முக்கியமான நிகழ்வுகள் ஆகஸ்ட் – 15

0

இந்திய சுதந்திர தினம்

இந்திய சுதந்திர தினம் அல்லது இந்திய விடுதலை நாள் ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 15 ம் தேதி கொண்டாடப்படுகிறது. 1947 ஆகஸ்ட் 15ல் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுதலை அடைந்து தனி சுதந்திர நாடானதை குறிக்கும் இந்த நாள் அரசு விடுமுறையாகும். இந்த நாளில் நாடு முழுவதும் தேசியக்கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்படும்.

இந்த நாளில் இந்தியப் பிரதமர் தில்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார். அப்போது சுதந்திர போராட்ட தியாகிகள் நினைவுகூரப்பட்டு மரியாதை செலுத்தப்படுவர். பிரதமர் சென்ற ஆண்டு நாடு அடைந்த வளர்ச்சியையும், வரும் ஆண்டுக்கான குறிக்கோள்களையும் நாட்டு மக்களுக்கு அறிவிப்பார்.

ஒவ்வொரு மாநிலத் தலைநகரத்திலும் மாநில முதலமைச்சர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதுடன் நலத்திட்ட உதவிகளையும் வழங்குவர். இதுபோல் மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சித் தலைவர்களும், அரசு அலுவலகங்களில் அதன் உயரதிகாரிகளும், பள்ளி, கல்லூரிகளில் தலைமை ஆசிரியர்/முதல்வர் அல்லது சிறப்பு விருந்தினராக அழைக்கப் பெற்றவர்கள் கொடியேற்றி வைத்து சிறப்புரையாற்றுவர்.

மகாதேவ தேசாய்

மகாதேவ தேசாய் (Mahadev Desai) (பிறப்பு: 1 சனவரி 1892: இறப்பு: 15 ஆகஸ்டு 1942) இந்திய விடுதலை போராட்டவீரரும், மகாத்மா காந்தியின் நேர்முகச் செயலாளரும் ஆவார்.

1917 இல் மகாத்மா காந்தியின் பால் ஈர்க்கப்பட்ட மகாதேவ தேசாய், தனது மனைவியுடன், காந்தியின் சபர்மதி ஆசிரமத்தில் சேர்ந்து, சம்பரண் மற்றும் கேடா சத்தியாகிரகப் போராட்டங்களில் கலந்து கொண்டார். 13 நவம்பர் 1917 முதல் 14 ஆகஸ்டு 1942 முடிய, தான் இறக்கும் வரை மகாத்மா காந்தியுடனான தனது வாழ்க்கையை நாட்குறிப்பாக எழுதி வந்தார். 1919இல் காந்தி பிரித்தானிய இந்திய அரசால் கைது செய்யப்பட்டு, பஞ்சாப் சிறையில் அடைத்தபோது, மகாதேவ தேசாயை தனது வாரிசாகக் குறித்திருந்தார். காந்தியின் நேர்முகச் செயலாராக 25 ஆண்டுகள் வரை, தம் மரணம் வரை பணியாற்றிவர் மகாதேவ தேசாய்.

சிறப்பு நாள்

  • விடுதலை நாள் (தென் கொரியா, வடகொரியா, 1945-இல் சப்பானிடம் இருந்து)
  • விடுதலை நாள் (கொங்கோ குடியரசு, 1960-இல் பிரான்சிடமிருந்து)

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!