முக்கியமான நிகழ்வுகள் ஜூன்-24

0

உலக இளம் மருத்துவர்கள் தினம்

  • உலக இளம் மருத்துவர்கள் தினம் ஜூன் 24ம் தேதி கொண்டாடப்படுகிறது.
  • மாறிவரும் சமுதாயத்தில் இளம் மருத்துவர்கள் எதிர்கொள்ள வேண்டிய பிரச்சினைகள் அதிகம் உள்ளது.
  • இவர்கள் கிராமப்புறங்களில் சேவை செய்ய வேண்டி இருக்கிறது.ஆகவே இளம் மருத்துவர்கள் அடிப்படை சட்ட அறிவினைப் பெற்றிருக்க வேண்டியது அவசியம்.
  • இதுபோன்ற விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும் என்கிற நோக்கில் 2011ம் ஆண்டில் இத்தினம் அறிவிக்கப்பட்டது.

கவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம்

பிறப்பு:

  • ஜூன் 24,1927ல் தமிழ்நாடு, சிறுகூடல்பட்டியில் தன வணிகர் மரபில் பிறந்தார்

இயற்பெயர்: முத்தையா

By Sagaya Swetha.N.Joseph [CC BY-SA 4.0 (https://creativecommons.org/licenses/by-sa/4.0)], from Wikimedia Commons

சிறப்புகள்:

  • புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார்.
  • நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள் பல எழுதியவர்.
  • சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல் திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர்.
  • தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர்.
  • சாகித்ய அகாதமி விருது (சேரமான் காதலி படைப்பிற்காக)பெற்றவர்.
  • கம்பரின் செய்யுளிலும், பாரதியாரின் பாடல்களிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்.
  • இவர் பாரதியாரை மானசீகக் குருவாகக் கொண்டவர்.

மணிமண்டபம்:

  • தமிழ்நாடு அரசு கண்ணதாசன் நினைவைப் போற்றும் வகையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் புதிய பேருந்து நிலையம் அருகில் கவியரசு கண்ணதாசன் மணிமண்டபம் அமைத்துள்ளது.
  • இரண்டு தளங்களைக் கொண்ட இம்மணிமண்டபத்தில் கவியரசு கண்ணதாசன் மார்பளவு சிலை அமைக்கப்பட்டு உள்ளது.
  • மேல்தளத்தில் அரங்கமும், கீழ்தளத்தில் 2400 நூல்களுடன் ஒரு நூலகமும் இயங்கி வருகின்றது.
  • கவியரசு கண்ணதாசன் அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.

நூல்கள்:

  • மாங்கனி
  • பெரும்பயணம்(1955)
  • பாண்டிமாதேவி
  • ஸ்ரீகிருஷ்ண கவசம்
  • கவிதாஞ்சலி
  • அதைவிட ரகசியம்
  • எனது வசந்த காலங்கள்
  • குடும்பசுகம்
  • எண்ணங்கள்

இறப்பு:

  • அக்டோபர் 17,1981ல் இறந்தார்.

எம். எஸ். விஸ்வநாதன் பிறந்த தினம்

பிறப்பு:

  • 24 ஜூன் 1928ல் கேரளாவின் பாலக்காட்டுக்கு அருகிலுள்ள  எலப்புள்ளி என்ற கிராமத்தில் பிறந்தார்.
By Kannanshanmugam,shanmugam studio,Kollam [CC BY-SA 3.0 (https://creativecommons.org/licenses/by-sa/3.0)], from Wikimedia Commons

சிறப்புகள்:

  • தமிழ்த் திரைப்படவுலகில் புகழ்பெற்று விளங்கிய இசையமைப்பாளர் ஆவார்.
  • தமிழ், மலையாளம், கன்னட மொழிகளில் சுமார் 1700 திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார் மற்றும் தெலுங்கு இந்தி மொழிப் படங்களுக்கும் இசையமைத்துள்ளார்.
  • இவர் இசையின் மீது கொண்ட நாட்டத்தால் அங்கு கருநாடக இசையை நீலகண்ட பாகவதரிடம் பயின்று 13​வது வயதிலேயே மேடைக் கச்சேரி நிகழ்த்தினார்.
  • கண்ணகி, காதல் மன்னன், காதலா காதலா போன்ற 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

விருதுகள்

  • இசைப்பேரறிஞர் விருது – 2003
  • கலைமாமணி விருது
  • மதிப்புறு முனைவர் பட்டங்கள் – 2
  • 1963ம் ஆண்டு சூன் மாதம் 16ம் தேதி  சிவாஜி கணேசனால் விசுவநாதன் இராமமூர்த்திக்கு மெல்லிசை மன்னர்கள் என்று பட்டம் வழங்கப்பட்டது.
By Kumarrajendran at en.wikipedia [Public domain], from Wikimedia Commons

இறப்பு:

  • 14 ஜூலை 2015ல் இறந்தார்.

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!