரிசு வென்று ஆசியாவில் முதல் நோபல் பரிசு பெற்றவர் என்ற பெருமையைத் தட்டிச் சென்றவர்.
  • ஆங்கிலேய அரசரான கிங் ஜார்ஜ்.V அவர்களால் ‘வீரத்திருமகன்’ என்ற பட்டம் இவருக்கு வழங்கப்பட்டது.
By Cherishsantosh [CC BY-SA 4.0 (https://creativecommons.org/licenses/by-sa/4.0)], from Wikimedia Commons

இறப்பு:

  • ஆகஸ்ட் 7, 1941 ல் இறந்தார்.

உலக தடகள தினம்

  • தட கள விளையாட்டுக்கள் (Athletics) எனப்படுவது தடகள மைதானத்தில் இடம்பெறும் ஓடுதல், எறிதல்,நடத்தல், தாண்டுதல் போன்ற செயற்திறன்களை உள்ளடக்கிய பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் ஆகும்.
  • பெரும்பாலான இவ்விளையாட்டுக்கள் மிக எளிமையானவை.மனிதரின் உடல் வலிமையை, தாங்குதிறனை, வேகத்தை, சுறுசுறுப்பை, ஒருங்கியக்கத்தை இவை சோதிக்கின்றன. இது பெரும்பாலும் தனிநபருக்கானப் போட்டியாக உள்ளது.
  • ஒருங்கிணைக்கப்பட்ட முறையில் இப்போட்டிகள் நடத்தப்படுவது கிமு 776இல் தொன்மைய ஒலிம்பிக் காலத்திலிருந்தே அறியப்படுகிறது.
  • இந்த விளையாட்டுக்கள் ஒலிம்பிக் போட்டிகளிலும் மாற்றுத் திறனாளர் ஒலிம்பிக் விளையாட்டுக்களிலிலும் முக்கிய பங்கை வகிக்கின்றன.
© Marie-Lan Nguyen / Wikimedia Commons

வகைகள்:

  • ஓடுதல்
  • பாய்தல்/தாண்டுதல்
  • எறிதல்

அனைத்து முக்கிய நாட்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!