முக்கியமான நிகழ்வுகள் ஏப்ரல்-29

1

பாரதிதாசன் பிறந்த தினம்

பிறப்பு:

 • ஏப்ரல் 29, 1891 ல் பிறந்தார்.

இயற்பெயர்: சுப்புரத்தினம்.

See page for author [Public domain or Public domain], via Wikimedia Commons

சிறப்பு:

 • சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால் பாரதிதாசன் என்று தம் பெயரை மாற்றிக்கொண்டார்.
 • அவர் 20ம் நூற்றாண்டு தமிழ் கவிஞர் மற்றும் எழுத்தாளர் பகுத்தறிவாளராக இருந்தார்.அவரின் இலக்கிய படைப்புக்கள் பெரும்பாலும் சமூக-அரசியல் பிரச்சினைகளை கையாண்டன.
 • பாரதிதாசன் தம் எழுச்சி மிக்க எழுத்தால் புரட்சிக் கவிஞர் என்றும் பாவேந்தர் என்றும்  அழைக்கப்படுபவர்.
 • புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராக 1954ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பாரதிதாசன் எழுதிய புகழ் பெற்ற சில வரிகள்:

 • “எங்கள் திருநாட்டில் எங்கள் நல்லாட்சியே”
 • புதியதோர் உலகம் செய்வோம் கெட்ட
  போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்.
 • தமிழுக்கும் அமுதென்று பேர் – அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்.
 • எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு!

பாரதிதாசன் நூல்களில் சில:

 • அகத்தியன்விட்ட புதுக்கரடி
 • சத்திமுத்தப்புலவர்
 • இன்பக்கடல்
 • இலக்கியக் கோலங்கள்
 • உலகம் உன் உயிர்
 • ஏழைகள் சிரிக்கிறார்கள்
 • கற்கண்டு

விருது:

 • கவிஞருடைய படைப்பான “பிசிராந்தையார்” என்ற நாடக நூலுக்கு 1969 இல் சாகித்ய அகாடமியின் விருது கிடைத்தது.
 • இவருடைய படைப்புகள் தமிழ்நாடு அரசினரால் 1990இல் பொது உடைமையாக்கப்பட்டன.
 • 1946 சூலை 29இல் அறிஞர் அண்ணா அவர்களால் கவிஞர் ‘புரட்சிக்கவி” என்று பாராட்டப்பட்டு ரூ.25,000 வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.

இறப்பு:

 • பாரதிதாசன் 21.4.1964 அன்று காலமானார்.

 சர்வதேச நடன தினம்

 • சர்வதேச நடன தினம் நடனத்தின் உலகளாவிய கொண்டாட்டமாகும்.இது சர்வதேச தியேட்டர் இன்ஸ்டிடியூட் (ITI) நடனக் குழுவால் உருவாக்கப்பட்டது.இது யுனெஸ்கோவின் கலைகளுக்கான முக்கிய பங்காளியாகும்.
By Kamranahmedar [CC BY-SA 4.0 (https://creativecommons.org/licenses/by-sa/4.0)], from Wikimedia Commons
 • நடனக் கலைஞர்களின் சேவையை கௌரவிக்கும் பொருட்டு யுனேஸ்கோ சர்வதேச நடன கவுன்சிலுடன் இணைந்து உலக நடன தினத்தை ஏப்ரல் 29ம் தேதி கொண்டாடி வருகிறது.
 • இது நடனக் கலைஞர் ஜான் ஜார்ஜ் நூவர் என்பவரின் பிறந்த தினம் ஆகும். பிரெஞ்ச் நடனக்கலைஞரான இவர் பாலே நடனக் கலையில் சிறந்து விளங்கியவர்.

2018 கருப்பொருள்:

 • 2018ம் ஆண்டில் சர்வதேச நடன நாளுக்கான கருப்பொருள் -“நடனம் உங்கள் உடலின் ஆன்மாவின் மறைக்கப்பட்ட மொழியாகும்”.

இரசாயன ஆயுதங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உலக தினம்

 • இரசாயன ஆயுதங்களை பயன்படுத்துதல் என்பது மனித குலத்திற்கு எதிரான ஒரு வருந்தத்தக்க குற்றம் என இரசாயன ஆயுதங்கள் தடை அமைப்பு கூறுகிறது.
 • சிரியா இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதால் பலர் உயிர் இழந்தனர்.
 • இரசாயன ஆயுதங்களால் உயிர் இழந்தவர்களை நினைவு கூறுவதற்காக 1997ல் இருந்து இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

அனைத்து முக்கிய நாட்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

For Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Facebookகிளிக் செய்யவும்
To Join Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe Youtube Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here