முக்கியமான நிகழ்வுகள் ஜனவரி – 8

0

முக்கியமான நிகழ்வுகள் ஜனவரி – 8

ஸ்டீவன் ஹாக்கிங் பிறந்த தினம் 

பிறப்பு: ஜனவரி 8 , 1942

ஆங்கிலேய கோட்பாட்டு அறிவியலாளரும், அண்டவியலாளரும், நூலாசிரியரும் ஆவார். இவர் கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தின் கோட்பாட்டு அண்டவியல் மையத்தின் இயக்குநராகப் பணியாற்றினார்.

 • இவர் உரோசர் பென்ரோசுடன் இணைந்து பொதுச் சார்புக் கோட்பாட்டில் புவியீர்ப்பு அருநிலைத் தேற்றங்களை நிறுவியமை, ஆக்கிங்கு கதிரியக்கம் என அழைக்கப்படும் கருந்துளைகளின்கதிர்வீச்சு உமிழ்தலை எதிர்வுகூறியமை போன்ற அறிவியல் ஆய்வுகளுக்காகப் பெரிதும் அறியப்படுகிறார்.

 • இவரே முதன் முதலில் அண்டவியலுக்கான கோட்பாட்டை உருவாக்கி, பொதுச் சார்புக் கோட்பாடு, குவாண்டம் இயங்கியல் ஆகியவற்றின் மூலம் விளங்கப்படுத்தினார்.
 • 1942 சனவரி 8 இல் இங்கிலாந்து, ஆக்சுபோர்டு நகரில் பிராங்கு (1905–1986), இசபெல் ஆக்கிங்கு (1915–2013) ஆகியோருக்கு,கலீலியோ கலிலியின் 300வது நினைவு நாளில் பிறந்தார். ஆக்கிங்கின் தாயார் இசுக்கொட்லாந்தைச் சேர்ந்தவர்.

மறைவு:

 • இவர் 2018 மார்ச் 14 இல் தனது 76-வது அகவையில் காலமானார்.

கலீலியோ கலிலி நினைவு தினம் 

பிறப்பு: 15 பிப்ரவரி, 1564

ஓர் இத்தாலிய இயற்பியலாளர், கணிதவியலாளர், வானியல் வல்லுநர், பொறியாளர், மற்றும் மெய்யியலாளர் ஆவார். இவர் பதினேழாம் நூற்றாண்டின் அறிவியல் புரட்சியில் மிக முதன்மையான பங்கை ஆற்றியுள்ளார்.

 • கலீலியோ “நோக்கு வானியலின் தந்தை”, “நவீன இயற்பியலின் தந்தை”,”நவீன அறிவியலின் தந்தை” என்று பலவாறாக பெருமையுடன் அழைக்கப்படுகிறார்.
 • தொலைநோக்கி மூலம் வெள்ளியின் வெவ்வேறு முகங்களை உறுதி செய்தல், வியாழனின் நான்கு பெரிய நிலாக்களை (அவரது புகழைச் சொல்லும் வகையில் கலிலியின் நிலவுகள் என்று அழைக்கப்படுகின்றன) கண்டுபிடித்தல், சூரியப்புள்ளிகளைநோக்குதல் மற்றும் ஆராய்தல் ஆகியவை நோக்கு வானியலுக்கு இவர் அளித்த பெரிய பங்களிப்புகள் ஆகும்.
 • கலீலியோ பயனுறு அறிவியலிலும் தொழில் நுட்பத்திலும் ஈடுபட்டு, மேம்படுத்தப்பட்ட இராணுவ திசைகாட்டி உட்பட பல்வேறு கருவிகளைக் கண்டுபிடித்துள்ளார்.

மறைவு:

 • சூரியனை மையமாகக் கொண்டு புவியும் மற்ற கிரகங்களும் சுற்றுகிறது என்ற கிறித்தவ சமய நம்பிக்கைகளுக்கு எதிரான உண்மையை மக்களிடையே வெளிப்படுத்தியமைக்காக 1642 முதல் இறக்கும் வரை கத்தோலிக்க திருச்சபையால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.
 • பின்னர் இவர் காய்ச்சலும் இதய குலைவும் கண்டு 1642 ஜனவரி 8 இல் தன் 77 ஆம் அகவையில் இறந்தார்.

நிகழ்வுகள்

 • 1973 – சோவியத் விண்கப்பல் லூனா 21 விண்ணுக்கு ஏவப்பட்டது.
 • 1995 – தமிழீழ விடுதலைப் புலிகள் – சந்திரிகா அரசு போர் நிறுத்தம் ஆரம்பமாகியது.

பிறப்புகள்

 • 1823 – ஆல்ஃவிரடு அரசல் வாலேசு, உவெல்சிய-ஆங்கிலேய புவியியலாளர், உயிரியலாளர் (இ. 1913)
 • 1847 – ம. க. வேற்பிள்ளை, ஈழத்து உரையாசிரியர், தமிழறிஞர், பதிப்பாசிரியர் (இ. 1930)
 • 1867 – எமிலி கிரீன் பால்ச், அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அமெரிக்க எழுத்தாளர் (இ. 1961)
 • 1928 – மா. செங்குட்டுவன், தமிழகக் கவிஞர், எழுத்தாளர், இதழாளர்.

இறப்புகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here