ICSIL ஆணையத்தில் Law Officer காலிப்பணியிடங்கள் – மாத ஊதியம்: ரூ.50,000/- || உடனே விண்ணப்பியுங்கள்!
இன்டலிஜென்ட் கம்யூனிகேஷன் சிஸ்டம்ஸ் இந்தியா லிமிடெட் (ICSIL) நிறுவனம் ஆனது Law Officer பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Degree of LLB தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | ICSIL |
பணியின் பெயர் | Law Officer |
பணியிடங்கள் | 1 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 27.09.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
ICSIL காலிப்பணியிடங்கள்:
ICSIL வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி Law Officer பணிக்கான ஒரு பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசில் ரூ.35,000/- ஊதியத்தில் வேலை – தேர்வு கிடையாது || நேர்காணல் மட்டுமே!
Law Officer கல்வி தகுதி:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Degree of LLB தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ICSIL வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 45 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Law Officer ஊதிய விவரம்:
இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு ரூ.50,000/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ICSIL தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow our Instagram for more Latest Updates
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 27.09.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.