முக்கியமான நிகழ்வுகள் மே-13

0

முக்கியமான நிகழ்வுகள் மே-13

பக்ருதின் அலி அகமது பிறந்த தினம்

பிறப்பு:

  • 13 மே 1905ல் பிறந்தார்.

சிறப்பு:

  • இந்தியாவின் ஐந்தாவது குடியரசுத் தலைவராக 1974 முதல் 1977ல் இறக்கும் வரை பதவியில் இருந்தவர்.
  • கேம்பிரிச் பல்கலைகழகத்தில் சட்டம் பயின்ற இவர் 1928ல் லாகூர் உயர் நீதிமன்றத்தில் பயிற்சி எடுத்தார்.
  • 1925ம் ஆண்டு லண்டனில் ஜவஹர்லால் நேருவை சந்தித்த இவர் இந்திய தேசிய காங்கிரசில் இணைந்தார்.இந்திய விடுதலை இயக்கத்தில் இணைந்த இவர் தீவிரமாக பணியாற்றினார்.
  • 1942ல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்றமைக்காக  மூன்றரை  (3 1/2) ஆண்டு சிறைத்தண்டனை பெற்றார்.
  • சுதந்திரத்திற்குப் பின் இந்தியாவில் 1952 முதல் 1953 ராஜ்ய சபாவிற்காக தேர்ந்தெடுக்கப்பட்டார்.பின்னர் அசாம் அரசின் அட்வகேட் ஜெனரலாகவும் பணியாற்றினார்.
  • 1936 முதல் அசாம் பிரதேச காங்கிரஸ் கமிட்டியில் உறுப்பினராகவும்,1947 முதல் 1974 வரை பல்வேறு பொறுப்புகளை வகித்தவர்.
  • இவர் கோபிநாத் போர்டோலாய் தலைமையிலான அமைச்சரவையில் நிதி அமைச்சராகவும்,வருவாய் மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சராகவும் பணியாற்றினார்.
  • நடுவண் அமைச்சரவையில் பல முக்கிய பொறுப்புகளை வகித்த இவர் குறிப்பாக உணவு மற்றும் வேளாண்மைத் துறை, கூட்டுறவு, தொழிலாளர் நலத்துறை, கல்வித்துறை மற்றும் நிறுவன சட்டங்கள் போன்ற துறைகளுக்கான அமைச்சராக பணியாற்றினார்.
  • 1967ம் ஆண்டு அகில இந்திய மட்டைப்பந்துசங்கத்தின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 பட்டங்கள்:

  • 1975ம் ஆண்டு யுகோஸ்லாவியா சென்ற போது அங்குள்ள கொசோவோ நகரின் பிரிஸ்டினியா பல்கலைகழகத்தினர் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கினர்.

இறப்பு:

  •  11 பிப்ரவரி 1977ல் இறந்தார்.

தாராபாரதி நினைவு தினம்

பிறப்பு:

  • 26 பிப்ரவரி 1947ல் பிறந்தார்.

இயற்பெயர்: ராதாகிருஷ்ணன்

ஊர்: குவளை -திருவண்ணாமலை மாவட்டம்

பெற்றோர்: துரைசாமி-புஷ்பம் அம்மாள்.

சிறப்பு :

  •  தமிழகத்தை சேர்ந்த ஆசிரியர் மற்றும் கவிஞர் ஆவார்.
  • 34 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றியவர்.
  • ஆசிரியர் சேவைக்காக தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்றவர்.
  • கவிஞாயிறு என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார்.
  • தமிழ்நாடு அரசு 2010 – 2011ல் இவரது நூல்களை நாட்டுடைமை ஆக்கியுள்ளது.

நூல்கள்:

  1. புதிய விடியல்கள்
  2. இது எங்கள் கிழக்கு
  3. திண்ணையை இடித்துத் தெருவாக்கு (புதுக்கவிதை)
  4. விரல்நுனி வெளிச்சங்கள்
  5. பூமியைத் திறக்கும் பொன்சாவி
  6. இன்னொரு சிகரம்
  7. கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள்

இறப்பு:

  • 13 மே 2000ல் இறந்தார்.

அனைத்து முக்கிய நாட்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!