தமிழக ரேஷன் கார்டுதாரர்கள் கவனத்திற்கு – வெளியான ஹாப்பி நியூஸ்!!

0
தமிழக ரேஷன் கார்டுதாரர்கள் கவனத்திற்கு - வெளியான ஹாப்பி நியூஸ்!!
தமிழக ரேஷன் கார்டுதாரர்கள் கவனத்திற்கு - வெளியான ஹாப்பி நியூஸ்!!
தமிழக ரேஷன் கார்டுதாரர்கள் கவனத்திற்கு – வெளியான ஹாப்பி நியூஸ்!!

தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் மூலமாக குடிமக்கள் சேவைகளை உறுதி செய்யும் வகையில், ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர்ப்பு முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும். அதன்படி, கடந்த நவம்பர் 2022 மாதத்துக்கான குறைதீர்ப்பு முகாம் எப்போது என்பது குறித்த அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது.

குறைதீர்ப்பு முகாம்

தமிழகத்தில் குடும்ப அட்டை தொடர்பான குறைகளை தீர்ப்பதற்கு குறைதீர்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கடந்த நவம்பர் மாதத்திற்கான குறை தீர்ப்பு முகாம் குறித்து அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி வருகிற ஜனவரி 21ம் தேதி அன்று குறை தீர்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது,

இந்த குறை தீர்ப்பு முகாம் சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெற உள்ளது. இந்த குறைதீர்ப்பு முகாம் மூலமாக குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம், பெயர் நீக்கம், கைப்பேசி எண் பதிவு மற்றும் மாற்றம் செய்தல் மற்றும் புதிய குடும்ப அட்டை மற்றும் நகல் குடும்ப அட்டை கோரும் மனுக்களைப் பதிவு செய்தல் ஆகியவை மேற்கொள்ளலாம்.

மக்கள் கவனத்திற்கு: டெபாசிட் தாரர்கள் இறந்துவிட்டால் கிளைம் செய்ய வேண்டுமா? புதிய வழிகாட்டுதல் வெளியீடு!!

அத்துடன் ரேஷன் கடைகளில் பொருட்களை நேரில் சென்று வாங்க முடியாத மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு அங்கீகாரச் சான்று வழங்கப்படுகிறது. மேலும் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்களில் ஏதேனும் குறைகள் இருப்பின் அதனை தெரிவிக்கலாம். இந்த முகாம் மூலமாக உடனடியாக தீர்வு கிடைக்கும்.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!