முக்கியமான நிகழ்வுகள் ஜனவரி-21

0

முக்கியமான நிகழ்வுகள் ஜனவரி-21

ராஷ் பிஹாரி போஸ் நினைவு தினம்

பிறப்பு:

  • மே 25, 1886ல் பிறந்தார்.
See page for author [Public domain], via Wikimedia Commons

சிறப்பு:

  • பிரிட்டிஷ் அரசுக்கு எதிராகப் புரட்சி செய்த இந்தியர். இந்திய விடுதலைப் போராட்ட வீரர். வெளிநாட்டில் வாழ்ந்த இந்தியர்கள் இந்திய விடுதலைக்கு உதவும் பொருட்டு தொடங்கிய கதர் கட்சியின் அமைப்பாளர்களில் ஒருவர்.
  • இந்திய தேசியப் படையை நிறுவியவர். ஆசாத் இந்து அரசு அமைத்து போர்ப் படை நடத்திய நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் முன்னோடியாவார்.
  • மலாயா மற்றும் தாய்லாந்தில் இருந்த இந்திய பொதுமக்களின் பிரதிநிதிகளும், இந்தியப் படை அதிகாரிகளும் ஜப்பானியத் தலைமையுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதற்காக டோக்கியோவில் ஒரு மாநாடு நடத்தினர்.1942 மார்ச் 28ம் தேதி முதல் 31ம் தேதி வரை இம்மாநாடு நடந்தது.
  • அதன் தொடர்ச்சியாக ‘இந்திய சுதந்திர லீக்’ என்ற அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது.
  • 1942, ஜூன் 22 ல் பாங்காக்கில் இரண்டாவது மாநாட்டை ராஷ் கூட்டினார்.
  • மலேசியா, சிங்கப்பூர், பர்மா, ஜாவா, போர்னியோ, மணிலா, தாய்லாந்து, ஹாங்காங், ஷாங்காய், மஞ்சூரியா மற்றும் பிரெஞ்ச் இந்தோசீனாவிலிருந்து மொத்தம் 150க்கு மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டார்கள். ராஷ் பிகாரிபோஸ் தலைமை வகித்தார்.
  • இந்திய தேசிய ராணுவத்தை (INA) மோகன் சிங் என்ற தளபதியின் தலைமையில் 1942, செப்டம்பர் 1-ல் அமைத்தார் ராஷ். இதுவே முதல் இந்திய தேசிய இராணுவம் என்று அழைக்கப்படுகிறது. இந்திய தேசிய ராணுவம் மூன்று பிரிவுகளைக் கொண்டிருந்தது. படைப் பிரிவுகளுக்கு காந்தி, நேரு ஆசாத் பெயர்கள் சூட்டப்பட்டன.

விருது:

  • ஜப்பான் அரசு ராஷ் பிகாரி போஸின்  வீரத்தை மெச்சி, அவருக்கு மறைவுக்குப் பின் ‘ORDER OF RISING SUN ‘ என்ற உயர் விருதை வழங்கிச் சிறப்பித்தது.

இறப்பு:

  • ஜனவரி 21, 1945ல் இறந்தார்.

விளாடிமிர் லெனின் நினைவு தினம்

பிறப்பு:

  • ஏப்ரல் 22,1870ல் பிறந்தார்.

இயற்பெயர்: விளாடிமிர் உலியனொவ்

By derivative work: Militaryace (talk)Lenin_CL.jpg: Photograph by Soyuzfoto (Lenin_CL.jpg) [Public domain], via Wikimedia Commons

சிறப்பு:

  • லெனினை உலகப் புரட்சியாளர் என்று அழைக்கிறார்கள். ரஷ்யப் புரட்சிக்கு தலைமை ஏற்று நடத்தியவர்.
  • ரஷ்யாவில் பொதுவுடமை அரசை நிறுவினார்.
  • சோவியத் ஒன்றியத்தின் முதல் அதிபராக பதவி வகித்தார். இவர் பின்னாளில் ஜோசஃப் ஸ்டாலினால் சோவியத் மார்க்சியம் – லெனினியம் என்று விரிவுபடுத்தப்பட்ட லெனினியம் என்ற கோட்பாட்டினை உருவாக்கினார்.
  • “லெனின்” என்பது் ரஷ்யப் புரட்சிக்காக அவர் கொண்டிருந்த புனைபெயர்களில் ஒன்று.
  • தொழிலாளர் விடுதைலை இயக்கம் என்பதை தொடங்கி ரஷ்யாவில் தொழிலாளர்களிடையே காரல் மார்க்ஸின் கொள்கைகளை பரப்புரை செய்தார்.
  • 1895-ல் கைது செய்யப்பட்டு சைபீரியாவிற்கு நாடு கடத்தப்பட்டார். அவர் விடுதலையாகி வந்தது 1900ல் ஸ்பார்க் என்ற பெயரில் நாளிதழ் ஒன்றினை தொடங்கினார்.

இறப்பு:

ஜனவரி 21, 1924ல் இறந்தார்.

அனைத்து முக்கிய நாட்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!