உடனடியாக 8 லட்சம் வரை கடன் பெரும் வசதி – பிரபல வங்கியின் அதிரடி அறிவிப்பு!

0
உடனடியாக 8 லட்சம் வரை கடன் பெரும் வசதி - பிரபல வங்கியின் அதிரடி அறிவிப்பு!
உடனடியாக 8 லட்சம் வரை கடன் பெரும் வசதி - பிரபல வங்கியின் அதிரடி அறிவிப்பு!
உடனடியாக 8 லட்சம் வரை கடன் பெரும் வசதி – பிரபல வங்கியின் அதிரடி அறிவிப்பு!

இந்தியாவின் பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி ரூ.8 லட்சம் வரை உடனடி கடன் வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. கடன் பெறும் வாடிக்கையாளர்கள் ஆதார் நம்பர் மற்றும் மொபைல் நம்பரைப் பதிவிட வேண்டும்.

கடன் திட்டம்:

இந்தியாவில் அரசு மற்றும் பொதுத்துறை வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு ஏற்ப பல்வேறு கடன் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் மிக பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ தங்களது வாடிக்கையாளர்களுக்கு வாகன கடன், வீட்டுக்கடன், நகைக்கடன், தனிநபர் கடன், போன்ற கடன்களை வழங்கி வருகிறது. எஸ்பிஐ வங்கி மட்டுமில்லாது அனைத்து வங்கிகளும் இத்தகைய கடன்களை வழங்குகிறது. ஒவ்வொரு வங்கிகளுக்கும் கடன் திட்டங்களின் வட்டி விகிதங்கள் மாறுபடும். மேலும் அவ்வப்போது வட்டி விதங்களில் வங்கிகள் மாற்றங்களை செய்யும்.

அந்த வகையில் அண்மையில் கனரா வங்கி பிக்சட் டெபாசிட் திட்டத்தில் வட்டியில் சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. அதன்படி குறைந்தபட்ச வட்டி 2.90 சதவீதமாகவும், அதிகபட்ச வட்டி 5.35% ஆகவும் மாற்றப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து எஸ்பிஐ வங்கி, எச்.டி.எப்.சி வங்கிகளும் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் வட்டி விகிதங்களை மாற்றியது. சில நேரங்களில் வங்கிகள் வட்டி தொகையில் சில சலுகைகளையும் வழங்கும். கடன் பெற எண்ணுபவர்கள் இவ்விதமான சலுகைகளை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

இந்திய ஐடி நிறுவனங்களில் TCS செய்த சாதனை – மகிழ்ச்சியில் ஊழியர்கள்!

பஞ்சாப் நேஷனல் வங்கி ரூ.8 லட்சம் வரை உடனடி கடன் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தில் அரசு அல்லது பொதுத்துறை நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர்கள் இந்த உடனடி கடன் திட்டம் மூலம் ரூ. 8 லட்சம் வரை கடன் பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் ஆதார் நம்பர் மற்றும் மொபைல் நம்பரைப் பதிவிட வேண்டும் என்றும் உடனடி கடன் திட்டத்திற்கு வாடிக்கையாளர்களிடம் செயல்பாட்டு கட்டணம் வசூலிக்கப்படாது என்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி தெரிவித்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!